வியர்வை நாற்றமில்லாமல் எப்போதும் வாசனையாக இருக்கனுமா? இப்டி ட்ரை பண்ணுங்க!!

Posted By: Hari Dharani
Subscribe to Boldsky

எவருமே தன்னிடம், தன்னை சுற்றியிருப்பவர்கள் மோசமான துர்நாற்றம் வீசுவதாக கூறுவதை விரும்பமாட்டார்கள். ஆம், சிலநேரங்களில் ஒருவரது உடல் துர்நாற்றமானது அவர்களைப் பற்றிய கேலிப்பேச்சுக்கு ஆளாக்குகிறது.

அதனால், அவர்கள் நாள்முழுவதும் உடலின் துர்நாற்றம் மறைந்து நல்ல நறுமணம் வீச சில தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

How To Smell Good All Day? Without The Use Of A Perfume

எனவே இந்த தீர்வில்லா சிக்கலை எவ்வாறு கடந்து செல்வது? என்று நீங்கள் கேட்கிறீர்களானால், பதில் மிக எளிமையானதே.

பெரும்பான்மையான மக்கள், வாசனை திரவியங்கள்/டியோக்களே தங்களை உடல் துர்நாற்றத்திலிருந்து காக்கும் முதல் நண்பனாக கருதுகிறார்கள்; ஆனாலும், அது உடல் துர்நாற்றத்தை மறைக்கும் முகமூடியாக செயல்படுவதோடு நாள் முழுதும் நறுமணத்தை நீட்டிப்பதில்லை.

வியர்வை துர்நாற்றமா? இந்த பழத்தை அக்குளில் தேய்த்தால் வியர்வை நாற்றமே வீசாது...!

சுருக்கமாக, எளிதாக விஷயத்தை சொல்வதானால், இன்று நீங்கள் உபயோகிக்கும் வாசனை திரவியங்கள்/ஸ்ப்ரேக்களை தாண்டி உங்கள் உடலில் நல்ல நறுமணத்தை நாள்முழுதும் காக்கும் சில ஒப்பனை பொருட்களின் பட்டியலை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாடி பட்டர் :

பாடி பட்டர் :

பொதுவாக சரும பராமரிப்பு வழக்கங்களில் இவற்றை உபயோகிப்பதில்லை, உயர்ந்த ரக பிராண்டுகளில் உள்ள பாடி பட்டர்களை நீங்கள் உபயோகிப்பதன் மூலம் உடலில் நல்ல நறுமணத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

பாடி பட்டர்கள் பொதுவாக ஷியா(Shea) அல்லது வெள்ளரி, அல்லது ஸ்ட்ராபெர்ரி ஆகிய நறுமணச்சுவைகளில் தான் கிடைக்கும், இது மேலும் நீடித்த பலனை தருகிறது.

 பாடி கிரீம்/லோஷன்/மாய்ஸ்ட்ரைசர்:

பாடி கிரீம்/லோஷன்/மாய்ஸ்ட்ரைசர்:

வாசனை திரவியங்களுக்கு பதிலாக குளிர்காலத்தில் உடலுக்கு நல்ல நறுமணத்தை மீட்டுத்தரும் இன்னொரு சிறந்த பொருள் நல்ல பாடி கிரீம் மட்டுமே.

கோடைகாலமாக இருந்தால் நீங்கள் பாடி லோஷன் அல்லது பாடி மாய்ஸ்ட்ரைசரை உடல் நறுமணத்திற்காக பயன்படுத்தலாம்.

உங்கள் சருமத்தின் தன்மை, கிரீம் அல்லது திரவ லோஷனை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணி என்பதை மறந்துவிடாதீர்கள்.

 பாடி வாஷ்/சோப்பு:

பாடி வாஷ்/சோப்பு:

உங்கள் உடலின் துர்நாற்றத்தை புறந்தள்ளி நறுமணத்தை தக்கவைக்க நீங்கள் செய்யும் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படை காரணி - நீங்கள் குளிப்பதற்கு உபயோகிக்கும் பாடி வாஷ் அல்லது சோப்பு.

நாள்தோறும் மென்மையான சோப்பு அல்லது பாடி வாஷ் கொண்டு குளிப்பது உங்கள் உடலின் நறுமணத்தை தக்கவைக்கும் முயற்சிகளில் ஆரோக்கியமான ஒன்றாகும்.

 டோனர்

டோனர்

முகத்தில் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது என்றாலும், டோனர்கள் நல்ல வாசனையை தருகிறது. உங்கள் முகமும் நல்ல நறுமணத்தோடு இருக்கவேண்டுமல்லவா? டோனர்கள் வெவ்வெறு வித நறுமணச்சுவைகளில் கிடைக்கிறது.

எனவே நீங்கள் ஒவ்வொரு முறையும் புதிய நறுமணத்திற்காக புதிய டோனரை வாங்கி பரிசோதிக்கலாம். எப்போதும் டோனரை வாங்கும் போது பழங்களின் நறுமணச்சுவையுடைத்தாக தேர்ந்தெடுப்பது நல்லது.

 வாசனையான நகப்பூச்சு

வாசனையான நகப்பூச்சு

உங்கள் கைகளின் நறுமணத்திலும் அதிக கவனம் செலுத்துவீர்களானால், நீங்கள் வாசனையுடைய நகப்பூச்சுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. நல்ல மணமுடைய இந்த நகப்பூச்சுகள் பொதுவாக உபயோகிக்கும் நகப்பூச்சுகளை போல இல்லாமல் உங்கள் கைகளுக்கு நல்ல நறுமணத்தை தரும்.

இந்த நகப்பூச்சின் வாசனை ஒருநாளில் மறைந்துவிடாது. இந்த வகையான நகப்பூச்சு நகங்களில் இருக்கும் வரை வாசனை மாறாமலிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Smell Good All Day? Without The Use Of A Perfume

How To Smell Good All Day? Without The Use Of A Perfume