அரும்பு மீசையின் தொல்லை தாங்க முடியலையா? இதோ சூப்பர் டிப்ஸ்!

Written By:
Subscribe to Boldsky

ஆண்களுக்கு வேண்டுமானால் தாடியும் மீசையும் அழகை தருவதாக இருக்கலாம். ஆனால் அதுவே பெண்களுக்கு இருந்து அது முக அழகையும், வசிகரத்தையும் கெடுப்பதாக இருக்கும். முகத்தில் உள்ள முடிகளை நீக்க பல வழிமுறைகள் இருந்தாலும், அவை நிரந்தரமான தீர்வை கொடுக்காது.

how to remove facial hair naturally

மாறாக, முன்னர் இருந்தை விட அதிகமான முடிகள் வளர அதிக வாய்ப்புகள் உள்ளன. மற்ற சிகிச்சைகளை செய்தாலும், அவற்றை தொடர்ந்து செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.

இந்த பகுதியில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க இயற்கையாகவும், அதிக செலவில்லாமலும் என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி மசாஜ் வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

முட்டை

முட்டை

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும்.

நன்றாக காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் சேர்ந்து எளிதில் வந்துவிடும்.

கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள்

அரும்பு மீசைபோல் உள்ள முடிகளை அகற்ற கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன், காய்ச்சாத பால் 2 ஸ்பூன் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும் தினந்தோறும் இதுபோல் செய்து வந்தால் நாளடைவில் முடி உதிர்வதுடன், முடியின் வளர்ச்சி குறையும். மேலும் சருமம் அழகு பெறும்.

எரியூட்டப்பட்ட சாணம்

எரியூட்டப்பட்ட சாணம்

எரியூட்டப்பட்ட சாணத்தின் சாம்பல் 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் ஆகியவை கலந்து முகத்தில் உள்ள ரோமங்கள் மீது தடவ வேண்டும். இப்படி செய்து வருவதால் முடி உதிர்ந்து சருமம் மென்மையாக காணப்படும்.

அளவுக்கு மீறிய வளர்ச்சி

அளவுக்கு மீறிய வளர்ச்சி

பொதுவாக அனைத்து பெண்களில் சுமார் 5-10% பெண்களுக்கு அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி என்பது இருக்கிறது. இதை சரிசெய்யும் உறுதியான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, இதற்கான ஆராய்ச்சி இன்னும் நடந்து வருகிறது.

கடலை மாவு

கடலை மாவு

கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to remove facial hair naturally

how to remove facial hair naturally
Story first published: Saturday, July 29, 2017, 18:44 [IST]