தேன் கொண்டு உங்கள் முகத்தை மெருகேற்ற 4 வழிகள்!!

Written By:
Subscribe to Boldsky

தேன் ஆரோக்கியத்திற்கும் சரி, அழகிற்கும் சரி. பல அற்புதமான நன்மைகளை தருகிறது.

சுருக்கங்களை போக்கவும், மிருதுவான சருமத்திற்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் கூட அதனை பயன்படுத்துகிறோம்.

தேன் எவ்வாறு உபயோகித்தால் சுருக்கமில்லாத சருமம் பெறலாம் என தெரியுமா? இதைப் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் ஸ்க்ரப் :

தேன் ஸ்க்ரப் :

தேவையானவை :

தேன்
ஆலிவ் எண்ணெய்
எலுமிச்சை சாறு
நாட்டு சர்க்கரை

மேல் சொன்ன எல்லாவ்ற்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். வாரம் ஒருமுறை செய்து வந்தால் படிப்படியாக மெருகேறும். சுருக்கங்கள் போக்கி மென்மையான சருமம் கிடைக்கும்.

முட்டை, தேன் :

முட்டை, தேன் :

தேவையானவை :

முட்டையின் மஞ்சள் கரு - 2
தேன் - 2 ஸ்பூன்

முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக கலக்கி அதனுடன் தேனை கலந்து முகத்தில் தடவுங்கள். மிகவும் வறண்டிருக்கும் சருமத்திற்கு நல்ல பலனைத்தரும். அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

ஷியா பட்டர் , தேன்

ஷியா பட்டர் , தேன்

ஷியா பட்டருடன் தேன் கலந்து தலை முதல் கால் வரை தடவி 15 நிமிடம் கழித்து குளியுங்கள். நேரமிருந்தால் தினமும் செய்யலாம். இல்லையென்றால் வாரம் இருமுறை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.

சாக்லேட், தேன் :

சாக்லேட், தேன் :

சாக்லேட்- 6 ஸ்பூன்
தேன் - 2 கப்
க்ரேப் விதை எண்ணெய்- அரை கப்

இந்த மூன்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். அதன்பின் இவற்றை உடல் முழுவதும் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். தேகம் மிருதுவாக மின்னும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to improve your skin tone using honey

Skin care tips to improve your skin tone using honey
Please Wait while comments are loading...
Subscribe Newsletter