கண்களை அழகாய் மாத்தனுமா? இத ட்ரை பண்ணுங்க!!

Written By:
Subscribe to Boldsky

கண்கள்தான் ஓருவரின் விலாசம். நிறம் எதுவாக இருந்தாலும் கண்கள் வசீகரமாக இருந்தால் எல்லாருக்குமே பிடிக்கும்.

How to get beautiful eyes

ஆனால் வயது, சூழ் நிலை காரணமாக கண்கள் பொலிவிழந்து தொய்வ்டைந்துவிடும். மொத்த அழகையும் குளைக்க வைத்துவிடும்.

கண்கள் எப்போதும் புத்துணர்வுடன் இருந்தால் முகத்தில் ஒரு தேஜஸ் உண்டாகும். எவ்வாறு அத்தகைய ஒளியை உண்டாக்கலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நந்தியாவட்டைப் பூ :

நந்தியாவட்டைப் பூ :

இரவு நேரத்தில் கண்களில் நந்தியாவட்டை பூக்களை கட்டிக்கொண்டும் தூங்கலாம். இதனால் கண்கள் புத்துணர்வுடன் இருக்கும். குளிர்ச்சியாகவும் கருவளையம் மறைந்து இளமையாகவும் இருக்கும்.

கண்களுக்கு பயிற்சி :

கண்களுக்கு பயிற்சி :

தலையை திருப்பாமல், கண்களை மட்டும், மேலும் கீழுமாக, அதன் பின் பக்க வாட்டிலும், தினமும் 50 முறையாவது பயிற்சி அளித்தால், கண்களின் மெருகு கூடும்.

கண்ணிற்கான உணவு :

கண்ணிற்கான உணவு :

பொன்னாங்கண்ணி கீரை உணவு, கண்ணுக்கு மிகவும் நல்லது. இவை கண் பார்வை தெளிவு படுத்துவதோடு கண்களில் உண்டாகும் சுருக்கத்தை தடுக்கும். வாரம் ஒருமுறையாவது சேர்த்திடுங்கள்.

கருவளையம் :

கருவளையம் :

கண்களில் கருவளையம் போன்று ஏற்பட்டால், ஜாதிக்காயை அரைத்து இரவில் கரு வளையம் மீது பூசிவிட்டு தூங்குங்கள். காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள். இப்படி செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.

கண் தொய்வடைவதை தடுக்க:

கண் தொய்வடைவதை தடுக்க:

கண்கள் அருகே உள்ள சருமம் மிகவும் மென்மையானது.நேரம் கிடைக்கும் போது இரு பஞ்சுத் துண்டில் பன்னீரை ஊற்றி இரண்டு கண்ணிலும் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் கண்கள் தொய்வடையாமல் பாதுகாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get beautiful eyes

Home remedies to get beautiful eyes
Story first published: Tuesday, March 7, 2017, 10:40 [IST]
Subscribe Newsletter