எடை குறைஞ்ச பின் சருமம் தொங்கி போயிருக்கா? இதை ட்ரை பண்ணுங்க!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

எடை குறைப்பு என்பது இந்த நாட்களில் மிகவும் சகஜமாகி விட்டது. உடல் பருமன் அதிகரித்த இந்நாட்களில், அதனை குறைக்க பல்வேறு வழிகளை பின்பற்றி எடை குறைப்பை செய்து கொள்கின்றனர். இதற்காக பல்வேறு உணவு கட்டுப்பாட்டு முறைகள், சிகிச்சை முறைகள், பயிற்சி முறைகள் போன்றவை மேற்கொள்ள படுகின்றன. பல கட்ட சிகிச்சை அல்லது பயிற்சிக்கு பின்னர், உடல் பருமன் குறைந்து காணப்படுகின்றனர்.

இந்த எடை குறைப்பு ஒரு வகையில் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், மற்றொரு புறம் இதன் பக்க விளைவுகள் அவர்களுக்கு சில சங்கடத்தை தருகிறது. உடல் இளைத்ததால், சருமத்தின் சுருங்கி விரியும் எலாஸ்டிக் தன்மை குறைகிறது. கொலாஜென் உற்பத்தி குறைகிறது.இதன் காரணத்தால் சதை தொங்கி , சருமம் முதிர்ச்சியுடன் காணப்படுகிறது.

Home Remedies To Tighten Your Skin After Weight Loss

இப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கி கொண்டவர்களுக்கான பதிவு தான் இது. எடை குறைப்பில் ஏற்பட்ட சரும தளர்ச்சி மற்றும் வேறு சரும பிரச்சனைகளை கண்டறிந்து மாற்றியமைக்கலாம். வாருங்கள்.

சில வகை வீட்டு தீர்வுகளால் எளிய முறையில் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை அதிகரித்து, கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கலாம். இந்த வகை தீர்வுகள் பல காலமாக சருமத்தை இறுக்கமாக வைக்க உதவுகின்றன. இதனால் உங்கள் இளமை காப்பாற்றப்படுகிறது. இதனை பற்றி தெரிந்து கொள்ள, இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 வைட்டமின் ஈ எண்ணெய்:

வைட்டமின் ஈ எண்ணெய்:

சருமத்தை இறுக்கமாக்குவதற்கு மிக சிறந்த தீர்வு வைட்டமின் ஈ எண்ணெய். எடை குறைப்பிற்கு பிறகு சதைகள் தளர்ந்து விடாமல் வடிவாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன. இந்த தீர்வு பழங்காலம் முதல் வழக்கில் இருந்து வருகிறது.

பயன்படுத்தும் முறை:

வைட்டமின் ஈ மாத்திரைகள் இரண்டை எடுத்துக் கொள்ளவும். அதில் உள்ள எண்ணெய்யை மாத்திரையில் இருந்து வெளியில் எடுத்துக் கொள்ளவும். அதனை சூழல் வடிவில் சருமத்தில் தடவவும். இரவு முழுதும் அப்படியே விடவும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் .

முட்டை:

முட்டை:

சரும தளர்ச்சிக்கு ஒரு சரியான தீர்வு முட்டை. முட்டையில் இருக்கும் வெள்ளை கரு இதற்கு பயன்படுத்தப்படுகிறது. சருமத்திற்கு பல இவ்வித நன்மைகளை செய்கிறது இந்த முட்டையின் வெள்ளை கரு. எடை குறைப்பிற்கு பின் ஏற்படும் சரும மாற்றங்களை முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்தி சரியாக்கலாம்.

பயன்படுத்தும் முறை:

முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக் கொள்ளவும். சதைகள் தொங்கும் இடத்தில் அதனை தடவவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தினம் இதனை செய்து வருவதால் சருமம் விரைவில் இறுக்கமாகும்

ஜோஜோபா எண்ணெய்:

ஜோஜோபா எண்ணெய்:

சருமத்தை திடமாகவும், இறுக்கமாகவும் மாற்ற ஜோஜோபா எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதில் சரும திடத்தை ஏற்படுத்தும் கூறுகள் அடங்கியுள்ளன.

பயன்படுத்தும் முறை:

ஜோஜோபா எண்ணெய்யுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். சதைகள் தொங்கும் இடத்தில் இந்த கலவையை தடவவும். சில நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து தண்ணீரால் அந்த இடத்தை கழுவவும். தினமும் இதனை செய்து வருவதால் சருமம் இறுக்கமாக

பட்டை தூள்:

பட்டை தூள்:

சருமத்தின் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, அதனை மிருதுவாகவும், திடமாகவும் மாற்றும் திறன் லவங்கம் பட்டைக்கு உள்ளது.

பயன்படுத்தும் முறை:

லவங்க பட்டை தூள் ½ ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை தளர்ந்து காணப்படும் சருமத்தில் தடவவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். ஒரு வாரத்தில் 3 முறை இதனை செய்து வருவதால் சருமம் விரைவில் இறுக்கமாகும்.

ஆலிவ் எண்ணெய்:

ஆலிவ் எண்ணெய்:

தற்போது அனைவர் வீட்டிலும் இருக்கும் ஒரு பொருள் ஆலிவ் எண்ணெய். இதை கொண்டு பல வித அழகு குறிப்புகளை மேற்கொள்ளலாம். இது உங்கள் சரும பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.

பயன்படுத்தும் முறை:

ஆலிவ் எண்ணெய்யை 30 வினாடிகள் சூடு செய்யவும். பின்பு அதனை எடுத்து தளர்ந்த சதையில் மென்மையாக மசாஜ் செய்யவும். 1 மணி நேரம் அப்படியே விடவும். பின்பு வெதுவெதுப்பான நீர் கொண்டு அந்த இடத்தை கழுவவும். சரும இறுக்கத்திற்கு இது ஒரு நல்ல தீர்வாகும்.

ஷியா பட்டர்:

ஷியா பட்டர்:

ஷியா பட்டர் கொண்டு உங்கள் சரும தளர்ச்சியை நீக்கி இறுக்கமாக்க முடியும். இதில் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இதனால் சருமம் எளிதில் புத்துணர்ச்சி அடைய முடிகிறது. மேலும் சருமம் திடமாகவும் மாறுகிறது.

பயன்படுத்தும் முறை:

ஷியா பட்டரை சிறிதளவு எடுத்து உருக்கி வைத்து கொள்ளவும். சரும பாதிப்பு உள்ள இடத்தில இந்த பட்டரை தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தினம் ஒரு முறை இதனை செய்து வருவதால் சரும தளர்ச்சி நீங்கி இளமையாக முடியும்.

முல்தானி மீட்டி:

முல்தானி மீட்டி:

சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை அதிகரித்து, கொலாஜென் உற்பத்தியை ஊக்குவிக்க முல்தானி மீட்டி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

1 ஸ்பூன் முல்தானி மீட்டி பவுடர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலக்கவும். இரண்டையும் ஒன்றாக கலந்து சரும பாதிப்பு உள்ள இடத்தில் தடவவும். 20-25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்தில் 3-4 முறை இதனை செய்து வருவதால் விரைவில் சரும தளர்ச்சி நீங்கும்.

கற்றாழை ஜெல்:

கற்றாழை ஜெல்:

பழங்காலம் முதல் சரும தளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் கற்றாழை. கற்றாழை ஜெல் எல்லா வித சரும பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக பார்க்கப்படுகிறது. இது சருமத்தை புத்துணர்ச்சி அடைய செய்து இறுக்கமாக்குகிறது .

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

கற்றாழை ஜெல் 3 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இதனை சதை தளர்ந்து தொங்கும் இடத்தில் தடவவும். இரவு முழுதும் அப்படியே விட்டு, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் கழுவவும். இதனை தினமும் செய்து வரலாம். இதனால் விரைவில் சரும தளர்ச்சி நீங்கும்.

மேலே கூறிய முறைகளை பின்பற்றி சரும தளர்ச்சியை குறைக்கலாம் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies To Tighten Your Skin After Weight Loss

Home Remedies To Tighten Your Skin After Weight Loss
Story first published: Wednesday, November 15, 2017, 18:30 [IST]
Subscribe Newsletter