ஆண்களே! வெயிலால் முகம் கருமையாகாமல் இருக்க, தினமும் இதுல ஒன்னு செய்யுங்க...

Posted By:
Subscribe to Boldsky

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், சரும செல்கள் படு மோசமாக பாதிப்பிற்குள்ளாகி, சருமத்தின் நிறம் நமக்கே தெரியாமல் கருப்பாகிக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் மற்ற காலங்களை விட, கோடைக்காலத்தில் தான் சரும செல்கள் அதிகமாக பாதிக்கப்படும். எனவே இக்காலத்தில் சருமத்திற்கு சற்று அதிக பராமரிப்புக்களை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Home Remedies To Protect Your Skin This Summer

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் சருமம் எப்போதும் ஒருவித எரிச்சலுடன் இருக்கிறது. எனவே கோடையில் சரும பிரச்சனைகள் ஏதும் வராமல் இருக்கவும், சருமம் கருமையாகாமல் இருக்கவும் ஒருசில ஃபேஸ் பேக்குகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதில் ஏதேனும் ஒன்றை தினமும் பின்பற்றி வந்தாலே போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடலை மாவு பேக்

கடலை மாவு பேக்

கடலை மாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, சருமம் கருமையாவதும் தடுக்கப்படும்.

எலுமிச்சை சாறு பேக்

எலுமிச்சை சாறு பேக்

எலுமிச்சை சாறு சரும கருமையைப் போக்க உதவும் பொருட்களுள் சிறந்தது. ஏனெனில் இதில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. ஆகவே எலுமிச்சை சாற்றுடன் சிறிது தேன் அல்லது கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இளநீர் மற்றும் சந்தன பேக்

இளநீர் மற்றும் சந்தன பேக்

சந்தனப் பவுடரில் க்ளின்சிங் தன்மையும், இளநீரில் முகத்தைப் பொலிவாக்கும் உட்பொருட்களும் உள்ளது. ஆகவே இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கலாம்.

மஞ்சள் மற்றும் பால் பேக்

மஞ்சள் மற்றும் பால் பேக்

மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து, வர, சரும செல்கள் நன்கு பாதுகாப்புடனும், சருமம் கருமையாகாமலும் இருக்கும்.

பப்பாளி மற்றும் தேன் பேக்

பப்பாளி மற்றும் தேன் பேக்

பப்பாளியை மசித்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, கை, கால், முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருப்பதோடு, சூரியக்கதிர்களிடமிருந்து பாதுகாப்பாகவும் கருமையாகாமலும் இருக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ் வாட்டர் பேக்

வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ் வாட்டர் பேக்

1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து, முகம், கை, கால்களில் தடவி 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies To Protect Your Skin This Summer

Here are some home remedies to protect your skin this summer. Read on to know more...
Story first published: Monday, February 27, 2017, 11:51 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter