பனிக்காலத்தில் உதடுகளில் வெடிப்பு உண்டாகிறதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

Written By:
Subscribe to Boldsky

உதடுகள் தான் முகத்திற்கு அழகை கொடுக்கின்றன. ஆனால் சிலருக்கு உதடுகள் வறட்சியடைந்தும், கருமையாகவும், கலையிழந்தும் காணப்படும்... இதனால் அவர்களது முகத்தின் தோற்றமே பொலிவிழந்து காணப்படும். உதடுகளில் வறட்சி என்பது பனிக்காலங்களில் அதிகமாக வருகிறது. மற்ற எல்லா காலங்களை விடவும் பனிக்காலத்தில் உதடுகளின் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்த பகுதியில் உதடுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலேடு

பாலேடு

பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெய்

வெண்ணெய்

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.

லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக்

சிலருக்கு தங்கள் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பது மற்றும் அதை போட்டு கொள்வது எப்படி என்று தெரிவதில்லை. உங்களது சரும நிறத்திற்கு ஏற்றது போல லிப்ஸ்டிக்கை உபயோகித்தால் உங்களது முகத்திற்கு அழகு...

கறுப்பாக இருப்பவர்களுக்கு...

கறுப்பாக இருப்பவர்களுக்கு...

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட் டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்களுக்கு..

மாநிறமாக இருப்பவர்களுக்கு..

மாநிறமாக இருப்பவர்கள் நேச்சுரல் கலரில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும். சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.

வெயில் காலத்தில்..

வெயில் காலத்தில்..

வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும். லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர்

லிப் லைனர்

லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

உதடுகள் பெரிதாக தெரிய..

உதடுகள் பெரிதாக தெரிய..

உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும். உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும்.

அழகான உதடுகளுக்கு..

அழகான உதடுகளுக்கு..

பொதுவாக, இந்திய பெண்களின் நிறத்துக்கு மெரூன், பிங்க் மற்றும் பிரவுன் கலர் லிப்ஸ்டிக் அழகாக இருக்கும். கலர் பிடிக்காதவர்கள் நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேற்கூறிய முறைகளை பின்பற்றி வந்தால், அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

home remedies for dry lips

home remedies for dry lips
Story first published: Sunday, November 26, 2017, 11:00 [IST]