சகல சரும பிரச்சனைகளையும் போக்க இந்த 7 பொருட்களை தயார் செய்துகோங்க!!

Written By:
Subscribe to Boldsky

பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் அலர்ஜி உண்டாகிறது. அவை வெளியேறாமல் சரும துளைகளில் தங்கி சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது.

Herbal bathing powder to nourish your skin and get rid of skin allergy

சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது. இவை சருமத்திற்கு போஷாக்கு தர்கின்றன. கிருமிகள் அழுக்குகள் தங்காமல் காக்கப்படுகின்றன

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

சோம்பு 100 கிராம்

வெட்டி வேர் 200 கிராம்

சந்தனத் தூள் 300 கிராம்

கார்போக அரிசி 200 கிராம்

பூலான்கிழங்கு 200 கிராம்

பாசிப்பயறு 500 கிராம்

கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்

செய்முறை :

செய்முறை :

இவைகளை தனித்தனியாக வெயிலில் காயவையுங்கள். பின் ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியாக

அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ஈரம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பூஞ்சை பிடித்துவிடும்.

குளியல் :

குளியல் :

தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் கலந்து தேய்த்து குளியுங்கள். அவ்வாறு குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.

சரும நோய்கள் :

சரும நோய்கள் :

இப்படி தொடர்ந்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும்.

பலன்கள் :

பலன்கள் :

சருமம் அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும். குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு பூசி குளிக்க வைத்தால் உடல் முழுவதும் ரோமங்கள் வருவதை தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Herbal bathing powder to nourish your skin and get rid of skin allergy

Herbal bathing powder to nourish your skin and get rid of skin allergy
Story first published: Friday, February 10, 2017, 14:52 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter