பிறர் கண்டு வியக்கும் அழகை பெற திராட்சையை பயன்படுத்துவது எப்படி?

Written By:
Subscribe to Boldsky

சருமத்தின் ஆரோக்கியம் என்பது சருமத்தில் எந்த ஒரு மாசு மருவும் இல்லாமல், சுருக்கங்கள் இன்றி முகம் பிரகாசமாக இருப்பது தான். சருமத்தின் அழகை கூட்ட பல மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுவது திராட்சை தான். திராட்சையை முகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி நேஷனர் ஸ்கின் கேர் செண்டர் வெளியிட்ட தகவல்களை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

திராட்சை முகத்தில் உள்ள பருக்களை போக்கி முகத்திற்கு பளபளப்பை அளிக்கும் திறன் கொண்டது. இதனை சருமத்தில் நேரடியாகவே பயன்படுத்தலாம்.

இரத்த ஓட்டம் அதிகரிக்க

இரத்த ஓட்டம் அதிகரிக்க

திராட்சையின் விதைகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடியவை. இவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க கூடியவை.

ஈரப்பதம் பாதுகாக்க

ஈரப்பதம் பாதுகாக்க

திராட்சை விதை எண்ணெய்யில் விட்டமின் சி மற்றும் விட்டமின் இ அதிகமாக உள்ளது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சருமத்திற்கு பொலிவை தருகிறது.

திராட்சை மாஸ்க்

திராட்சை மாஸ்க்

திராட்சையை நன்றாக அரைத்து முகத்திற்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம். இந்த திராட்சை விதை மாஸ்க் முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் இருக்க வேண்டியது அவசியம். பின்னர் இதனை சுத்தமான நீரினால் கழுவி விட வேண்டும்.

ஆயில் சருமத்திற்கு

ஆயில் சருமத்திற்கு

எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் கறுப்பு திரட்சையுடன், முல்தாணி மட்டியுடன் கலந்து சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும்.

வறண்ட சருமத்திற்கு

வறண்ட சருமத்திற்கு

வறண்ட சருமம் கொண்டவர்கள் சிறிதளவு திராட்சையை நன்றாக அரைத்து அதனுடன் அவோகேடா மற்றும் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவி விட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

grapes for amazing skin

grapes for amazing skin
Story first published: Monday, September 25, 2017, 16:09 [IST]