For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகத்தில் படியும் கறைகளை அகற்றி சூப்பரான நகங்களை பெற வீட்டு வைத்தியம்!!

By Suganthi Ramachandran
|

பெண்கள் தங்கள் நகங்களுக்கு நெயில் கலரிங் மற்றும் அழகான வடிவமைப்பு கொடுக்க மிகவும் விரும்புவாங்க. ஒரு பிரஞ்சு நகப்பராமரிப்பு முறை என்ன செல்கிறது என்றால் மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு அடர்ந்த நெயில் கலரிங் மற்றும் லேசான ஒப்பனை அழகாக இருக்கும்.

ஒரு ஆரோக்கியமான நகப் பராமரிப்பு முறை என்பது நகங்கள் பொலிவானதாகவும், நெயில் கலரிங் கச்சிதமாகவும் இருக்க வேண்டும். நகங்கள் ஆரோக்கியமாக இருப்பது நம் உடல் நலத்தையும், ஆயுளையும் பிரதிபலிக்கின்றன. அடிக்கடி நகங்களுக்கு நெயில் கலரிங் செய்தல் மற்றும் ரீமுவர் பயன்படுத்துதல் நகங்களை ஆரோக்கியமற்றதாக மாற்றிவிடும்.

DIY At-home Remedies For Yellow Nails

எனவே ஒரு இயற்கையான நகப் பராமரிப்பு முறை மிகவும் அவசியம். பொலிவிழந்த மற்றும் மஞ்சள் கறை படிந்த நகங்கள் உங்கள் தன்னம்பிக்கையை மற்றவர்கள் முன்னிலையில் குறைக்கும். எனவே உங்கள் நகங்களை பராமரிக்க இயற்கையான முறைகளை இக்கட்டுரையில் கூறியுள்ளோம். இதை எந்த விதமான கெமிக்கல்கள் இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தியே செய்யலாம் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 #1 டூத் பேஸ்ட் :

#1 டூத் பேஸ்ட் :

தேவையான பொருட்கள் #1:

வெண்மையாக்கும் டூத் பேஸ்ட்

நெயில் பாலிஷ் ரீமுவர்

நகப் பராமரிப்பு கருவி

செய்முறை #1 :

செய்முறை #1 :

1. முதலில் நெயில் பாலிஷ் ரீமுவரை பயன்படுத்தி நகங்களில் உள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும்.

2. பின்பு பராமரிப்பு கருவி கொண்டு உங்கள் நகங்களை பாலிஷ் செய்ய வேண்டும்.

3. பிறகு நகத்தின் மேல்பகுதி மற்றும் கீழ் பக்கவாட்டு பகுதிகளில் டூத் பேஸ்ட்டை நன்கு தடவி, சின்ன மென்மையான டூத் பிரஷ் கொண்டு நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அப்புறம் நன்றாக கழுவி விட வேண்டும்.

4. இந்த செய்முறையை 10-15 நிமிடங்கள் கழித்து திரும்பவும் செய்து வந்தால் உங்கள் நகங்கள் பளிச்சென்று பொலிவானதாக மாறும்.

#2 பேக்கிங் சோடா:

#2 பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா அதிகமாக அழகு பராமரிப்புக்கு பயன்படுகிறது. இது எந்த விதமான கரையையும் போக்கிடும். எனவே இது நகத்தின் மஞ்சள் கறையை போக்க வல்லது.

தேவையான பொருட்கள் #2 :

2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா

கொஞ்சம் சுடு தண்ணீர்

 செய்முறை #2 :

செய்முறை #2 :

1. முதலில் நெயில் பாலிஷ் ரீமுவரை கொண்டு அழுக்குகளை அகற்றி கொள்ளுங்கள்.

2. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து பேஸ்ட் செய்து நகத்தின் மேல் பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதியில் தடவ வேண்டும்.

3. 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் மஞ்சள் கறைகள் அகன்று உங்கள் நகங்கள் அழகாக மாறி இருப்பதை காணலாம்.

 #3 எலுமிச்சை சாறு :

#3 எலுமிச்சை சாறு :

இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் அது எளிதில் நகக்கறையை போக்க வல்லது.

தேவையான பொருட்கள்#3 :

எலுமிச்சை சாறு

காட்டன் பஞ்சு

 செய்முறை #3 :

செய்முறை #3 :

1. காட்டன் பஞ்சை எலுமிச்சை சாற்றில் நனைத்து நகங்களின் எல்லா பகுதிகளிலும் தடவ வேண்டும்.

2. சில நிமிடங்கள் கழித்து நீரில் கழுவினால் நகங்கள் அழகாக மாறுவதோடு மணமாகவும், மிருதுவாகவும் மாறும்.

#4 லெமன் ஆயில் மற்றும் டீ-ட்ரீ ஆயில் :

#4 லெமன் ஆயில் மற்றும் டீ-ட்ரீ ஆயில் :

தேவையான பொருட்கள் #4:

லெமன் ஆயில்

டீ-ட்ரீ ஆயில்

கொஞ்சம் சுடு தண்ணீர்

செய்முறை #4:

செய்முறை #4:

1. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து அதில் நகங்களை நனைக்க வேண்டும்.

2. சில நிமிடங்களில் லெமன் ஆயிலில் உள்ள சிட்ரிக் அமிலம் நகக் கறைகளையும் மற்றும் டீ-ட்ரீ ஆயில் நகத்தில் உள்ள பூஞ்சை தொற்றையும் நீக்கிடும்.

3. இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றி உங்கள் நகங்களில் உள்ள மஞ்சள் கறையை அகற்றி அழகாகவும் மற்றும் பொலிவானதாகவும் மாற்றுங்கள்.

உங்கள் தன்னம்பிக்கையை மற்றவர்கள் பார்க்கும் வகையில் உயர்த்திக் காட்டுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY At-home Remedies For Yellow Nails

DIY At-home Remedies For Yellow Nails
Desktop Bottom Promotion