For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிட்டதா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!!

இயற்கையான பொருட்களை கொண்டு வயது முதிர்வை கட்டப்படுத்தும் தீர்வுகளை நாம் இப்போது பார்ப்போம் .

By Ambika Saravanan
|

எந்த ஓர் சிகிச்சைக்கும் இயற்கையான தீர்வுகள் ஆபத்தை தராது. குறிப்பாக சரும அழகை பராமரிக்க இரசாயன பொருட்களை பயன்படுத்தும்போது அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள மூலப்பொருட்களினால் பல்வேறு சரும பிரச்சனைகள் தோன்றலாம்.

Different treatments for anti ageing

இயற்கையான பொருட்களை கொண்டு வயது முதிர்வை கட்டப்படுத்தும் தீர்வுகளை நாம் இப்போது பார்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி பால் க்ளென்சர் :

அரிசி பால் க்ளென்சர் :

ஜப்பானியர்கள் சரும பாதுகாப்பில் அரிசியை பயன்படுத்துகின்றனர். அரிசியில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, சருமத்தில் உள்ள இறந்த செல்களை போக்கி, சருமத்திற்கு மென்மையை தருகிறது. இந்த கிளென்சர் செய்ய தண்ணீருக்கு மாற்றாக ரைஸ் மில்க் சேர்க்கப்பட்டுள்ளது. ரைஸ் மில்க்கில் உள்ள வைட்டமின் ஏ சத்தும், கால்சியம் சத்தும் ரெட்டினால் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

பழுப்பு அரிசி மாவு - ¼ கப்

ஆர்கானிக் ரைஸ் மில்க் - 2-3 ஸ்பூன்

பழுப்பு அரிசி மாவுடன் ரைஸ் மில்க்கை சேர்த்து பேஸ்ட்டாக்கவும்.அதனை முகத்தில் தடவி, சிறிது நேரம் நன்றாக சூழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும் . முகத்தை கழுவிய பின் டோனர் அல்லது மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தவும்.

வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை க்ரீம்:

வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை க்ரீம்:

வயது அதிகரிக்கும்போது சருமத்தில் இயற்கையான வறட்சி தோன்றும். சருமத்தை நீர்சத்தோடு வைக்க கற்றாழையை பயன்படுத்தலாம்.

½ கப் கிரீக் யோகர்ட்

¼ கப் வெள்ளரிக்காய் ( துண்டுகளாக நறுக்கியது)

¼ கப் கற்றாழை சதை

½ ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு

மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு இரவு முழுதும் ப்ரிட்ஜில் வைக்கவும். மறுநாள் அதை எடுத்து வடிகட்டி அடர்த்தியான பேஸ்ட்டை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி அதனை பயன்படுத்தவும். வடிகட்டப்பட்ட நீருடன் சிறிது அரிசி மாவு அல்லது பாதாம் மாவை சேர்த்து அதனை ஒரு ஸ்கரப்பாக பயன்படுத்தலாம்.

கிண்ணத்தில் எடுத்து வைத்த விழுதை முகத்தில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி, டோனெரை பயன்ப

ப்ளூபெர்ரி மாஸ்க்:

ப்ளூபெர்ரி மாஸ்க்:

ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்த ப்ளூ பெர்ரி , அத்தியாவசிய கொழுப்பு சத்துகள் நிறைந்த பாதாம் போன்றவற்றை சேர்த்து ஒரு மாஸ்க் செய்வதை பார்க்கலாம். இதனை ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம் .

¼ கப் ப்ளூ பெர்ரி பழங்கள்

¼ கப் பாதாம்

2 ஸ்பூன் ஓட்ஸ்

1 ஸ்பூன் தேன்

1 ஸ்பூன் பால்

தேவையான பால் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக அரைத்து விழுதாக்கி கொள்ளவும். அந்த விழுதை எடுத்து முகத்தில் தடவவும். மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தலாம் .

ப்ளாக்பெர்ரி வால்நட் ஸ்க்ரப்:

ப்ளாக்பெர்ரி வால்நட் ஸ்க்ரப்:

ப்ளாக்பெர்ரியில் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இவற்றிற்கு வயதை குறைக்கும் தன்மை உள்ளது. வால்நட்டில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, சருமத்திற்கு இயற்கையான புத்துணர்ச்சியை தரும்.

½ கப் வால்நட்

½ கப் ப்ளாக் பெர்ரி பழங்கள்

வால்நட் மற்றும் ப்ளாக்பெர்ரியை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரால் முகத்தை கழுவவும்

 அவகேடோ மற்றும் தேங்காய் எண்ணெய்:

அவகேடோ மற்றும் தேங்காய் எண்ணெய்:

வயது முதிர்வை தடுக்க எண்ணெய்யை அதிகமாக பயன்படுத்தலாம். எண்ணெய் கொண்டு உடல் முழுதும் மசாஜ் செய்வதால் ஏற்படும் புத்துணர்ச்சி, சருமத்தை புதுப்பிக்கும்.

¼ கப் அவகேடோ எண்ணெய்

¼ கப் பாதாம் எண்ணெய்

¼ கப் தேங்காய் எண்ணெய்

இந்த எல்லா எண்ணெய்யையும் சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி நன்றாக குலுக்கவும். தினமும் உடல் முழுதும் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும்.

மேலே கூறிய அணைத்து தீர்வுகள் எளிதில் வீட்டில் இருந்தே செய்ய கூடியவையாகும். இதனை முயற்சித்து பயன் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different treatments for anti ageing

Different treatments for anti ageing
Story first published: Tuesday, October 3, 2017, 17:32 [IST]
Desktop Bottom Promotion