Just In
- 13 min ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 1 hr ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைந்த பழனிச்சாமி!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சரும வகைக்கு ஏற்ப கற்றாழையைப் பயன்படுத்துவது எப்படி?
இங்கு சரும வகைக்கு ஏற்ப கற்றாழையைப் பயன்படுத்துவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவான அழகு பராமரிப்பு பொருள் தான் கற்றாழை ஜெல். இந்த கற்றாழை அனைத்து வகையான சரும மற்றும் தலைமுடி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. மேலும் இதில் பாலிசாக்கரைடுகள், லெக்டின்கள், மனன்கள் போன்ற சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய உட்பொருட்கள் உள்ளன.
சரி, இப்போது சரும வகைக்கு ஏற்ப கற்றாழை ஜெல்லை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து காண்போம். அதைப் படித்து தெரிந்து முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.
கற்றாழை - எலுமிச்சை மாஸ்க்
இந்த மாஸ்க் வறட்சியான சருமத்தினருக்கு ஏற்றது. அதற்கு சிறிது கற்றாழை ஜெல்லுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கற்றாழை - ரோஸ் வாட்டர் மாஸ்க்
இந்த மாஸ்க் அதிக வறட்சியைக் கொண்ட சருமத்தினருக்கு ஏற்றது. சிறிது கற்றாழை ஜெல்லுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும்.
கற்றாழை - தேன் மாஸ்க்
இந்த மாஸ்க் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும்.
கற்றாழை - மஞ்சள் - பால் மாஸ்க்
இந்த மாஸ்க் முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல், மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கற்றாழை - வெள்ளரிக்காய் மாஸ்க்
இந்த மாஸ்க் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது. இவர்கள் கற்றாழை ஜெல்லுடன் சிறிது வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
கற்றாழை - ஓட்ஸ் மாஸ்க்
கற்றாழை ஜெல்லுடன், எலுமிச்சை சாறு மற்றும் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடு இருக்கும்.
கற்றாழை - வேப்பிலை மாஸ்க்
இந்த மாஸ்க் பொலிவிழந்து இருக்கும் சருமத்தினருக்கு ஏற்றது. அதற்கு சிறிது கற்றாழை ஜெல்லுடன், வேப்பிலை சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.