முகத்துல கரும்புள்ளிகள் அசிங்கமா தெரியுதா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

நீங்கள் போடும் கண்சீலர் மேக்கப் உங்கள் கரும்புள்ளிகளை முழுவதுமாக மறைக்கிறது என்பதை நம்புகிறீர்களா. கண்டிப்பாக 100 % உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைக்க முடியாது. நிறைய பெண்கள் தங்களது மேக்கப்பை முடித்த பிறகும் கூட திருப்தி இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

கரும்புள்ளிகள் ஏற்படக் முக்கிய காரணம் அதிகமான மெலனின் நிறமி உருவாகுவதே ஆகும். மேலும் அதிகமான சூரிய ஒளி தாக்கத்தாலும், வயதாவதாலும் இந்த கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன.

இந்த கரும்புள்ளிகளை நீக்குவதற்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. லேசர் சிகிச்சை, கெமிக்கல் பீல் செசன்ஸ் போன்று கரும்புள்ளிகளை மறையச் செய்யும் சிகச்சை முறைகளும் உள்ளன.

Best Natural Ingredients You Need To Fade Away Dark Spots

இப்படி நிறைய சிகிச்சை முறைகள் இருந்தாலும் பக்க விளைவுகள் இல்லாத முழுமையாக குணமாகும் இயற்கை முறைகள் நமக்கு மிகுந்த நன்மையை தருகிறது.

கண்டிப்பாக இந்த இயற்கை பொருட்கள் உங்களது கரும்புள்ளிகளை 100% போக்க வல்லது.

இந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தி எளிதாக எந்த வித கரும்புள்ளிகளும் இல்லாத உங்கள் முந்தைய முக அழகை பெற முடியும்.

இதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்கள் கரும்புள்ளிகள் மங்கி அப்படியே காணாமல் போகுவதையும் காண முடியும்.

சரி வாங்க இப்பொழுது அதற்கான இயற்கை பொருட்களை பார்க்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளி

பப்பாளி

பயன்படுத்தும் முறை

பப்பாளியின் சதைப்பகுதியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்

கரும்புள்ளிகள் இருக்கும் பகுதிகளில் இதை தடவ வேண்டும்

30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்

இந்த முறையை தினமும் செய்து வந்தால் உங்கள் கரும்புள்ளிகளை விரட்டி அடிக்கலாம்

மோர் :

மோர் :

பயன்படுத்தும் முறை

கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தை குளிரான பட்டர்மில்க் கொண்டு கழுவ வேண்டும்

கழுவிய பிறகு அப்படியே 15 நிமிடங்கள் விட வேண்டும்

பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும்

இதை ஒரு நாளைக்கு ஒரு முறை என்று செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறைய ஆரம்பித்து விடும்

தக்காளி கூழ்

தக்காளி கூழ்

பயன்படுத்தும் முறை

தக்காளி பழத்தின் கூழை எடுத்து கொள்ளவும்.

கரும்புள்ளிகள் மீது நன்றாக தடவிக் கொள்ளவும்

15 நிமிடங்கள் நன்றாக காயும் படி விட வேண்டும்

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

தினமும் இந்த முறையை பயன்படுத்தி கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் செய்து விடலாம்.

எலும்பிச்சை சாறு

எலும்பிச்சை சாறு

பயன்படுத்தும் முறை

கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் லெமன் ஜூஸை தடவ வேண்டும்

பிறகு அப்படியே 10-15 நிமிடங்கள் விட்டு விட வேண்டும்

பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும்

இதை தினமும் பயன்படுத்தி வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து பழைய தோலை பெற முடியும்.

விட்டமின் ஈ எண்ணெய்

விட்டமின் ஈ எண்ணெய்

ஒரு ஸ்பூன் எண்ணெய்யை விட்டமின் ஈ மாத்திரையில் இருந்து எடுத்து கொள்ளுங்கள்

பிறகு கரும்புள்ளிகள் மீது தடவ வேண்டும். அப்படியே 15 நிமிடங்கள் விட்டு விடவும்

குளிர்ந்த நீரில் கழுவவும்

இப்படி தினமும் செய்து வந்தால் கரும்புள்ளிகள் தன்மை மங்கி மறைந்து விடும்.

உருளைக்கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கு ஜூஸ்

பயன்படுத்தும் முறை

உருளைக்கிழங்கின் சில துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி கொள்ளவும்

பிறகு ஒரு காட்டன் பஞ்சை எடுத்து அதில் நனைத்து கரும்புள்ளிகள் மீது தடவவும்

பிறகு 15 நிமிடங்கள் காத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

தினமும் ஒரு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

பயன்படுத்தும் முறை

கற்றாழை யிலிருந்து அதன் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்

கரும்புள்ளிகள் மீது அந்த ஜெல்லை தடவவும்

பிறகு அப்படியே 40 - 45 நிமிடங்கள் காய விடவும்

குளிர்ந்த நீரில் கழுவவும்

இதே முறையை ஒரு நாளைக்கு 2- 3 முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் கூடிய விரைவில் மறைந்து உங்கள் முகம் மாசு மருவற்ற

இனிப்பு பாதாம் எண்ணெய்

இனிப்பு பாதாம் எண்ணெய்

பயன்படுத்தும் முறை

கரும்புள்ளிகள் பாதிக்கப்பட்ட இடத்தில் இனிப்பு பாதாம் எண்ணெய்யை தடவவும்

அப்படியே இரவு முழுவதும் விட்டு விடவும்

பிறகு காலையில் எழுந்து நன்றாக குளிர்ந்த நீரில் கழுவவும்

இந்த முறையை தினமும் செய்து வந்தால் கரும்புள்ளிகளை போக்க ஒரு சிறந்த முறையாகும்

ஓட்ஸ்

ஓட்ஸ்

பயன்படுத்தும் முறை

ஒரு டீ ஸ்பூன் அளவிற்கு சமைத்த ஓட்ஸ்யை எடுத்துக் கொள்ளுங்கள்

கரும்புள்ளிகள் இருக்கும் பகுதிகளில் இதை தடவ வேண்டும்

பிறகு 30-35 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்

பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும்

தினமும் இந்த முறையை பின்பற்றினால் உங்கள் கரும்புள்ளிகள் மாயமாகி போகும்

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

பயன்படுத்தும் முறை

கொஞ்சம் மஞ்சளை எடுத்து காய்ச்சாத பாலில் கலந்து கொள்ளவும்

இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகள் மீது தடவ வேண்டும்

பிறகு 15 நிமிடங்கள் இது நல்ல வேலை செய்ய விட்டு விடவும்

குளிர்ந்த நீரில் கழுவவும்

இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் பறந்தே போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Natural Ingredients You Need To Fade Away Dark Spots

Best Natural Ingredients You Need To Fade Away Dark Spots
Story first published: Saturday, October 28, 2017, 11:15 [IST]