ஜப்பானியர்களின் இளமையான முகத்திற்கு காரணமான பிரவுன் அரிசி நீர் !! எப்படி பயன்படுத்துவது?

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு சென்று சில நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் தங்கும் இந்தியர்கள் முதலில் கவலை படுவது உணவை பற்றி தான். இன்று உலகத்தில் எல்லா இடங்களிலும் எல்லா வகை உணவும் கிடைத்தாலும் நமது அரிசி, கோதுமை, இட்லி, தோசை போல் சுவை வேறு எதிலும் கிடைப்பத்திலை. அந்த அளவிற்கு இந்திய உணவின் சுவை இருக்கும்.

குறிப்பாக அரிசி சாதம் என்பது பாதிக்கும் மேற்பட்ட இந்திய மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாகும். இந்தியர்களின் உணவு அட்டவணையில் ஒரு வேளை அரிசி உணவு நிச்சயம் உண்டு. அந்த அளவிற்கு அரிசி முக்கிய இடத்தை பிடிக்கிறது.

இன்றைய காலத்தில் உணவு கட்டுப்பாடு ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் சிலர் அரிசியில் உள்ள அதிகமான கார்போஹைடிரேட் அளவால் அதனை குறைத்து எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் அரிசி உணவிற்கான தேடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கார்போ அதிகம் இல்லாமல் அரிசி உணவின் தேடலை குறைக்க வந்தது தான் பழுப்பு அரிசி.

Beauty benefits of Brown rice soaked water for amazing skin tone

பாலிஷ் செய்யப்படாத சுத்தீகரிக்கப்படாத வெள்ளை அரிசி தான் பழுப்பு அரிசி. நெல்லின் மேலோட்டை நீக்கி விட்டு, குறைந்த அளவு தோலோடு இருக்கும் அரிசி தான் பழுப்பு அரிசி. இதனை கைக்குத்தல் அரிசி என்றும் கூறுவர். சிறிய அளவு தோலோடு இருப்பதால் இதில் பல வித ஊட்டச்சத்துகள் உண்டு. வெண்மை நிறத்திற்காக பலமுறை பாலிஷ் செய்யப்பட்டு வரும் வெள்ளை அரிசியை விட பலமடங்கு போஷாக்கு இந்த பழுப்பு அரிசியில் உள்ளது.

வைட்டமின் பி 1 , பி 2 , பி 3 , பி 6, வைட்டமின் ஈ , வைட்டமின் கே போன்றவை பழுப்பு அரிசியில் அதிகமாக உள்ளது. புரத சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவ்வளவு நன்மைகள் கொண்ட பழுப்பு அரிசியை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. நமது அழகும் அதிகரிக்கிறது. ஆம்! பழுப்பு அரிசி, சருமத்தையும் கூந்தலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

ஜப்பானியர்களின் இளமை மாறா சருமத்திற்கு அவர்கள் நம்புவது இந்த ஊற வைத்த அரிசி நீர் மட்டுமே. அதனை எந்த மாதிரியெல்லாம் பயன்படுத்தலாமென பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

½ கப் பழுப்பு அரிசி

1 கப் தண்ணீர்

1 கிண்ணம்

பஞ்சு

 செய்முறை:

செய்முறை:

அரிசியை அழுக்கு நீக்கி சுத்தமாக கழுவி கொள்ளவும்.

அரிசியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றவும்.

15 நிமிடம் ஊற விடவும்.

பிறகு அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அரிசியை சமையலில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

வடிகட்டிய நீரில் பஞ்சை நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி சுத்தம் செய்யவும்.

பின்பு மென்மையாக மசாஜ் செய்யவும்.

10 நிமிடம் நன்றாக காய விடவும் .

பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவவும்.

தினமும் இதனை தொடர்ந்து செய்து வர முகம் பளிச்சிடும்.

பழுப்பு அரிசி சருமத்தில் இருக்கும் திட்டுகளையும் துவாரங்களையும் குறைக்க பெரிதும் உதவும்.

நன்மைகள்

நன்மைகள்

சரும பாதிப்புகள் இல்லாதவர்கள் யாருமே இல்லை, இந்த மாசுபட்ட சமூகத்தில். மாசும் தூசும், புற ஊதாக்கதிர்களும் நமது சருமத்திற்கு பரிசளிப்பது, நிறமிழப்பையும், திட்டுகளையும், அழற்சியையும் தான்.

பழுப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய மினரல்கள் சருமத்தை கட்டிகள் மற்றும் கொப்பளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த அரிசியில் இருக்கும் புரத சத்து அற்புதமான எஸ்போலியாண்டாக வேலை புரிகிறது. இவை அணுக்களின் வளர்ச்சியை அதிகரித்து, சருமத்திற்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது . இதனால் சருமம் பளிச்சென்று மாறுகிறது .

முன் கூட்டிய முதிர்ச்சி:

முன் கூட்டிய முதிர்ச்சி:

பழுப்பு அரிசியில் உள்ள புரதம், சேதமடைந்த சருமத்தை சரி செய்கிறது. சுருக்கம், கோடுகள் மற்றும் சதை தொங்குவது போன்றவற்றில் இருந்து சருமத்தை காக்கிறது.

இரத்த சர்க்கரை அளவில் மாறுபாடு இருக்கும்போது மன அழுத்தம் உண்டாகிறது. இதனால் இளம் வயதிலும் சருமத்தில் முதிர்ச்சி தோன்றுகிறது. பழுப்பு அரிசியில் இருக்கும் கார்போஹைடிரேட், இரத்த சர்க்கரை அளவை பராமரித்து, இளம் வயதில் முதிர்ச்சியை தடுக்கிறது. அரிசியின் மேல் தோலை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சுருக்கங்கள் தடுக்கப்படுகிறது.

சருமத்தின் சுருக்கம் தவிர்க்க :

சருமத்தின் சுருக்கம் தவிர்க்க :

பழுப்பு அரிசியில் காணப்படும் செலினியம் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை பராமரித்து சரும அழற்சியை குறைக்கிறது. திடமான சருமத்தை பெற கீழே குறிப்பிட்டுள்ள பேஸ் பேக்கை பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள்:

2 ஸ்பூன் பழுப்பு அரிசி

1 ஸ்பூன் யோகர்ட்

செய்முறை:

செய்முறை:

பழுப்பு அரிசியை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் 1 ஸ்பூன் யோகர்ட்டை சேர்க்கவும்.

முகத்தை கழுவிவிட்டு இந்த கலவையை முகத்தில் தடவவும்.

10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.

2 வாரங்கள் தொடர்ந்து இதனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பருக்கள் போக்க

பருக்கள் போக்க

உங்கள் பருக்களுக்கு நல்ல ஒரு தீர்வாக பழுப்பு அரிசி பயன்படுகிறது.

பழுப்பு அரிசியில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட், வைட்டமின் , மெக்னீசியம், போன்றவை சருமத்தை பருக்கள் மற்றும் கட்டிகளில் இருந்து பாதுகாக்கின்றன.

வெள்ளை அரிசியால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின், சருமத்தில் செபம் உற்பத்தியை தூண்டிவிடுகின்றன . அதிகமான செபம் உற்பத்தியால் கட்டிகள் மற்றும் பருக்கள் தோன்றுகின்றன. பழுப்பு அரிசி இவற்றை முற்றிலும் களைகின்றன . பருக்கள் உடைந்து ஏற்படும் எரிச்சலை இந்த அரிசியின் குளிர்ச்சி தன்மை தணிக்கிறது .

தேவையான பொருட்கள்:

2 ஸ்பூன் பழுப்பு அரிசி ஊற வைத்த நீர்

பஞ்சு

செய்முறை:

செய்முறை:

முகத்தை நன்றாக கழுவவும்.

அரிசி நீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவவும்.

10 நிமிடங்கள் கழித்து முகம் காய்ந்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவவும்.

பருக்கள் இல்லாத முகத்தை பெற இந்த வழிமுறையை தொடர்ந்து பின்பற்றவும்.

எக்ஸிமா :

எக்ஸிமா :

பழுப்பு அரிசியில் உள்ள அதிகமான ஸ்டார்ச், எக்ஸிமாவை குறைக்க உதவுகிறது. ஒரு சுத்தமான துணியை பழுப்பு அரிசி ஊறவைத்த நீரில் நனைத்து முகத்தில் ஒத்தி எடுக்கவும். பிறகு முகத்தை காய விடவும். இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் சருமத்தில் பாதிப்புகள் முற்றிலும் விலகும்.

மேலே கூறிய குறிப்புக்கள் மிகவும் எளிதில் செய்ய கூடியவை. ஆகையால் இவற்றை முயற்சித்து சரும அழகை மேம்படுத்த எங்களது வாழ்த்துகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty benefits of Brown rice soaked water for amazing skin tone

Beauty benefits of Brown rice soaked water for amazing skin tone
Story first published: Sunday, October 29, 2017, 9:00 [IST]