இது இரண்டு ஸ்பூன் மட்டும் இருந்தால் போதும்! நீங்கள் பேரழகு ஆகலாம்!

Written By:
Subscribe to Boldsky

அழகு பாராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்களது அழகின் மீது அவ்வப்போது அக்கறை எடுத்துக் கொண்டால் தான் நீங்கள் பளிச்சென்று இருக்க முடியும். முதலில் ஒருவருக்கு அறிமுகமாவது, நமது வெளித்தோற்றம் தான்.. நமது வெளித்தோற்றத்தை வைத்து நம்மை யாரும் குறைவாக எடை போட்டு விடக் கூடாது என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்க கூடியது தான்...

நீங்கள் தினமும் ஒரு சில சின்ன சின்ன செயல்களை உங்களது அழகை பராமரிக்க செய்தாலே போதும். நீங்கள் மிளிரும் அழகுடன் திகழலாம். இந்த பகுதியில் உங்களது அழகை பராமரிக்க சில அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்து பயன் பெருங்கள்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூந்தலை அலச

கூந்தலை அலச

இரண்டு டேபிள் ஸ்பூன் வினிகரை எடுத்து ஒரு கப் அளவு தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இந்த நீரை கொண்டு தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தவுடன் தலைமுடியை அலச வேண்டும். இதனால் உங்களது கூந்தல் பளபளப்பாக இருக்கும்.

பொடுகு பிரச்சனைக்கு..

பொடுகு பிரச்சனைக்கு..

ஆப்பிள் சீடர் வினிகரை நீங்கள் தினசரி உபயோகிக்கும் ஷாம்புவுடன் சேர்த்து ஒன்றாக கலந்து அதனை கொண்டு, முடியின் வேர்க்கால்களை நன்றாக தேய்த்து தலைமுடியை அலசலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களது தலையில் பி.எச் அளவு சரியாக பராமரிக்கப்படுகிறது. ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி- பூஞ்சை எதிர்ப்பு திறன் அதிகமாக உள்ளது.

அழுக்குகளை போக்க

அழுக்குகளை போக்க

தலையில் தினசரி படிந்துள்ள அழுக்குகள், மாசுக்கள் போன்றவற்றை சுத்தமாக நீக்க ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுகிறது. மாசுக்கள் உங்களது கூந்தலின் மென்மையை கூட்டுகிறது.

பளபளக்கும் கூந்தலுக்கு..

பளபளக்கும் கூந்தலுக்கு..

கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினால், கூந்தல் பளபளப்பாகும்.

தூங்கும் முன்

தூங்கும் முன்

இரவில் தூங்கச்செல்லும் முன் முகம், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கைமற்று ம் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.

நிறம் கூட

நிறம் கூட

பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவைக் கலந்து குளித்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும்.

முட்டிகளில் உள்ள கருமை நீங்க

முட்டிகளில் உள்ள கருமை நீங்க

கை முட்டிகளில் உள்ள கருமை நீங்க, எலுமிச்சைப்பழத்தின் சாறைத் தேய்க்க வேண்டும்.

பிளீச்சிங்

பிளீச்சிங்

உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவினால், பிளீச்சிங் செய்த பலன் கிடைக்கும்.

இமைகளுக்கு

இமைகளுக்கு

கண் இமைகளில் பாதாம் அல்லது விளக்கெண்ணெயை இரண்டு துளி கள் விட்டுத்தூங்கினால், கண்இமை கருப்பாக நீண்டு வளரும்.

உதடுகளுக்கு

உதடுகளுக்கு

உதடுகளில் பாலாடையைத் தடவி வந்தால், வறண்டுபோன உதடுகள் மென்மையாக மாறும்.

கால்களுக்கு

கால்களுக்கு

களைப்படைந்த கால்களை மிதமான உப்புக் கலந்த சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டு தூங்கி னால் இர வில் ஆழ்ந்த உறக்கம் வரும்.

கருமையான கூந்தலுக்கு

கருமையான கூந்தலுக்கு

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கரு வேப்பிலை, காய்ந்த நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலை ஆகியவற்றைக் கலந்து, கொதிக்க வைத்து, பின்னர் ஆற விடவும். இதனை தினமும் கூந்தலுக்குத் தடவிவர கருமையாக, பளபளப்பாக மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

apple cider vinegar for hair

apple cider vinegar for hair
Story first published: Tuesday, November 28, 2017, 18:30 [IST]