உங்க முகம் வறண்டு பொலிவிழந்து இருக்குதா? அத சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் முகம் வரவர பொலிவிழந்து வறண்டு அசிங்கமாக காட்சியளிக்கிறதா? அதிலும் பனிக்காலத்தில் இன்னும் மோசமாக உங்கள் முகம் இருக்கா? அதற்காக பல க்ரீம்களைப் பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைத்தபாடில்லையா? அப்படியெனில் இனிமேல் அந்த க்ரீம்களுக்கு குட்-பை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Amazing Beauty Tips For Dry And Dull Skin

ஏனென்றால், வறண்டு நம் சருமத்தை அசிங்கமாக காட்டும் வறட்சியைப் போக்க உதவும் சில இயற்கை வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளது. இந்த வழிகளில் பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருட்கள் அனைத்தும் சரும செல்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், சரும வறட்சியைத் தடுத்து, பொலிவை மேம்படுத்தும்.

உங்களுக்கு அந்த இயற்கை வழிகளைத் தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால், தொடர்ந்து படியுங்கள். முக்கியமாக இந்த வழிகள் அனைத்தும் மிகவும் எளிமையானவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

1 ஸ்பூன் மில்க் க்ரீம் அல்லது பாலாடையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக சிறித நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். வறட்சியான சருமத்தினருக்கு பால் மிகவும் சிறந்த பொருள். இது சரும வறட்சியைப் போக்கி, சருமத்தின் மென்மையை அதிகரிக்கும்.

வழி #2

வழி #2

3-4 பாதாமை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலுரித்து அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் உப்பில்லாத வெண்ணெய் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கி, சருமம் சுருக்கங்களின்றி பொலிவோடு காணப்படும்.

வழி #3

வழி #3

4 துளி ஆலிவ் ஆயிலுடன், 2 துளி தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 3-4 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை முகத்தின் மேலே 30 நொடிகள் வைத்திருக்க வேண்டும். பின் மென்மையாக அந்த துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும். இதனால் சருமத்துளைகளினுள் இருந்த அழுக்குகள் வெளியேற்றப்படுவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.

வழி #4

வழி #4

தினமும் இரவில் படுக்கும் முன், முகம், கை, கால்களை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் துணியால் துடைக்க வேண்டும். பின்பு சிறிது ரோஸ் வாட்டரை மாய்ஸ்சுரைசிங் லோசனுடன் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தடவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், சருமம் வறட்சியின்றி பொலிவோடு காட்சியளிக்கும்.

வழி #5

வழி #5

சரும வறட்சி அதிகம் இருந்தால், தேனை ஒரு காட்டனில் நனைத்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் தேன் சருமத்தை சுத்தம் செய்வதோடு, சரும வறட்சியைத் தடுத்து, சருமத்தை இளமையுடன் காட்சியளிக்கும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம்.

வழி #6

வழி #6

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

வழி #7

வழி #7

2 டேபிள் ஸ்பூன் பப்பாளி பேஸ்ட் உடன் 1 டீஸ்பூன் பால் மற்றும் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி பவுடர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.

வழி #8

வழி #8

அவகேடோ பழத்தில் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள்களான ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. அத்தகைய அவகேடோ பழத்தின் கூழை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

வழி #9

வழி #9

ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் 1 டீஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்கு கலந்து, கழுத்து, முகம் போன்ற பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் மஞ்சள் கருவில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன் சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.

வழி #10

வழி #10

3 டீஸ்பூன் சர்க்கரை, வெதுவெதுப்பான பால் சேர்த்து கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி, நன்கு காய்ந்த பின் சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனால் வறட்சி நீங்கி, சரும பொலிவு அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Beauty Tips For Dry And Dull Skin

Here are some amazing beauty tips for dry and dull skin. Read on to know more...
Story first published: Friday, December 22, 2017, 16:30 [IST]