Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
இந்த 5 பழங்களும் உங்கள் அழகை அதிகப்படுத்தும்!! எவையென்று தெரிஞ்சுக்கனுமா?
அழகாய் இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். அவ்வப்போது புற அழகை பாதுகாக்க வேண்டும். எப்படி அழகை பராமரிப்புடன் கூடிய ஆரோக்கிய பழங்கள் கொண்டு அதிகப்படுத்தலாம் என பார்க்கலாம்.
உடலுக்கு போஷாக்கு மற்றும் இளமையை தக்க வைக்கவும், புரத அளவை அதிகப்படுத்தவும் விட்டமின் கல் முக்கியமானவை. அவை பழங்களில்தான் அதிகம் காணப்படுகின்றன. பழங்கள் மிகவும் விசேஷமானவை.

பழங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. அழகையும் அதிகப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாதல்ல. சருமம் சுருக்கமில்லாமல், மினுமினுப்போடு, போஷாக்கு கூட வேண்டுமென்றால் இந்த பழங்களை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாம்பழம் :
விட்டமின் ஈ, ஏ, கே, சி கொண்டவை. இவற்றிலுள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் சரும பாதிப்பை தடுக்கின்றன.. முதுமையை வராமல் காக்கின்றன.
சருமத்தை இருக்கி, சுருக்கமில்லாமல் பாதுகாக்கும். மாம்பழத்தின் சதைப் பகுதியால் முகத்தில் மசாஜ் செய்தால் தனி களை முகத்தில் உண்டாகும்.

எலுமிச்சை :
விட்டமின் சி அதிகம் உள்ளதால் சுருக்கங்களை வராமல் காக்கும். அடிக்கடி உனவில் சேர்த்துக் கொள்வதோடு எலுமிச்சை சாறில் சிறிது வெண்ணெய் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமம் இளமையாக இருக்கும்.

பப்பாளி :
பப்பாளியிலுள்ள விட்டமின் ஏ சுருக்கங்களை வராமல் பாதுகாக்கும். அதிலுள்ள பெப்பெய்ன் என்சைம் இறந்த செல்களை சருமத்திலிருந்து வெளியேற்றும். பப்பாளியை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதோடு சருமத்திற்கும் பூச வேண்டும்.

வாழைப்பழம்:
வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் கூந்தல் மற்றும் சருமத்திற்கு மிக நல்லது. பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் போட்டால் அட்டகாசமான இளமையான சருமம் கிடைக்கும். தினமும் இரு வாழைப்பழம் சாப்பிட்டால் சருமத்தின் தன்மை மாறும்

ஆப்பிள் :
ஆப்பிளில் உள்ள சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு உகந்ததுபோலவே சரும சுருக்கத்திற்கும் மிக நல்லது. ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் ஃப்ரீரேடிகல்ஸ் அழிக்கப்படுகின்றன.
இதனால் புதிய செல்கள் பெருகும் இள்மையை தக்க வைக்க உதவும். ஆப்பிளை மசித்து பாலுடன் கலந்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.



Click it and Unblock the Notifications