பாத வெடிப்புகளை விரைவில் போக்கும் பயனுள்ள 3 சிகிச்சைகள்!!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

வெறும் காலில் புல் வெளிகளில் நடந்தது; கடற்கரை மணலில் கால் புதைய நடந்தது; அலைகள் வந்து கால்களை அடித்து சென்றது; பூங்காக்களில் போடப்பட்டிருக்கும் 8 போன்ற வளைவில் ஓடி ஓடி விளையாடியது.

3 Simple DIY steps to cure cracked heels

எதையுமே மறக்க முடியாது, அது ஒரு அழகிய நிலா காலம்...என்பது போல்.ஆனால் இந்த காலில் உண்டான வெடிப்புக்கு பிறகு இவை எதையுமே இரசிக்க முடிவதில்லை. காலில் எந்த நேரமும் செருப்பை அணிந்தும் கொண்டு.. எப்போதுதான் இந்த வெடிப்புகள் நீங்குமோ...என்ற உங்களின் குரலுக்கான விடை இங்கே..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஓட்ஸ்-ஜோஜோபா எண்ணெய் :

ஓட்ஸ்-ஜோஜோபா எண்ணெய் :

ஓட்ஸ் சருமத்தில் இறந்த செல்களை நீக்குகிறது. சருமத்தை புதுப்பிக்கிறது. ஜோஜோபா எண்ணெய் இழந்த ஈரப்பதத்தை மீட்டு தருகிறது.

1 ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் சிறிதளவு ஜோஜோபா எண்ணெய்யை கலந்து ஒரு பேஸ்ட்டாக்கி பாத வெடிப்புகளில் தடவவும். மென்மையாக மசாஜ் செய்யவும்.

அரை மணி நேரம் கழித்து கழுவவும். பின்பு துணியால் அந்த இடத்தை துடைத்து காய விடவும். இதனை தினமும் செய்வதன் மூலம் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச். பாத வெடிப்புகளுக்கு இது நல்ல தீர்வை தருகிறது. எலுமிச்சை பழத்தை நறுக்கி ஒரு பாதியை எடுத்து கொள்ளவும். அதனை உங்கள் பாதத்தில் தேய்க்கவும். சாறு மெதுவாக உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்புகளில் இறங்கும். இதனை தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்யவும். பின்பு ஒரு ப்ரஷ் அல்லது துணி கொண்டு அந்த இடத்தை மென்மையாக தேய்க்கவும். பின்பு தண்ணீரால் கழுவவும்.

 பப்பாளிப் பழம் :

பப்பாளிப் பழம் :

அல்லது, எலுமிச்சை சாறை ஒரு டப் வெதுவெதுப்பான நீரில் பிழிந்து அந்த நீரில் உங்கள் கால்களை மூழ்கும் படி வைக்கவும். 15-20 நிமிடங்கள் கழித்து காலை எடுக்கவும். ஒரு வாரத்தில் 2 அல்லது 3 முறை இதனை செய்வதால் விரைவில் வெடிப்புகள் குணமாகும். எலுமிச்சை சாறுடன் பப்பாளி பழத்தை மசித்து வெடிப்புகளில் தடவலாம். 20 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.

 வாழை பழம் மற்றும் அவகேடோ மாஸ்க்:

வாழை பழம் மற்றும் அவகேடோ மாஸ்க்:

அவகேடோவில் அதிக அளவு எண்ணெய் , வைட்டமின், மற்றும் கொழுப்பு சத்து உண்டு. வறண்ட சருமத்தை இது சரி செய்கிறது. வாழைப்பழம் சருமத்தை மென்மையாக்கி ஈரப்பதத்தை தருகிறது.

1 கனிந்த வாழைப்பழத்தை எடுத்து ½ அவகேடோ பழத்துடன் சேர்த்து மசித்து கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் வெடிப்புகள் மீது தடவவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்ய வேண்டும். வெடிப்புகள் நீங்கி அழகான பாதத்தை பெறலாம்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தீர்வுகளை முயன்று பாருங்கள். வெடிப்புகள் மறையும். நீங்களும் மாறுவீர்கள் குழந்தையாய்..மேலே கூறியவற்றை மீண்டும் அனுபவிக்க!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

3 Simple DIY steps to cure cracked heels

3 Simple DIY steps to cure cracked heels
Story first published: Thursday, September 21, 2017, 11:20 [IST]