குளிப்பதற்கு முன் இந்த 3 விஷயங்கள் செய்தால் என்ன நன்மை என தெரியுமா

Posted By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடமே செல்ல வேண்டாம் என்று சொல்வார்கள். அதே போல் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை தினமும் குளிப்பதற்கு முன் சில முறைகளை பின்பற்றுவதால் நடக்கும் அதிசயம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா.

3 Pre-shower Techniques To Rejuvenate Your Skin & Hair

இதற்கு உங்களது பதில் இல்லை என்றால் அறிந்து கொள்ளுங்கள். இந்த சின்ன விஷயத்தை தினமும் குளிப்பதற்கு முன் உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு செய்தால் போதும் புதிய புத்துணர்ச்சி பெறுவதோடு ஆரோக்கியமான ஜொலிக்கும் சருமம் மற்றும் கூந்தலை பெறுவீர்கள்.

தேயிலை மர எண்ணெயை முடி உதிர்தலுக்கு உபயோகப்படுத்தியிருக்கிறீர்களா? இப்டி ட்ரை பண்ணுங்க!!

இதுவரை உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு அதிகமான அக்கறை எடுத்தும் பலனில்லை என்றால் இது கண்டிப்பாக உங்களுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும ஈரப்பதம்

சரும ஈரப்பதம்

இந்த ஸ்க்ரப்பிங் முறையை தினமும் குளிப்பதற்கு முன் பின்பற்றினால் பட்டு போன்ற பொலிவான சருமம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

தினமும் உபயோகப்படுத்தும் பாடி ஜெல்

அயோடைஸ்டு உப்பு

சர்க்கரை

செய்முறை

செய்முறை

  • மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து கொள்ளவும்
  • அதை எடுத்து உள்ளங் கைகளில் தேய்த்துக் கொள்ளவும்
  • இதை உடல் முழுவதும் தேய்த்து உலர்ந்த வறண்ட சருமத்தை நீக்க வேண்டும்
  • நன்றாக கழுவி விட்டு எப்பொழுதும் போல குளிக்க வேண்டும்.
  • இறுதியாக ஜொலிக்கும் சருமத்தை கண்ணாடியில் பார்த்து வியப்படையுங்கள்
ஹேர் கண்டிஷனர்

ஹேர் கண்டிஷனர்

உங்கள் பள்ளி பருவத்தில் பின்பற்றிய ஒன்றை தான் நாம் இப்பொழுது பயன்படுத்த போறோம்.

உங்களது கூந்தல் ராப்புன்ஷல் அழகி மாதிரி மென்மையாக பொலிவாக நீளமாக இருக்க ஆசையா. அப்போ தினமும் அதை பராமரிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

டீ ட்ரி ஆயில்

தேங்காய் எண்ணெய்

ஷாம்பு

ஹேர் மாஸ்க் (இயற்கை மாஸ்க் என்றால் சிறந்தது)

எப்படி பயன்படுத்துவது

எப்படி பயன்படுத்துவது

ஒரு சிறிய பெளலை எடுத்து கொள்ளவும் . உங்கள் முடிக்கு தகுந்த அளவு தேங்காய் எண்ணெய்யை ஊற்றி கொள்ளவும். கொஞ்சம் சில துளிகள் டீ ட்ரி ஆயில் சேர்க்கவும் (மேஜிக் பொருள்) இந்த கலவையை உங்கள் முடியின் நன்றாக தேய்த்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இரவு முழுவதும் அல்லது 5 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும் . பிறகு ஷாம்பு போட்டு நன்றாக அலசி விட வேண்டும்

பொறுங்க பொறுங்க இன்னும் இருக்கு. அலசின முடியில் பிறகு ஹேர் மாஸ்க்கை கண்டிஷனர் மாதிரி பயன்படுத்தவும். இது உங்கள் கூந்தலை மிருதுவாக்கும்.

இறுதியில் நன்றாக நீரில் அலச வேண்டும். இதை பயன்படுத்தினால் கண்டிப்பாக ஆரோக்கியமான அழகான கூந்தலை பெறலாம். உங்கள் ஹேர் பியூட்டி பொருட்கள் எல்லாம் இனி உங்களுக்கு தேவைப்படாது.

 உடனடி கை மற்றும் பாத பராமரிப்பு

உடனடி கை மற்றும் பாத பராமரிப்பு

உங்கள் முடி பராமரிப்பு முடிந்த பிறகு ஹேர் மாஸ்க்கை கைகள் மற்றும் பாதத்திற்கு பயன்படுத்தவும். இது சூப்பர் கண்டிஷனராக செயல்பட்டு உங்கள் கைகள் மற்றும் பாதங்களை பட்டு போன்று ஆக்கிவிடும். கை மற்றும் பாதங்களில் அப்ளே செய்து சில நிமிடங்கள் கழித்து கழுவவும்.

இந்த 3 சின்ன முறைகளை தினமும் குளிப்பதற்கு முன் செய்தால் எந்த வித பியூட்டி பொருள்களும் இல்லாமல் நீங்கள் அழகாக ஜொலிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

3 Pre-shower Techniques To Rejuvenate Your Skin & Hair

3 Pre-shower Techniques To Rejuvenate Your Skin & Hair
Story first published: Friday, August 11, 2017, 9:00 [IST]