முகத்தில் இருக்கும் கருமை மற்றும் சுருக்கங்களைப் போக்க உதவும் ஓர் அற்புத மாஸ்க்...

Posted By:
Subscribe to Boldsky

தற்போது என்ன தான் மழைக்காலமாக இருந்தாலும், வெயிலின் தாக்கம் மட்டும் குறைவதில்லை. வெயில் கொளுத்துவதால், வெளியே சிறிது நேரம் சுற்றி விட்டு வந்தாலும், முகம் கருப்பாகி விடுகிறது. மேலும் சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி, இளமையிலேயே முகத்தில் சுருக்கங்களும், முதுமைக் கோடுகளும் வந்துவிடுகின்றன.

Whiten Your Face By Using One Ingredient: Wrinkles Disappear As If They Never Existed!

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன தான் மார்கெட்டில் விற்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தினாலும், அதனால் நன்மைகளுடன், பக்க விளைவுகளையும் சந்திக்க நேரிடும். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

சரி, இப்போது முகத்தில் இருக்கும் கருமை மற்றும் சுருக்கங்களைப் போக்க உதவும் அற்புத ஈஸ்ட் மாஸ்க் பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

ஈஸ்ட் பவுடர் - 20 கிராம்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட் பவுடரை எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, வெதுவெதுப்பான நீர் நிரப்பிய பாத்திரத்தினுள் பௌலை 2-3 நிமிடம் வைத்து எடுத்தால், மாஸ்க் ரெடி!

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* முதலில் முகத்தை பால் கொண்டு துடைத்து, 5 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த காட்டன் பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும்.

* பின்பு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* பின் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.

நன்மைகள்

நன்மைகள்

இந்த மாஸ்க்கை போடுவதால், சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் நீங்குவதுடன், சருமத்தில் கொலாஜென் உற்பத்தி அதிகரித்து, சருமம் பிரகாசமாக இருக்கும்.

குறிப்பு

குறிப்பு

இந்த ஃபேஸ் மாஸ்க்கை தினமும் முகத்திற்குப் போடக்கூடாது. வாரத்திற்கு 1-2 முறை தான் போட வேண்டும். மேலும் ஈஸ்ட் சருமத்திற்கு மட்டும் நல்லதல்ல, தலைமுடிக்கும் நல்லது. குறிப்பாக தலைமுடி உதிரும் பிரச்சனையை இது தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Whiten Your Face By Using One Ingredient: Wrinkles Disappear As If They Never Existed!

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன தான் மார்கெட்டில் விற்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தினாலும், அதனால் நன்மைகளுடன், பக்க விளைவுகளையும் பெறக்கூடும். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், அதனால் சரும பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.சரி, இப்போது முகத்தில் இருக்கும் கருமை மற்றும் சுருக்கங்களைப் போக்க உதவும் அற்புத மாஸ்க் பற்றி காண்போம்.
Story first published: Monday, November 14, 2016, 12:15 [IST]
Subscribe Newsletter