கரும்பு சாறினால் கருவளையம் போக்க முடியுமா?

Written By:
Subscribe to Boldsky

கண்கள் நமது அழகையும் மனதையும் வெளிப்படுத்தும் இயற்கையான கேமரா. எந்தவித உணர்ச்சியையும் கண்கள் வெளிப்படுத்திவிடும்.

அப்படியான முக்கியமான கண்களை நாம் எப்படி கவனித்துக் கொள்கிறோம். கருவளையம், சுருக்கம் ஆகியவை நமது அழகை குறைத்து வயதை அதிகப்படுத்தி காண்பிக்கும்.

கருவளையம் நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை காண்பிக்கும்.

சரியான தூக்கம் இல்லாமல் நேரம் காலம் கழித்து தூங்குதல், போதிய நீர் குடிக்காமல் இருப்பது அதிக நேரம் டிவி, மொபைல், புத்தகம் படிப்பதுடன் இவையெல்லாம் முக்கிய காரணங்கள்.

அது தவிர சாப்பிடும் மருந்துகளாலும் இத்தகைய பிரச்சனைகள் உண்டாகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜாதிக்காய் :

ஜாதிக்காய் :

ஜாதிக்காய் பொடியை பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் போது கண்களைச் சுற்றி தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால், அதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சத்தினால் கருவளையங்கள் நீங்கும்.

தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு :

தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு :

தக்காளி சாறுவில் சிறிது உருளைக் கிழங்கு சாறு கலந்து கண்களிண் அடியில் தடவி வந்தால் விரைவில் கருவளையம் காணாமல் போகும்.

பாதாம் :

பாதாம் :

பாதாமை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மறையும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மசூர் பருப்பு பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கரும்புச் சாறு :

கரும்புச் சாறு :

2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் கண்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்களைப் போக்கலாம்.

 புதினா :

புதினா :

புதினா இலைகளை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் கருவளையங்கள் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Using sugar cane juice to remove dark circle

Using sugar cane juice to remove dark circle around eyes
Story first published: Wednesday, September 28, 2016, 13:00 [IST]
Subscribe Newsletter