அழகை அதிகரிக்க நம் பாட்டிமார்கள் பின்பற்றிய பாரம்பரிய அழகு குறிப்புகள்!

Posted By:
Subscribe to Boldsky

அழகை மேம்படுத்த எத்தனை அழகு சாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றால் சரும பிரச்சனைகள் நீங்குகிறதோ இல்லையோ, அவற்றால் பக்கவிளைவுகளை கட்டாயம் அனுபவிக்கக்கூடும்.

ஆனால் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய ஒருசில அழகு குறிப்புகளை பின்பற்றினால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் அழகும் அதிகரிக்கும்.

இங்கு அழகை அதிகரிக்க நம் பாட்டிமார்கள் பின்பற்றிய பாரம்பரிய அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தில் இருக்கும் பருக்களும் நீங்கும்.

தேன் மற்றும் சர்க்கரை

தேன் மற்றும் சர்க்கரை

தேனில் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் நீக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

மஞ்சள் மற்றும் தயிர்

மஞ்சள் மற்றும் தயிர்

தயிரில் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள கருமைகள் அகலும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் தடவுவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வந்தால், சரும செல்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, சருமம் வறட்சியடையாமல் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்களால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்பட்டு, சரும அழகு அதிகரிக்கும்.

சீகைக்காய்

சீகைக்காய்

தலைக்கு ஷாம்பு போடுவதற்கு பதிலாக, சீகைக்காயைப் பயன்படுத்தி வந்திருந்தால், தற்போது நாம் சந்திக்கும் தலைமுடி உதிர்வு, நரைமுடி, வழுக்கைத் தலை போன்ற பிரச்சனைகளை சந்தித்திருக்கமாட்டோம். இனிமேலாவது ஷாம்பு பயன்படுத்துவதை நிறுத்தி, சீகைக்காய் பயன்படுத்தி, தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Traditional Beauty Home Remedies From Your Grandma That Work

Here are some traditional beauty home remedies from your grandma that work. Read on to know more...
Story first published: Thursday, September 29, 2016, 18:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter