ஏன் சீக்கிரம் முதுமை தோற்றம் வந்துவிடுகிறது தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

ஒரே வயதாக இருந்தாலும் ஒருவர் இளமையுடனும் மற்றொருவர் சுருக்கங்களுடன் முதுமையாக ஏன் இருக்கிறார்கள். ஏன் சிலருக்கு விரைவிலேயே சுருக்கங்கள் வருகிறது? என என்றேனும் யோசித்திருக்கிறீர்களா?

வாழ்க்கைமுறைதான் இதற்கு காரணம் என்பதில் சந்தேகமில்லை. அவரவர் உண்ணும் உணவு முறை, பராமரிக்கப்படும் முறை, நேர்த்தியான வாழ்க்கை இவைதான் அழகும், நல்ல மன நிலையும் உருவாக காரணமாகிறது.

These things you should not do for your skin

வாழ்க்கை முறையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் அழகிற்கான சில யோசனைகள் வேண்டுமானாலு8ம் எங்களிடமிருந்து நீங்கள் பெறலாம்.

அப்படியான சில ஐடியாக்களை இங்கே பகிர்ந்திருக்கிறோம். தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறண்ட சருமத்தில் மேக்கப் :

வறண்ட சருமத்தில் மேக்கப் :

சிலர் முகம் கழுவியதும் பவுடர் அல்லது மேக்கப் போடுவார்கள். இது தவறு. இதனால் சரும செல்கள் உடைந்துவிடும் அபாயமும் அதை தொடர்ந்து சுருக்கங்களும் உருவாகும். உங்கள் சருமத்திற்கான தேவையான ஈரப்பதத்தை அளித்தபின்பே மேக்கப் செய்ய வேண்டும்.

எத்தனை முறை முகம் கழுவுகிறீர்கள் :

எத்தனை முறை முகம் கழுவுகிறீர்கள் :

உங்கள் முகத்தில் ஃபவுண்டேஷன் போடும்போது அதிகப்படியான எரிச்சல் வறட்சி தெரிந்தால் நீங்கள் அடிக்கடி முகம் கழுவுகிறீர்கள் என்று அர்த்தம்.

முகத்தை வெளியில் சென்று வந்தாலோ அல்லது நாளைக்கு மூன்று முறை கழுவினாலே போதுமானது. அடிக்கடி கழிவினால் இயற்கையாக சுரக்கும் சரும எண்ணெய் தடுக்கப்பட்டு சுருக்கங்கள் வந்துவிடும்.

எந்த இடத்தில் மேக்கப் போட வேண்டும் :

எந்த இடத்தில் மேக்கப் போட வேண்டும் :

இயற்கை ஒளியில் தான் மேக்கப் போட வேண்டும். செயற்கை வெளிச்சம் உங்கள் சரும நிறத்தை வேறுபட்டு காண்பிக்கும். இதனால் அதிகபப்டியான மேக்கப்பை தவிர்க்கலாம். மிதமான மேக்கப் போடப்படுவதால் சருமம் பாதிக்காது.

 அதிகப்படியான ஃபவுண்டேஷன் :

அதிகப்படியான ஃபவுண்டேஷன் :

சிலர் கூடுதல் நிறமாக தெரிய வேண்டுமென அதிகப்படியான ஃபவுண்டேஷன் உபயோகிப்பார்கள். இது பின்விளைவுகளை தரும். சருமத்தை பாழ்படுத்தும்.

ஆகவே சரும எரிச்சல்களை தடுக்க மிக குறைவான அளவு உங்கல் நிறத்திற்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுங்கள்.

ஐ ஷேடோ :

ஐ ஷேடோ :

சிலர் கண்கள் வசீகரமாக தெரிய வேண்டுமென அடர் நிறத்தில் அதிகமாக ஐ ஷேடோவை உபயோகிப்பார்கள். இந்த அடர் நிறத்திற்காக அதிகப்படியான ரசாயனங்கள் சேர்த்திருப்பார்கள்.

இது மிக மென்மையான கண்களில் சுருக்கங்களை உண்டாக்கும். முக்கியமாக கண்கள் மின்னுவதற்காக க்ளிட்டர் அடிக்கடி உபயோகிக்கக் கூடாது. ஆகவே லைட்டாக ஷேடோக்களை உபயோகிப்பது உத்தமம்.

 ட்ரை ஷாம்பூ :

ட்ரை ஷாம்பூ :

தலைக்கு அடிக்கடி குளிக்கும்போது எண்ணெய் குறைந்து வறட்சி உண்டாகும் வாய்ப்பு அதிகம். இப்போது கடைகளில் ட்ரை ஷாம்பு கிடைக்கிறது.

இது சிறந்த தேர்வாகும். இதற்கு நீர் தேவையில்லை. தலையில் வெறுமனே இந்த ஷாம்பு பவுடரை உபயோகிப்பதால் தலையில் பிசுபிசுப்பு இல்லாமல் தலைக்கு குளித்தது போலவே இருக்கும்.

ஒருபக்கமாக படுப்பது :

ஒருபக்கமாக படுப்பது :

ஒரே பக்கத்தில் படுப்பதால் அங்கிருக்கும் சருமம் அழுந்தப்பட்டு சரும செல்கள் இறக்கின்றன். இதனால் விரைவில் சுருக்கங்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

 மேக்கப்புடன் தூங்குவது :

மேக்கப்புடன் தூங்குவது :

மிக மோசமான பழக்கம் இது. அதிகப்படியான் களைப்பினால் முகத்தை கழுவாமல் படுப்பதால் பல மடங்கு சரும பாதிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These things you should not do for your skin

Things you should not do for your skin
Story first published: Wednesday, November 30, 2016, 8:14 [IST]
Subscribe Newsletter