கருவளையத்தை போக்கும் ஒரு மேஜிக் குறிப்பு !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

கருவளையம் வந்தால் அவ்வளவு எளிதல்ல உடனே மறைவது என்பது. காரணம் மிக மெல்லிய திசுக்கள் கண்களைச் சுற்றிலும் அமைந்துள்ளது. அவைகளில் போதிய அளவு ரத்த ஓட்டம் இல்லையென்றால் இறந்த செல்கள் தங்கி கருவளையம் ஏற்படுத்திவிடும்.

இந்த கருவளையம் நமக்கு வயதான தோற்றத்தை வேறு அளித்துவிடும். மெக்கப்பை கொண்டு மறைத்தாலும் , உபயோகித்த கெமிக்கல்களால் கூடுதல் விளைவுகள் ஏற்படும்.

Simple DIY for eye dark circle

முதலில் நன்றாக தூங்க வேண்டும். நிறைய தண்ணீர் அருந்துங்கள். போதிய அளவு பயிற்சிகள் தந்தால் மிக வேகமாக கருவளையம் மறைந்துவிடும்.

அது தவிர்த்து சில எளிய அழகுக் குறிப்புகளாலும் கருவளையத்தை போக்கிவிடலாம். நீங்கள் வெள்ளரிக்காயை கருவளையத்திற்கு உபயோகிப்பது பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பீர்கள். வெள்ளரிக்காயிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இறந்த செல்கள் மீது செயல் புரியும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். முக்கியமாக குளிர்ச்சி தரும்.

Simple DIY for eye dark circle

கண்களில் உண்டாகும் அதிகப்படியான சூட்டினால் கூட கருவளையம் தோன்றும். அதேபோல் எலுமிச்சை கருமையை போக்கும். சுருக்கங்களை நீக்கும். இவ்விரண்டையும் வைத்து எப்படி கருவளையத்தை மறையச் செய்வது என பார்க்கலாம்.

Simple DIY for eye dark circle

தேவையானவை :

வெள்ளரிக்காய் - 2 துண்டுகள்

எலுமிச்சை சாறு - அரை மூடி

வெள்ளரிக்காயை துருவி அதனுடன் எலுமிச்சை சேர்த்து கலக்கவும். பின்னர் இதனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைக்கவும். குளிர்ந்த பிறகு வெளியிலெடுத்து, சாறினை பிழிந்து கொள்ளுங்கள். இந்த சாற்றினை கண்களுக்கு அடியில் தடவிக் கொள்ள வேண்டும்.

Simple DIY for eye dark circle

20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். மீதமுள்ள சாற்றினை ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். கண்கள் மிகச் சோர்வாக இருக்கும் சமயத்திலெல்லாம் சில்லென்று கண்களை சுற்று தடவிக் கொள்ளலாம். இவ்வாறு தினமும் இரு வேளை செய்து பாருங்கள். பிறகு ரிசல்ட்டை பாருங்கள்.

English summary

Simple DIY for eye dark circle

Simple DIY for eye dark circle
Story first published: Friday, July 22, 2016, 17:50 [IST]
Subscribe Newsletter