கண் இமைகள் தொய்வடைந்து வயதான தோற்றம் கொண்டுள்ளதா?சரி செய்ய,இதோ இயற்கையான வழிகள்!

Written By: Hemalatha
Subscribe to Boldsky

கண்கள்தான் முகத்திற்கு ஜீவன் தரும் உறுப்பு. வாய் பேசாமலேயே நம் மனதின் உணர்வுகளை வெளிப்படையாக மற்றவர்களுக்கு காண்பிப்பதும் கண்களே.

Natural remedies for drooping eyelids

அதேபோல் நமக்கு வயதானதை காட்டிக்கொடுக்கும் முதல் உறுப்பும் கண்கள்தான். சிலருக்கு 30களிலேயே கண்களின் இமை தொங்கி வயதான தோற்றத்தை தந்துவிடும். வயது மற்றும் மேக்கப், உபயோகிக்கும் அழகு சாதனங்கள் என இவையெல்லாம் கண்களின் இமைகள் தொங்கி அசிங்கமாய் தெரிவதற்கு காரணம். இதனை எளிதில் சரி செய்யலாம் கவலைப்படாதீர்கள். உங்கள் சமையலறையிலேயே இருக்கிறது கண்களை காக்கும் ரகசியங்கள்.

Natural remedies for drooping eyelids

முட்டை வெள்ளைக் கரு :

முட்டையின் வெள்ளைக் கரு தொங்கும் சருமத்தை இறுக்கும். அதில் அதிக அளவு புரோட்டின் உள்ளதால், அவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். முட்டையின் வெள்ளைக் கருவைக் கொண்டு எப்படி தொங்கும் இமையை சீர் செய்யலாம் எனப் பார்க்கலாம்.

முதலில் கண்களில் மேக்கப் , கிரீம் இல்லாமல் சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். பின் மேல் இமைகளில் முட்டையின் வெள்ளைக் கருவை லேயராக போடவும். இமை ஓரம் வரைக்கும் போடலாம்.

ஃபேன் அருகே அமர்ந்தால் எளிதில் காயும். காய்ந்த பின் இரண்டாவது கோட்டிங் இன்னொரு லேயராக வெள்ளைக் கருவை அதே பகுதிகளில் போடவும். நீங்கள் இமை இறுகுவதை உணர்வீர்கள். நன்றாக காய்ந்த பின் கழுவலாம்.

முதல் முறை உங்களுக்கு வித்யாசம் தெரியவில்லையென்றாலும், தொடர்ந்து சில நாட்கள் செய்யும் போது எளிதில் மாற்றத்தை காண்பீர்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் செய்யலாம். பின்னர் தொய்வடைந்த மேல் இமை இறுகி நார்மலாக மாறும். செய்து பாருங்கள்.

Natural remedies for drooping eyelids

புதினா இலை :

இது எளிதில் செய்யலாம். கண்களுக்கு அடியில் தொங்கும் சதையினை சரி செய்யும். மீண்டும் இளமையான கண்களைப் பெறலாம். ஃப்ரஷான புதினா இலைகளை எடுது பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

அதனை 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பின் அதனை, கண்களுக்கு அடியில் பத்து போல போடவும். 15 நிமிடங்கள் கழித்து கண்களை கழுவுங்கள். இது கண்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

இதனால் கண்களுக்கடியில் தங்கும் நீர் கரைந்து பழையபடி அழகாய் காணப்படும். வாரம் ஒரு முறை அல்லது இரு முறை செய்யலாம். நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

Natural remedies for drooping eyelids

யோகார்ட்+வெள்ளரிக்காய் :

யோகார்ட் -4 டேபிள் ஸ்பூன்

சோற்றுக்கற்றாழை சதைப் பகுதி -4 டேபிள் ஸ்பூன்

வெள்ளரிக்காய் -4 துண்டுகள்

மேலே கூறியவற்றை கலந்து நன்றாக அரைத்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். இதனை கண்களின் இமைகளின் மேல் மாஸ்க் போல போடவும்.

20 நிமிடங்கள் கழித்து கண்களை கழுவுங்கள். எளிதில் கண்கள் பொலிவு பெற்று, இமைகள் இறுக்கம் அடைந்து அழகான தோற்றம் பெறுவீர்கள்.

Natural remedies for drooping eyelids

ஐஸ் கட்டி மசாஜ் :

ஐஸ் கட்டியை ஒரு துணியில் மூடி மெதுவாக கண்களின் இமை மேல் ஒத்தடம் கொடுங்கள். காலை இரவு என இரு வேளையும் செய்து வந்தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தொய்வடைந்த இமை நாளடைவில் சீராகும்.

சீமை சாம்ந்தி டீ பேக் :

சீமை சாமந்தி டீ பேக் தொய்வடைந்த கண்களுக்கு அருமையான தீர்வை தருகிறது. சருமத்தை இறுக்கி, இளமையை மீண்டும் பெறச் செய்யும். சீமை சாமந்தி டீ பேக்குகள் சூப்பர் மார்கெட் அல்லது மூலிகை மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

Natural remedies for drooping eyelids

ஒரு கப் சுடு நீரில் இந்த டீ பேக்கை மூழ்க வையுங்கள். 5 நிமிடங்கள் கழித்து அந்த பேக்கை எடுத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்றாக குளிர்ந்ததும் சில்லென்று இருக்கும் அந்த டீ பேக்கை கண்களின் இமை மேல் 10 நிமிடங்கள் வையுங்கள். தினமும் செய்தால் ஒரே வாரத்தில் மாற்றம் கிடைக்கும்.

English summary

Natural remedies for drooping eyelids

Natural remedies for drooping eyelids