Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உடலிற்கு புத்துணர்வை தர இந்த எண்ணெய்களை வாரம் 1 முறை உபயோகிக்கலாம்.!!
பயணங்களினால் அல்லது ஓயாத வேலைகளின் அலுப்பால் உடல் வலி உண்டானால் அன்று நாள் முழுவதும் சோர்வாகவே இருக்கும். அந்த சமயங்களில் நீங்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டால் உடல் வலி மறைந்து போகும்.
வாரம் ஒருமுறை இங்கே சொல்லப்பட்டிருக்கும் எண்ணெயை உடல் முழுவதும் தடவி 20 -30 நிமிடங்கள் ஊற வைத்து குளித்தால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.
அதோடு அவ்ற்றின் நன்மைகளும் இருமடங்கு கிடைக்கும். வாரம் தவறாமல் செய்து பாருங்கள். பின் நீங்களே உணர்வீர்கள்.

இன்னொரு நன்மை, உடல் ஈரப்பதம் பெற்று இளமையாக இருக்கும். தினமும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
வாரம் ஒரு நாள் நீங்கள் இந்த எண்ணெய்களை உபயோகித்தால் உடலில் வயதான தோற்றமே வராது. எப்படி அவற்றின் நன்மைகளை பார்க்கலாம்.

லாவெண்டர் எண்ணெய் :
லாவெண்டர் எண்ணெய் நரம்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். சுருக்கங்களை குறைக்கும். மிருதுவான சருமத்தை தருகிறது. தளர்வை போக்கும்.

ஜெரேனியம் எண்ணெய் :
இந்த என்ணெய் சருமத்தை இறுக்கிறது. ரத்த ஓட்டத்தை தூண்டும். இளமையான சருமம் கிடைக்கும்.

சந்தன எண்ணெய் :
சந்தன எண்ணெயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அவை நச்சுக்கள் மற்றும் இறந்த செல்களை வெளியேற்றும். புத்துணர்வான சருமத்தை தரும்.

ரோஜா எண்ணெய் :
ரோஜா எண்ணெய் மிக இளமையான சருமத்தை தரும். சுருக்கங்களை போக்கும். நிறத்தை மெருகூட்டும். முதுமையான தோற்றத்தை தடுக்கும்.

தேயிலை மர எண்ணெய் :
முகப்பரு, மரு ஆகியவற்றை போக்கும். உடலில் உண்டாகும் சிறு பருக்களை போக்கிவிடும். கருமை திட்டுக்களையும் குறைக்கும்.

பாதாம் எண்ணெய் :
எளிதில் கிடைக்கக் கூடியது. வறண்ட சருமத்திற்கு ஏற்றது. சுருக்கங்களை போக்கும். உடலிற்கு புத்துணர்வை அளிக்கும்.



Click it and Unblock the Notifications