சருமத்தை மெருகூட்ட மூன்று வழிகள் !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

சருமம் எந்த நிறமாக இருந்தாலும் சரி. பாலிஷாக இருந்தால் ஈர்ப்பு தரும். அது தனி அழகை உங்களுக்கு தரும். அதிகமான எண்ணெய் பசையோ அல்லது வறண்ட சருமமோ களையிழந்து காண்பிக்கும்.

Homemade Remedies to tone your Skin

வீட்டில் வேலைகளுக்கிடையே உங்களை சருமத்தை பராமரித்தால் இதற்கென நேரம் ஒதுக்க தேவையில்லை. உதாரணத்திற்கு தக்காளியை அரியும்போதே சிறிய துண்டை முகத்தில் தேய்க்கலாம். பாலில் தேன் கலந்து முகத்தில் தடவிவிட்டு வேலையை தொடரலாம். தயிர் , மஞ்சள் என தடவிக் கொள்ளலாம். இவ்வாறு அவ்வப்போது உங்கள் சருமத்தை கவனித்துக் கொண்டீர்களேயானால் அழகு உங்கள் வசம்.

சருமத்தை ஆழ்ந்து சுத்தப்படுத்த :

இதை ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு தேவைப்படும் அளவு செய்துகொண்டீர்களென்றால் அவ்வப்போது தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.

அரிசி மாவு - 1 கப்

ஓட்ஸ் பொடி - 1 கப்

எலுமிச்சை தோல் - அரை கப்

Homemade Remedies to tone your Skin

எலுமிச்சை தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து கொள்ளுங்கள் அதோடு ஓட்ஸ் மற்றும் அரிசி மாவை கலந்து ஒரு பாட்டிலில் போட்டு நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள்.

தினமும் காலை மற்றும் மாலை வேளையில் இந்த பொடி ஒரு ஸ்பூன் எடுத்து பால் அல்லது தேன் கலந்து முகத்தில் இதமாக தேய்க்கவும். ஒரு வாரத்திலேயே சருமத்தின் சுருக்கங்கள், அதிக எண்ணெய் மறைந்து சருமம் பொலிவாகும்.

முகப்பரு மற்றும் தழும்புகள் மறைய :

முகப்பருக்களும் அதனால் வரும் தழும்புகளும் பெரும்பாலான பெண்களுக்கு பிரச்சனைகளைத் தரும். முகத்தில் தாங்க முடியாத வலி மற்றும் எரிச்சல் உண்டாகும். இதற்கு நல்ல தீர்வு இது.

Homemade Remedies to tone your Skin

தேவையானவை :

ஃபுல்லர்ஸ் எர்த் - 1 டீ ஸ்பூன்

கிராம்பு - 5 (பொடி செய்தது)

புதினா பேஸ்ட் - 1 டீஸ்பூன்

புதினாவை மைய அரைத்து அதனுடன் பொடி செய்த கிராம்பு மற்றும் ஃபுல்லர்ஸ் எர்த் ஆகியய்வற்றை ஒன்றாக கலந்து இவற்றுடன் ரோஸ் வாட்டரை கலக்குங்கள். இதனை முகத்தில் மாஸ்க் போல போட்டு 15 -20 நிமிடங்கள் காய விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நல்ல பலனை தரும்.

Homemade Remedies to tone your Skin

துளைகளை சுருக்க :

சிலருக்கு முகத்தில் பெரும் துளைகள் இருக்கும். இதனால் அழுக்கு, இறந்த செல்கள் மற்றும் கிருமிகளின் தொற்றால் சருமம் பாழாகும். இதற்கு எளிய வழி, தக்காளியை பாதியாக துண்டாக்கி, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

Homemade Remedies to tone your Skin

குளிர்ந்தவுடன் அதனை முகத்தில் தேய்க்கவும். இதனால் நாளடைவில் துளைகள் சுருங்கி, முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.

English summary

Homemade Remedies to tone your Skin

How to tone your skin using Home Ingredients
Story first published: Tuesday, August 23, 2016, 12:20 [IST]
Subscribe Newsletter