For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் கண்ணிமையை அடர்த்தியாக்க இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க!

|

கண்ணிமை பெரியதாக இருந்தால் அழகை தரும் என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?

சிலர் நமக்கு கண்கள் சிறியதாக இருக்கிறதே என நினைப்பார்கள். யோசித்து பாருங்கள். உங்கள் கண்கள் சிறியதாக இருந்து, இமை பெரியதாக இருந்தால் இருந்தால் நீங்கள் அழகான பொம்மையைப் போல் காட்சியளிப்பீர்கள்.

கண்களை பெரியதாக்க முடியாது. ஆனால் இமைகளை முடியுமல்லவா?

இமைகள் அழகு மட்டுமல்ல வெளிப்புற தூசுக்க்களிடமிருந்தும் நம்மை பாதுகாக்கும். எப்படி கண்ணிமையை பெரிதாக்குவது? இதை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெட்ரோலியம் ஜெல்லி :

பெட்ரோலியம் ஜெல்லி :

பெட்ரோலியம் ஜெல்லி உங்கள் இமைகளுக்கு தகுந்த ஈரப்பதத்தை தரும். போஷாக்கை தந்து வளரச் செய்யும்.

இரவில் ஒரு பஞ்சினால் வாசலின் போன்ற ஜெல்லியை தேய்த்து கண்ணிமை மீது தடவுங்கள். மறு நாள் காலை கழுவவும். கண்ணிமை தனித்து அழகாய் காணிபிக்கும்.

எலுமிச்சை தோல் :

எலுமிச்சை தோல் :

எலுமிச்சை தோல் உங்கள் இமைகளுக்கு பலமளிக்கும். அடர்த்தியான உதிராத இமைகளை வளரச் செய்யும்.

எலுமிச்சை தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து கொள்ளுங்கள். தினமும் இந்தன்பொடியை சிறிது எடுத்து ஆலிவ் எண்ணெயில் குழைத்து கண்களில் தடவுங்கள்.

15 நிமிடங்கள் கண்கள் மூடியே படுக்கவும். பிறகு கழுவுங்கள். இமைகள் மின்னும்.

 விட்டமின் ஈ :

விட்டமின் ஈ :

விட்டமின் ஈ கேப்ஸ்யூலிலிருந்து விட்டமின் ஈ எண்ணெயை எடுத்து கண்ணிமை மீது தடவி மசாஜ் செய்யுங்கள். மறு நாள் காலை கழுவவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை சம அளவு எடுத்து கலந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதனை கண்ணிமை மீது பூசி வாருங்கள். இது அடர்த்தியாக இமையை வளரச்செய்யும். உங்களுக்கு விரைவில் பலன் தரும் குறிப்பு இது.

கற்றாழை மற்றும் பாதாம் எண்ணெய் :

கற்றாழை மற்றும் பாதாம் எண்ணெய் :

கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது பாதாம் எண்ணெயை கலந்து கண்ணிமை மீது பூசுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவவும்.

இந்த குறிப்பு உங்கள் பாதிக்கப்பட்ட இமை முடிகளை சரி செய்து ஆரோக்கியமான இமைகள் வளர உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedies for weak eyelash

Home remedies for thicken eye lash and that really work
Story first published: Monday, October 3, 2016, 9:38 [IST]
Desktop Bottom Promotion