For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேப்பிலை தயிர் கலந்த மாஸ்க் உங்கள் சருமத்தில் போட்டால் என்னாகும்?

|

நிறைய சரும குறிப்புகளை உபயோகித்து களைத்து போய்விட்டீர்களா? என்ன செய்தாலும் சருமத்தில் பலனிள்ளை என்று தோன்றுகிறதா?

இந்த குறிப்பை உபயோகித்தால் நிச்சயம் அப்படி கூற மாட்டீர்கள். காரணம் சொல்லதேவையில்லை. உபயோகித்து பாருங்கள். நீங்களே சொல்லுங்கள்.

முகத்தில் உள்ள முகப்பரு, வறட்சி, கருமை, தழும்பு, சொரசொரப்பு சுருக்கம் என பல சரும பிரச்சனைகளையும் இந்த வேப்பிலை தயிர் மாஸ்க் போக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி தயாரிப்பது ?

எப்படி தயாரிப்பது ?

சில புதிதான வேப்பிலை பறித்து அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகம் , கழுத்து மற்று கைகளுக்கு தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும்.

அருமையான சருமப் பொலிவு :

அருமையான சருமப் பொலிவு :

நீங்கள் எதிர்ப்பார்ப்பதை போல அருமையாக சருமம் பொலிவு பெறும். அழுக்குகள், வெயிலினால் உண்டாகும் கருமை காணாமல் போய்விடும்.

 தழும்பு இருக்கிறதா?

தழும்பு இருக்கிறதா?

இந்த பேக் சருமத்தில் பாதிப்படைந்த செல்களை குணமாக்குகிறது. முகப்பருவினால் உண்டாகும் தழும்புகள். சிறு காயங்களின் தழும்புகளை மறையும். தினமும் உபயோகித்தால் தழும்புகள் போய் முகம் பளிச்சிடும்.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு :

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு :

இயற்கையாகவே சூரிய ஒளிக்கதிர்களை தடுக்கும் ஆற்றல் வேப்பிலை மற்றும் தயிருக்கு உண்டு. ஆகவே இவை புற ஊதாக்கதிர்களிடமிருந்து உங்களை பாதுகாக்கும்.

முகப்பருவை குறைக்கும் :

முகப்பருவை குறைக்கும் :

வேப்பிலையில் பேக்டீரியா எதிர்ப்புதிறன் அதிகம் இருக்கிறது. முகப்பருக்களின் மீது செயல்புரிந்து பருக்களை ஆற்றி, மேலும் வரவிடாமல் தடுக்கும்.

நிறத்தின் பொலிவை அதிகப்படுத்தும் :

நிறத்தின் பொலிவை அதிகப்படுத்தும் :

தயிரில் இயற்கையாக ப்ளீச்சிங் குணங்கள் இருக்கிறது. வெயிலினால் உண்டாகும் கருமையை போக்கி, நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.

சருமத்தை மென்மையாக்கும் :

சருமத்தை மென்மையாக்கும் :

உங்களுக்கு கடினமான சொரசொரப்பான சருமமா? இது உங்களை ஆச்சரியப்படும் வகையில் உங்கள் சருமத்தை மாற்றும். உண்மைதான். மிக மிருதுவாக இறகை போன்ற சருமம் தருகிறது. உபயோகித்துவிட்டு சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty benefits of Neem-Curd Facial mask

What happens when you apply Neem- curd mask on your skin?
Story first published: Thursday, October 6, 2016, 10:29 [IST]
Desktop Bottom Promotion