தென்னிந்திய பெண்களின் அழகைப் பாதுகாக்கும் மஞ்சளின் அழகு நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தென்னிந்திய பெண்களின் அழகிற்கு காரணமான மஞ்சளைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. மஞ்சள் சமையலில் மட்டுமின்றி, அழகைப் பராமரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. இதற்கு அதில் உள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை தான் காரணம். அக்காலத்தில் எல்லாம் பெண்கள் தினமும் மஞ்சள் தேய்த்து குளித்து வந்ததால் தான், அவர்களின் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருந்தது.

ஆனால் இன்றைய காலத்தில் மஞ்சள் தேய்த்து குளித்தால், ஆடைகளில் சாயம் ஒட்டிக் கொள்ளும் என்று பல பெண்களும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதை நிறுத்திவிட்டனர். அதுமட்டுமின்றி, தற்போது சூரியனின் புறஊதாக்கதிர்கள் நேரடியாக நம் சருமத்தை தாக்குவதால், மஞ்சளை தேய்த்துக் குளித்து வந்தால், சருமம் கருமையாகும். ஆகவே வெயிலில் அதிகம் செல்பவர்கள், அதனை அன்றாடம் தேய்த்துக் குளிக்காமல், அவ்வப்போது அதனைப் பயன்படுத்தி முகத்திற்கு மாஸ்க் ஏதேனும் போட்டு வந்தாலே, சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம். சரி, இப்போது சருமத்திற்கு மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருக்களை போக்க...

பருக்களை போக்க...

மஞ்சள் தூளுடன், சந்தன பொடி சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், பருக்களால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

ஸ்கரப்

ஸ்கரப்

மஞ்சள் தூளுடன் 2 துளிகள் கடுகு எண்ணெய் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.

கரும்புள்ளிகளை நீக்க...

கரும்புள்ளிகளை நீக்க...

மஞ்சள் பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து ஸ்கரப் செய்து கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

சரும சுருக்கம்

சரும சுருக்கம்

மஞ்சள் பொடியை மோர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சரும சருக்கம் மறையும்.

பொலிவான சருமம்

பொலிவான சருமம்

தினமும் குளிக்கும் முன், மஞ்சள் தூளில் வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, பின் தேய்த்து குளித்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு அழகாக இருக்கும்.

குதிகால் வெடிப்பு

குதிகால் வெடிப்பு

மஞ்சள் தூளை தேங்காய் எணணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, குதிகாலில் குளிக்கும் முன் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு நீங்கும்.

அழகாக சருமம்

அழகாக சருமம்

அழகாக ஜொலிக்க நினைத்தால், மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, குளிக்கும் முன், முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்.

நல்ல கிருமிநாசினி

நல்ல கிருமிநாசினி

வேப்பிலையுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை உடல் முழுவதும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் குளித்தால், உடலில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து, உடல் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Excellent Turmeric Powder Beauty Tips

Here are some excellent turmeric powder beauty tips. Take a look..
Story first published: Tuesday, February 24, 2015, 18:40 [IST]
Subscribe Newsletter