For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் சருமம் கருமையாகாமல் அழகாக இருக்க சில டிப்ஸ்...

By Maha
|

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கேற்ப இத்தனை நாட்கள் அழகாக பராமரித்து வந்த சருமத்தின் நிறமும் மாற ஆரம்பித்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் சரும பிரச்சனைகளும் அதிகரித்துவிட்டது. பொதுவாக கோடை வந்துவிட்டால், சருமத்தின் நிறம் கருமையாகி, பொலிவு இழந்து, பிம்பிள் வர ஆரம்பிக்கும்.

வெயிலால் கருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சில டிப்ஸ்...

இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், கோடையில் சருமத்தை முறையாக பராமரித்து வர வேண்டும். அப்படி பராமரித்து வந்தால், சருமத்தின் அழகு பாதுகாக்கப்படுவதோடு, சருமமும் மென்மையாக, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும். இங்கு கோடையில் சருமத்தின் அழகை பராமரிக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதனை தினமும் தவறாமல் பின்பற்றி வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் ப்ளீச்

பால் ப்ளீச்

4 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, வெயில் படும் இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையானது எண்ணெய் பசை சருமத்திற்கு சிறந்தது. மேலும் இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

தயிர் ப்ளீச்

தயிர் ப்ளீச்

4 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, அதில் சிறிது கார்ன் ஸ்டார்ச் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 2-3 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதுவும் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும்.

ஓட்ஸ் ஸ்கரப்

ஓட்ஸ் ஸ்கரப்

ஸ்கரப் செய்தால் சருமத் துளைகளில் தங்கியுள்ள இறந்த செல்கள் நீக்கப்படும். ஆனால் அளவுக்கு அதிகமாக செய்தால், அதுவே சருமத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதிலும் ஸ்கரப் செய்வதாக இருந்தால், ஓட்ஸ் ஸ்கரப் செய்யுங்கள். அதற்கு 1 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, அதனை சருமத்தில் தடவி 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஸ்கரப் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது.

தயிர் மற்றும் கடலை மாவு ஸ்கரப்

தயிர் மற்றும் கடலை மாவு ஸ்கரப்

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிங்சசை சாறு, 2-3 புதினா இலைகள், சிறிது தயிர் சேர்த்து கலந்து, அதனை நன்கு பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகளும் வெளியேறிவிடும்.

ஃபுரூட் பேக்

ஃபுரூட் பேக்

சருமத்தில் உள்ள கருமையை போக்கி, சருமத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமானால், அரைத்த அன்னாசி பழம், கிரேப் சீடு எண்ணெய், அரைத்த பப்பாளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு 20 நிமிடம் உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய் பேக்

வெள்ளரிக்காய் பேக்

சிலருக்கு கோடையில் பிம்பிள வர ஆரம்பிக்கும். அத்தகையவர்கள் 3-4 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பவுடர், புதினா இலைகள் மற்றும் துளசி இலைகள் சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், உடலில் உள்ள வெப்பம் வெளியேற்றப்பட்டு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்பட்டு, சருமம் பொலிவோடு இருக்கும்.

கற்றாழை

கற்றாழை

முக்கியமாக கோடையில் சருமத்தை பராமரிக்கும் போது கற்றாழையை பயன்படுத்த மறக்க வேண்டாம். ஏனெனில் அதில் உள்ள நன்மைகள் ஏராளம். மேற்கூறிய எதை வேண்டுமானாலும் செய்யாமல் இருக்கலாம். ஆனால் கற்றாழையின் ஜெல்லை தினமும் 2-3 முறை தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, சருமத்தின் அழகு அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Summer Skin Care

Take a heart and beat the heat this summer, maintaining your beauty and keeping your skin soft, supple and well nourished with these home-made summer skin care recipes...
Story first published: Tuesday, March 18, 2014, 11:36 [IST]
Desktop Bottom Promotion