For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரும அழகை அதிகரிக்க ஆசையா? அப்ப உருளைக்கிழங்கை யூஸ் பண்ணுங்க...

By Maha
|

அனைவருக்குமே சருமத்தின் அழகை அதிகரிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அந்த ஆசையால் பலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்துவதால், சருமத்தின் அழகானது அதிகரிப்பதற்கு பதிலாக, சருமத்தில் பிரச்சனைகள் தான் அதிகரித்திருக்கும்.

எனவே எப்போதும் சரும அழகை அதிகரிப்பதற்கு ஆசைப்படும் போது, இயற்கை வழிகளைப் பின்பற்றினால், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் சரும அழகை அதிகரிக்க முடியும். அதிலும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சருமத்தின் அழகை எளிதில் அதிகரிக்கலாம்.

இதுப்போன்று வேறு: இதுவரை கேட்டிராத சில பியூட்டி ட்ரிக்ஸ்...

அதில் தக்காளி, உருளைக்கிழங்கு, எலுமிச்சை, கடலை மாவு, முட்டை, தேன், தயிர் என்று பல பொருட்களைக் கொண்டு சரும அழகை அதிகரிக்க முடியும். இங்கு இவற்றில் ஒன்றான உருளைக்கிழங்கைக் கொண்டு சருமத்திற்கு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தின் அழகு அதிகரிக்கும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொலிவான சருமத்தைப் பெற...

பொலிவான சருமத்தைப் பெற...

உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவில் எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

வறட்சியான சருமம் நீங்க...

வறட்சியான சருமம் நீங்க...

சருமத்தில் உள்ள அதிகப்படியான வறட்சியை போக்கி, அழகை அதிகரிக்க வேண்டுமானால், வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் 2 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

சரும அழுக்குகளை நீக்க...

சரும அழுக்குகளை நீக்க...

வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை தோல் நீக்காமல் அரைத்து, பின் அதில் 1 முட்டை, சிறிது தயிர் மற்றும் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து மீண்டும் நன்கு கலந்து, சருமத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

இளமைத் தோற்றத்தை தக்க வைக்க...

இளமைத் தோற்றத்தை தக்க வைக்க...

உருளைக்கிழங்கை அரைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சாஸ் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

முகப்பரு தழும்புகளை மறைக்க...

முகப்பரு தழும்புகளை மறைக்க...

எலுமிச்சை சாறு, உருளைக்கிழங்கு சாறு மற்றும் முல்தானி மெட்டி ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, அதனை சருமத்தில் தடவி, நன்கு உலர வைத்து, முதலில் வெதுவெதுப்பான நீரில் அலசி, பின் குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

கண்களின் சோர்வை நீக்க...

கண்களின் சோர்வை நீக்க...

உருளைக்கிழங்கு துண்டுகளை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து, பின் அதனை கண்களின் மேல் வைக்க வேண்டும். இதனை கண்கள் சோர்வுடன் இருக்கும் போது செய்தால், கண்களின் சோர்வானது உடனே நீங்கும்.

கருவளையத்தை போக்க...

கருவளையத்தை போக்க...

உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கி, கண்களின் மேல் 20 நிமிடம் வைத்தால், உருளைக்கிழங்கில் உள்ள நொதியானது கருவளையத்தைப் போக்கும்.

சரும சுருக்கங்களைப் போக்க...

சரும சுருக்கங்களைப் போக்க...

தினமும் உருளைக்கிழங்கு சாற்றினை சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், சரும சுருக்கங்கள் மட்டுமின்றி, முகப்பரு, சரும நிற மாற்றம் போன்ற அனைத்தும் நீங்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Recipes With Potatoes

Potato masks can prove to be refreshing for your skin. Here are some of the beauty recipes with potato.
Story first published: Saturday, January 11, 2014, 11:27 [IST]
Desktop Bottom Promotion