குளிர்காலத்துல சருமத்தில் அதிக எண்ணெய் இருக்கா? இத படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

குளிர்காலத்தில் சருமம் அதிகமாக வறட்சியடைந்துவிடும். இதனால் வறட்சியைப் போக்குவதற்காக பல குளிர்கால க்ரீம்களை பயன்படுத்தி சருமத்தை ஈரப்பசையாக்குகிறோம். இல்லையெனில் சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு, சருமமே கெட்டதாக காணப்படும். ஆனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு, என்ன தான் குளிர்காலமானாலும், அதிகமான எண்ணெய் பசையானது சருமத்தில் இருக்கும். இருப்பினும் எந்த வகையிலும் வறட்சி ஏற்படக்கூடாது என்பதற்காக க்ரீம்களைப் பயன்படுத்துகின்றனர்.

இவற்றால் சருமத்தில் இன்னும் எண்ணெய் பசையானது அதிகரித்துவிடும். எனவே அவர்கள் இந்த குளிர்கால க்ரீம்களை பயன்படுத்தாமல் இருக்கின்றனர். அவ்வாறு எந்த ஒரு க்ரீமையும் பயன்படுத்தாமல் இருந்தால், சருமம் பொலிவற்று காணப்படும். இத்தகையவர்களுக்கு ஒரு சூப்பர் வழி இருக்கிறது. அது என்னவென்றால் வேறு என்ன இயற்கை வழி தான். சரி அந்த இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

Ways To Avoid Oily Skin This Winter

* பாலை வைத்து முகத்தை கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் வறட்சி ஏற்படாமலும் இருக்கும். எனவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், முகத்தை பாலால் கழுவி, பின்னர் நீரால் அலச வேண்டும். அதேப்போல் வெளியே செல்லும் முன் பாலை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு, பின் மைல்டு ஃபேஸ் வாஷ்ஷால் கழுவ வேண்டும். இதனால் சருமம் பொலிவோடு, போதுமான ஈரப்பசையுடன் இருக்கும். மேலும் இதனை தொடர்ந்து செய்து வந்தால், சருமம் எப்போதுமே பளிச்சென்று இருக்கும்.

* முகத்தை சுடு நீரால் கழுவினால் முகத்தில் உள்ள சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக எண்ணெயை சுரந்து, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயை தங்க வைக்கும். எனவே குளிர்காலத்தில், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் பருக்கள் ஏற்படுவது குறைவதோடு, பருக்கள் பரவுவதையும் தடுக்கலாம். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் பயன்படுத்தலாம்.

* பொதுவாக தக்காளி சாறானது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், தக்காளி சாறுடன், சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, மசாஜ் செய்ய வேண்டும். இதனால் எலுமிச்சை சாறு அதிகமான எண்ணெய், இறந்த செல்கள் போன்றவற்றை வெளியேற்றிவிடும். முக்கியமாக எலுமிச்சையை பயன்படுத்தினால், கழுவியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை தடவ வேண்டும்.

* சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க, வாரத்திற்கு 2 முறையாவது ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் ஓட்ஸ் அல்லது பாதாமை அடிப்படையாகக் கொண்ட ஸ்கரப்களை பயன்படுத்துவது நல்லது. இந்த ஸ்கரப் போடுவதற்கு முன், முகத்தை நீரால் நன்கு சுத்தமாக கழுவிக் கொண்டு, பின்னர் ஸ்கரப் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் ஸ்கரப் போட்ட பின் 1-2 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால், இறந்த செல்கள், கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் போன்றவை வெளியேறிவிடும்.

மேற்கூறியவாறெல்லாம் செய்தால், குளிர்காலத்திலும் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.

English summary

Ways To Avoid Oily Skin This Winter | குளிர்காலத்துல சருமத்தில் அதிக எண்ணெய் இருக்கா? இத படிங்க...

There are many winter creams in the market that guarantees an oil-free skin. However, everything fails. So, here are few natural home remedies to avoid oily skin during winters.
Story first published: Friday, December 21, 2012, 18:07 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter