For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

க்ரீம் மசாஜ் பண்றீங்களா? சருமத்திற்கு ரொம்ப நல்லதாம்!!!

By Maha
|

நிறைய பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று சருமத்திற்கு க்ரீம் மசாஜ் செய்வார்கள். ஏனெனில் அந்த மசாஜில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த மசாஜை நாமாக செய்வதை விட, மற்றவர்கள் செய்துவிட்டால் தான், நன்றாக இருக்கும். அதிலும் அவ்வாறு ஃபேஷியல் க்ரீம் மசாஜை பெண்கள் மட்டும் செய்யாமல், ஆண்களும் செய்கின்றனர். அப்படி அந்த மசாஜில் என்ன நன்மை தான் இருக்கிறதென்று கேட்கிறீர்களா? சரி, அது என்ன நன்மையென்று இப்போது பார்ப்போமா!!!

Cream Massage
க்ரீம் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

ஈரப்பசை- க்ரீமை வைத்து மசாஜ் செய்தால், சருமத்தில் வறட்சி ஏற்படாமல், சருமம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும். அதிலும் க்ரீமை வைத்து செய்யும் போது குறைந்தது 10-15 நிமிடம் மசாஜ் செய்வதால், சரும செல்கள் அனைத்தும் நன்கு ஈரப்பசை அல்லது எண்ணெய் பசையை அடைகின்றன. மேலும் நீண்ட நேரம் மசாஜ் செய்வதால், சருமத்தில் உள்ள பல லேயர்களிலும் அந்த ஈரப்பசை ஊடுருவி, நீண்ட நாட்கள் சருமம் நன்கு மென்மையோடு இருக்கின்றன.

சுருக்கங்கள்- சருமத்திற்கு மசாஜ் செய்வதால், சருமத்தில் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் நீங்குகின்றன. அதாவது ஃபேஷியல் க்ரீமை வைத்து மசாஜ் செய்வதால், சருமம் தளர்ந்து இருப்பது இறுக்கடைந்து, ஒரு இளமைத் தோற்றத்தை தருகின்றன. அதனால் தான் நிறைய அழகு நிபுணர்கள், 25-27 வயதிற்கு மேல் ஆனவர்கள் மாதத்திற்கு ஒருமுறை க்ரீம் மசாஜை செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர்.

அழகு- அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்தால், அனைத்து நிலையங்களிலும் இறுதியில் ஒரு க்ரீமை வைத்து மசாஜ் போன்று செய்வார்கள். ஏனெனில் அவ்வாறு செய்தால், சருமம் சற்று அழகாக பட்டுப் போன்று பொலிவோடு காணப்படும் என்பதால் தான். மேலும் அந்த க்ரீம் சரும செல்களை மென்மையாக்குகின்றன. ஆகவே அதனால் கூடுதல் அழகு கிடைக்கும்.

சீரான இரத்த ஓட்டம்- சாதாரணமாக மசாஜ் செய்தாலே உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிலும் முகம் நன்கு பொலிவோடு இருக்க க்ரீமை வைத்து மகாஜ் செய்தால், முகத்திலும் சரியாக இரத்த ஓட்டம் அமைவதோடு, பிம்பிள் நீங்கி, சருமம் மிகவும் புத்துணர்ச்சியோடு அழகாக காணப்படும்.

அழகான கன்னம்- முகத்திற்கு க்ரீமை வைத்து மசாஜ் செய்தால், கன்னங்கள் நன்கு அழகாக கொலுகொலுவென்று இருக்கும். ஏனென்றால் மசாஜ் செய்யும் போது, கிரீமை வைத்து நன்கு இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுழற்றி மசாஜ் செய்வதால், கன்னங்களில் உள்ள எலும்புகள் நன்கு வடிவத்தை பெறுகின்றன. அதனால் கன்னங்களும் கொலுகொலுவென்று அழகாக மாறுகின்றன.

ஆகவே மாதத்திற்கு ஒரு முறை முகத்திற்கு க்ரீமை வைத்து மசாஜ் செய்யுங்கள், பொலிவோடு அழகாக மின்னுங்கள்.

English summary

Benefits Of Cream Massage On The Face | க்ரீம் மசாஜ் பண்றீங்களா? சருமத்திற்கு ரொம்ப நல்லதாம்!!!

You must have heard and seen many ladies going for a facial cream massage. Many benefits of a cream massage push them towards the parlour. And why only women, even men go for a facial cream massage these days. Here are some of the benefits of a cream massage.
Story first published: Saturday, September 29, 2012, 15:22 [IST]
Desktop Bottom Promotion