Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி பால் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - தித்திப்பா சூப்பரா இருக்கும் -
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம் -
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
ஆடி மாத ராசிபலன் 2026: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சுய ஒழுக்கமுள்ளவர்களாம் - வெற்றியும், செல்வமும் இவர்களை தேடிவருமாம் - உங்க ராசி என்ன -
Aadi 2026: ஆடி முதல் நாளில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி? - விளக்கும் தேச மங்கையர்கரசி!
Skin Care Tips In Tamil: தக்காளி போல உங்க சருமம் தளதளன்னு ஜொலிக்க... தக்காளியை இந்த 3 வழிகள யூஸ் பண்ணுங்க..!
Skin Care Tips In Tamil: தக்காளி உணவுக்கு ஒரு சுவையான கூடுதலாக மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த மூலப்பொருளாகவும் இருக்கிறது. ஆம், தக்காளி விலை எப்போதும் ஏற்ற, இறக்கத்தோடு இருக்கும். விலை மலிவாக இருக்கும்போது, நீங்கள் தாராளமாக தக்காளியை பயன்படுத்தலாம்.
தக்காளி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேநேரம் பல சரும ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளதை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சிலருக்கு சரும துளைகள் விரிவடைந்து காணப்படலாம். இது முகப்பரு, பொலிவிழந்த சருமம் மற்றும் கோடுகளை சருமத்தில் உருவாக்கலாம்.

தக்காளியில் உள்ள பண்புகள் சரும துளைகளை இறுக்கி, மென்மையான, ஆரோக்கியமான சருமத்தை உங்களுக்கு வழங்க உதவுகிறது. உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் தக்காளியை இணைப்பதற்கான பயனுள்ள வழிகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
தக்காளியைப் பயன்படுத்துவதற்கான வழிகள்
உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் தக்காளியை இணைத்துக்கொள்வது, சரும துளைகளை இறுக்கி, மென்மையான, ஆரோக்கியமான சருமத்தை பெற உங்களுக்கு உதவும். அத்துடன் தக்காளி போல ஜொலிக்கும் சருமத்தையும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே பெறலாம்.
தக்காளி மற்றும் தேன் மாஸ்க்
நன்றாக பழுத்த தக்காளியை அரைத்து சாற்றை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில், இரண்டு தேக்கரண்டி தக்காளி சாறுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த பேஸ்டை உங்கள் முகம் முழுவதும் தடவுங்கள். சரும துளைகள் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.
தக்காளியின் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் அவற்றின் வேலையை செய்ய, 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். சிறந்த தீர்வுகளுக்கு இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.
தக்காளி மற்றும் எலுமிச்சை டோனர்
வீட்டில் டோனர் தயாரிக்க, உங்களுக்கு ஒரு பழுத்த தக்காளி மற்றும் அரை எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தக்காளியை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். அரை எலுமிச்சை பழத்தில் இருந்து சாற்றை பிழிந்து தக்காளி சாற்றில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்திய பிறகு, பருத்தித் துண்டுகளைப் பயன்படுத்தி டோனராக இந்த கலவையை முகத்தில் பயன்படுத்துங்கள். சரும துளைகள் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு இந்த டோனரை தினமும் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
தக்காளி மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
சரும துளைகளை இறுக்க உதவும் மென்மையான உரித்தல் சிகிச்சைக்கு, தக்காளி மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்பை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம். ஒரு சிறிய கிண்ணத்தில், இரண்டு தேக்கரண்டி தக்காளி சாறு ஒரு தேக்கரண்டி சர்க்கரையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். முகத்தை சுத்தப்படுத்தி, வட்ட இயக்கங்களில் கலவையை மெதுவாக முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
சர்க்கரை ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படும், அதே நேரத்தில் தக்காளி சரும துளைகளை இறுக்க உதவுகிறது. சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி உலர வைக்க வேண்டும். மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்த ஸ்க்ரப் பயன்படுத்தலாம்.
இறுதிக் குறிப்பு
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று இயற்கை வைத்தியங்களை நீங்கள் பயன்படுத்தினால், விரிவடைந்த சரும துளைகளின் தோற்றத்தை மேம்படுத்த உதவும். முடிவுகள் மாறுபடலாம் என்பதால், இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சி செய்தவுடன் பலன் கிடைக்கும் என்று எதிர் பார்க்க வேண்டாம். பொறுமையாக இருங்கள்.
இதை தொடர்ந்து பயன்படுத்துங்கள். மந்தமான தோற்றமுடைய சருமத்திற்கு குட்பை சொல்லுங்கள், தக்காளியின் சக்தியுடன் கூடிய பொலிவான சருமத்தை நிறத்தை பெறுங்கள்.



Click it and Unblock the Notifications
