For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.

பேஷன் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் ஆனால் ஸ்டைல் எப்போதும் மாறாத ஒன்று. அதாவது ஒரே மாதிரியான பாணி தான் தொடரும். உங்களின் தோற்றத்தில் தெரியும் சிறிய மாற்றத்தைக் கூட சுற்றி இருப்பவர்கள் கவனித்துக் கொண்

|

பேஷன் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் ஆனால் ஸ்டைல் எப்போதும் மாறாத ஒன்று. அதாவது ஒரே மாதிரியான பாணி தான் தொடரும். உங்களின் தோற்றத்தில் தெரியும் சிறிய மாற்றத்தைக் கூட சுற்றி இருப்பவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள். குறிப்பாக முதல் முறை ஒருவரைப் பார்க்க நீங்கள் செல்கிறீர்கள் என்றால் உங்களின் தோற்றம் மிக முக்கியம். உங்களை முதல் முறை அவர்கள் பார்க்கும் போதே உங்களுடைய உடைகளை வைத்து உங்களைக் கணித்து விடுவார்கள். அப்படியென்றால் உங்கள் உடைகளில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்தியே ஆக வேண்டும்.

Wardrobe Mistakes that Haunting Men

அழகு என்பது ஆடைகளை வைத்துத் தீர்மானிக்கும் விஷயம் இல்லை என்றாலும் உங்களின் பெர்சனாலிட்டியைத் தீர்மானிக்க மற்றவர்கள் கடைப்பிடிக்கும் ஒரே ஆயுதம் உங்களின் ஆடைகள் தான். எனவே உங்களை பெர்சனாலிட்டியுடன் காட்டிக் கொள்ளுவதற்கு நீங்கள் சில அடிப்படையான உதவி குறிப்புகளைப் பின்பற்றுங்கள். அவை உங்களை நவநாகரீகமாகவும் அழகாகவும் வெளிப்படுத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போர்மல் ஷர்ட்

போர்மல் ஷர்ட்

நீங்கள் அணியும் போர்மல் ஷர்ட் எப்போதும் இன் செய்து போடக் கூடாது. அதிலும் வெள்ளை ஷர்ட் என்பது கோர்ட் சூட் அணிவதற்கு உள்ளே பயன்படுத்தும் ஒன்று. அந்த சட்டையை நீங்கள் ஃபார்மல் ஷர்ட் ஆக அணியக் கூடாது. அப்படி வெள்ளை சட்டை அணிய வேண்டுமானால் கண்டிப்பாக இன் செய்து தான் அணிய வேண்டும். மற்ற வண்ணங்களில் உள்ள சட்டைகளை மிக பிட் ஆக அணிந்து ஸ்டைலிஷ் லுக் கொடுங்கள்.

சாக்ஸ்

சாக்ஸ்

நீங்கள் அணியும் ஷூக்கு எப்போதும் சாக்ஸ் அணியக் கூடாது. நீங்கள் அணியும் பீச் ஷூ மற்றும் சாண்டல் ஷூக்களுக்கு மட்டுமே சாக்ஸ் அணிய வேண்டும் மற்ற நேரங்களில் சாக்ஸ் அணிவதைத் தவிருங்கள். ஏனெனில் நீங்கள் அணியும் சாக்ஸ் உங்கள் பாதங்களுக்குள் காற்றினை செல்லவிடாமல் தடுத்து துர்நாற்றத்தினை ஏற்படுத்தும். அப்படியில்லையெனில் நீங்கள் ஹல்ப் சாக்ஸ் அணியலாம். இது உங்கள் பாதங்களை மட்டும் மறைப்பதால் மேல் கால்கள் வழியாகக் காற்று உள்ளே செல்ல வழி கிடைக்கும்.

ஷர்ட் உயரம்

ஷர்ட் உயரம்

கேசுவல் ஷர்ட் எப்போதும் எல்லா இடங்களுக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும். ஆனால் அந்த ஷர்ட் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும் என்பதும் உண்டு அதாவது நீங்கள் அணியும் ஷர்ட் எப்போதும் உங்களின் மணிக்கட்டு வரை உயரம் கொண்டதாகவும் பான்ட் பாக்கெட்க்கு குறைவான உயரம் கொண்டதாகவும் இருக்கக் கூடாது.

ஷர்ட் பட்டன்

ஷர்ட் பட்டன்

கேசுவல் ஷர்ட் எப்போதும் எல்லா இடங்களுக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும். ஆனால் அந்த ஷர்ட் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும் என்பதும் உண்டு அதாவது நீங்கள் அணியும் ஷர்ட் எப்போதும் உங்களின் மணிக்கட்டு வரை உயரம் கொண்டதாகவும் பான்ட் பாக்கெட்க்கு குறைவான உயரம் கொண்டதாகவும் இருக்கக் கூடாது.

வாட்ச்

வாட்ச்

சில ஆண்கள் எல்லா வித அலங்காரப் பொருட்களையும் ஒரே நேரத்தில் அணிந்து தனது பேஷனை வெளிப்படுத்துகிறார்கள். கைகளில் வாட்ச், ரோப், ப்ரஸ்லேட் , பெல்ட் போன்ற எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அணிவது பேஷனை வெளிப்பதும் விதம் அல்ல. உங்களின் தோற்றத்தை உயர்த்தும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு அலங்காரப் பொருட்களை மட்டும் அணிந்தால் போதுமானது.

ஜீன்ஸ்

ஜீன்ஸ்

ஆடைகளில் மிக முக்கியமான ஒன்று நீங்கள் அணியும் ஜீன்ஸ் தான். எனவே எப்போதும் நீங்கள் அணியும் ஜீன்ஸ் உங்கள் உடலுக்கு ஏற்ற பிட் ஆன ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் மிகவும் ஒல்லியாக இருப்பதாலோ அல்லது குண்டாக இருப்பதாலோ பெரிய ஜீன்ஸ்களை வாங்கி தோற்றத்தை மறைக்கலாம் என்று நினைத்தால் அது உங்கள் தோற்றத்தை மேலும் மோசமாகக் காட்சியளிக்க வைக்கும் எனவே உங்களின் உடலுக்கு ஏற்ற பிட் ஆன ஒன்றை அணியுங்கள்.

உள் ஆடை

உள் ஆடை

உங்களின் ஷர்ட்க்குள் இன்னொரு டி-ஷர்ட் அணிவது ஷர்ட்களில் கறை படியாமல் இருப்பதற்காகவும் வியர்வையிலிருந்து ஷர்ட் வீணாகாமல் இருப்பதற்காகவும் மட்டும் தான் எனவே நீங்கள் அணியும் அந்த உள்ளாடைகள் வெளிப்படையாகத் தெரியாமலும் உங்களின் ஷர்ட்க்கு ஏற்ற நிறத்திலும் இருக்க வேண்டும். எனவே எப்போதும் உங்கள் ஆடைகளில் கவனம் செலுத்தி மற்றவர்களை ஈர்த்திருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion dress actress
English summary

Wardrobe Mistakes that Haunting Men

Fashion changes all the time but it’s the style that stays. People notice even the smallest details in one’s appearance, especially when meeting them for the first time. there’s no universal rule on how to “look good” but there are some basic tips that can make men look more trendy and appealing.
Story first published: Wednesday, September 18, 2019, 18:24 [IST]
Desktop Bottom Promotion