For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷேவிங் செய்து கனவான் போல் தோற்றமளிக்க வேண்டுமா...? இதோ சில டிப்ஸ்...

By Super
|

மிகச்சரியாக ஷேவிங் செய்து கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் புத்துணர்வைக் கொடுக்கும். இந்த புத்துணர்ச்சி உங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கும். முக்கியமான சந்திப்பு அல்லது நீங்கள் சிறப்பாக தோற்றமளிக்க வேண்டிய முக்கியமான நாள் என எதுவாக இருந்தாலும் அந்த வேளைகளில் ஒரு கனவான் போல நீங்கள் தோற்றமளிக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தவொரு பெண்ணும் சொரசொரப்பான முகங்களை விரும்புவதில்லை, சில நேரங்களில் அவர்களுக்கு அது எரிச்சலூட்டுவதாகவும், ஆண்கள் தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற உணர்வையும் பெண்களுக்கு ஏறப்படுத்தி விடும். பெண்களிடம் காதலுணர்வை தூண்டுவது சொரசொரப்பான முகங்களை உடையவர்களுக்கு மிகவும் கடினமான விஷயமாகவே உள்ளது.

நீங்கள் ரேஸரை எடுத்து ஒவ்வொரு முறையும் ஷேவிங் செய்து முடித்தவுடன் கனவான் போல் தோற்றமளிக்க விரும்பினால், அதற்காக சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம். முகச்சவரத்தை தோலுக்கு மிகவும் ஆழமாக செய்ய உதவும் என்று சந்தைகளில் விற்கும் மல்டிபிள் பிளேடுகள், ஜெல்கள் மற்றும் கிரீம்களின் விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து விட வேண்டாம். மிகச்சரியான ஷேவிங் செய்வதற்கான முறையான நுட்பங்கள் பலவும் இந்த விளம்பரப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. நீங்கள் எப்படி நுரையை வரவழைக்கிறீர்கள் மற்றும் ஈரப்படுத்துகிறீர்கள் என்பது தான் பிளேடில் கை வைக்கும் முன்னர் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

Tips To Shave Like A Gentleman

* உங்கள் தாடியில் கை வைப்பதற்கு முன்னர் அதனை ஈரப்பதத்திற்குள்ளாக்குவது தான் முதல் ஏற்பாடாகும். ஈரமான முடிகள் அதிகளவு கிரீம்களை கிரகித்துக் கொண்டு, நுரையை அதிகளவில் வெளிப்படுத்துகின்றன. இரண்டாவதாக, மிகவும் அதிகமான நெகிழ்வுத்தன்மை கொண்ட தரமான கிரீம்களை பயன்படுத்தி நுரைப்படலத்தை உருவாக்கவும். நீங்கள் பயன்படுத்தும் பிளேடு கூர்மையானதாக இருக்க வேண்டும். ஷேவிங் செய்து முடித்த பின்னர், ஆப்டர் சேவ் மற்றும் மாய்ஸ்ட்ரைஸர்களை முகத்தில் தெளித்து குளுமைப்படுத்த வேண்டியதும் அவசியம் என்பதை மறந்து விட வேண்டாம்.

* ஷேவிங் செய்வதற்கு சற்று முன்னரே ஷேவ் செய்யும் பகுதியில் ஈரப்பதத்தை உருவாக்குவது முக்கியமானது. முகத்தில் உள்ள முடிகளில் ஈரப்பதம் படும் போது, அவை மென்மையாகவும், தளர்வாகவும் இருப்பதால், சவரம் செய்யும் போது முடியை எளிதில் வெட்டி நீக்க முடியும். ஷேவிங் செய்யும் முன்னர் மிதவெப்பமான தண்ணீரில் குளிப்பதோ அல்லது கிளீன்ஸிங் பேஸ் வாஷ் பயன்படுத்துவதோ நல்லது.

* எப்பொழுதும் தரமான கிரீம்கள் மற்றும் ஜெல்களை பயன்படுத்தவும். குறைந்த தரமுடைய பொருட்களில் சுத்தமான ஷேவிங் செய்வதற்கான நுரைகள் அதிகம் வருவதில்லை. நல்ல அடர்த்தியான ஜெல் அல்லது கிரீம்களை பயன்படுத்தும் போது, நுரையின் அளவும் அதிகமாக இருக்கும். அதனால் முகத்தில் உள்ள முடியுடன் நுரை ஆழமாக புகுந்து, ஆழமான சவரம் செய்ய முடியும்.

* நெகிழ்வான மற்றும் மென்மையான சேவிங் பிரஷ்களை தேர்ந்தெடுப்பது நல்லது. கனவான்களைப் போன்ற தோற்றத்தை தரச்செய்யும் வகையில் போதுமான அளவில் நுரைகளை பொங்கச் செய்வதே நல்ல தரமான சேவிங் பிரஷ்ஷின் வேலையாகும். எனவே சரியான அளவிலான மென்மை மற்றும் உறுதிமிக்க பிரஷ்களை தேர்ந்தெடுக்கவும்.

* கனவான்களைப் போன்ற ஷேவிங் செய்யும் விஷயத்தை முடிவு செய்யும் சிக்கலான கருவி தான் நீங்கள் பயன்படுத்தும் ரேசர். கூர்மையான பிளேடுகளைக் கொண்ட சிறந்த ரேஸர்களை தேர்ந்தெடுத்தால் தான் மென்மையாக சவரம் செய்ய முடியும். இந்த பிளேடுகள் கூர்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மற்றுமொரு முக்கியமான விஷயமாகும். கூர்மையற்ற பிளேடுகளை எப்பொழுதும் பயன்படுத்த வேண்டாம், அவை தோலை வெட்டி சேதப்படுத்தி விடும்.

* ரேசர்களை முறையாக பயன்படுத்துவது என்பது பயன்பாட்டின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாகும். இவற்றை பயன்படுத்த எந்தவித குறிப்பிட்ட வழிமுறைகளும் இல்லாவிடினும், அவை உங்கள் முகம் மற்றும் தோல்களில் சரியான விளைவுகளை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 1-2 அங்குல அளவிற்குள்ளாக மட்டுமே பிளேடை இழுத்துச் செல்லுங்கள். நீண்ட தூரத்திற்கு இழுத்து மழிக்க வேண்டாம். பிளேடுகளை சுத்தம் செய்ய மிதவெப்பமான தண்ணீரைப் பயன்படுத்தினால், ஷேவிங் செய்த இடம் மென்மையாக இருக்கும்.

* ரேசரின் பங்கு முடிந்த பின்னர், சவரம் செய்யப்பட்ட தோலை கவனிக்க வேண்டும். எவ்வளவு தான் முன்னேற்பாடுகளுடன் சவரம் செய்திருந்தாலும் சிறிய வெட்டுகள், காயங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது. இவை நுண்ணிய அளவில் இருப்பதால் கண்களுக்கும் சரியாக தெரிவதில்லை. இந்த குறைகளை களைய தேநீர் மர எண்ணைய் (Tea Tree Oil) அல்லது ஆன்டி-செப்டிக் க்ரீம்களை ஷேவிங்கிற்குப் பின்னர் தோலில் தடவலாம்.

* ஷேவிங் செய்து முடித்த பின்னர் உங்கள் தோலை தடவிக் கொடுக்க வேண்டியதும் அவசியமான விஷயமாகும். நீங்கள் ஒரு அடுக்கையோ அல்லது தோலின் 2-வது அடுக்கையோ கூட சவரம் செய்திருப்பீர்கள். எனவே தற்போது நீங்கள் கொண்டிருக்கும் அடியிலிருந்து வெளி வந்த புதிய தோலை பாதுகாப்பதற்காக அதன் மீது தரமான மாய்ஸ்ட்ரைஸர் மற்றும் ஆஃப்டர் சேவ் கிரீம்களை தடவ வேண்டும்.

English summary

Tips To Shave Like A Gentleman

To get a gentleman like shave each time you pick up the razor, you have to do some prep work before you put the razor to work. There are techniques that are laid out for a perfect shave well before these grooming stuff were invented. The most important part being how well you lather and moisten your stubble before you start using the blade.
Story first published: Monday, November 25, 2013, 19:33 [IST]
Desktop Bottom Promotion