Just In
- 1 hr ago
வார ராசிபலன் (07.03.2021 முதல் 13.03.2021 வரை) - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…
- 2 hrs ago
இன்றைய ராசிப்பலன் (07.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது…
- 12 hrs ago
இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...!
- 13 hrs ago
இந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்... ஏனா இவங்க சைக்கோத்தனமா காதலிப்பாங்களாம்...!
Don't Miss
- News
எவ்வளவு போராட்டம், பதைபதைப்பு.. தமிழகத்தில் கொரோனா பரவி இன்றோடு ஒரு வருடம்.. தற்போது நிலை என்ன?
- Automobiles
மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?
- Movies
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'ஸ்டைல் மன்னனின்' வித்தியாசமான ஹேர் ஸ்டைல்கள்!!!
உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஒரே ஹீரோ தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவ்வளவு ரசிகர்களைப் பெற்ற இவர் ஒவ்வொருவரது வீட்டிலும் ஒரு குடும்ப உறுப்பினர் போன்று வாழ்ந்து வருகிறார். அதிலும் சிறு குழந்தையிடம் சென்று சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால், ரஜினிகாந்த் என்று சொல்லும் அளவில் இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிகர்களைக் கொண்டு, அவர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.
இவ்வளவு ரசிகர்களைப் பெறுவதற்கு காரணம், இவரது ஸ்டைல் தான். அதுமட்டுமின்றி, மக்கள் இவரது நடை, உடை, பாவணை என்று அனைத்தையும் தான் ரசிக்கிறார்கள். இத்தகையவற்றால் மக்களைக் கவர்ந்த ஸ்டைல் மன்னாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டிசம்பர் மாதம் 12 ஆம் தேதியாகிய இன்று பிறந்தார். இந்நாளில் இதுவரை இவர் மேற்கொண்ட சில ஹேர் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

நேர் உச்சியில் ரஜினி
இது 'ஜானி' படத்திற்காக மேற்கொண்ட ஹேர் ஸ்டைல். இந்த ஸ்டைலில் ரஜினிகாந்த் வித்தியாசமான லுக்கில் உள்ளார்.

நீளமான முடி
இது முரட்டுக்காளை படத்திற்கு வைத்த ஹேர் ஸ்டைல். இவர் மேற்கொண்ட ஹேர் ஸ்டைலிலேயே இது தான் வித்தியாசமானது.

அலெக்ஸ்பாண்டியன் கெட்டப்
அலெக்ஸ்பாண்டியன் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, அந்த மொசுமொசு முடியும், வாயில் பான்ப்ராக்கும் தான்.

பரட்டை தலை
ரஜினியின் ஹேர் ஸ்டைல் என்றாலே அது தளபதி படத்தில் மேற்கொண்டது தான். இந்த ஹேர் ஸ்டைலில் தான் சில நாட்கள் பல படங்களில் நடித்தார்.

பாட்ஷா ஸ்டைல்
இதுவும் தளபதி படத்தில் மேற்கொண்ட அதே பரட்டை தலை ஸ்டைல் தான். இருப்பினும் இவருக்கு இந்த ஸ்டைல் தான் பொருத்தமாக இருக்கும்.

மெஸ்ஸி
ரஜினிகாந்த் படையப்பாவில் மெஸ்ஸி ஹேர் ஸ்டைலை மேற்கொண்டிருந்தார். இந்த ஸ்டைல் தான் இவருக்கு பொருத்தமான ஹேர் ஸ்டைல் என்று கூட சொல்லலாம். ஏனெனில் இந்த படத்தில் இவர் அவ்வளவு அழகாக இருந்தார்.

மொட்டை பாஸ்
இதுவரை மொட்டை அடிக்க கூச்சப்பட்ட ஆண்கள், 'சிவாஜி' படம் வந்த பிறகு மொட்டையை ட்ரெண்ட்டாக கொண்டு வந்துவிட்டனர். ஏனெனில் அந்த படத்தில் ரஜினிகாந்த் மொட்டை பாஸ் போன்று வந்ததோடு, வித்தியாசமான தாடியை வைத்துக் கொண்டு படு ஸ்டைலாக வந்து அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

சைடு ஸ்வெப்ட்
இது சாதாரணமாக அனைவரும் மேற்கொள்ளும் ஸ்டைல் தான். ஆனால் இதையே சற்று வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்த வேண்டுமானால், 'எந்திரன்' படத்தில் ரஜினி மேற்கொண்ட தாடியை வைத்துக் கொண்டால் சூப்பராக இருக்கும்.

எந்திரன் ரோபோ ஸ்டைல்
இது பைரவி படத்தில் மேற்கொண்ட ஹேர் ஸ்டைலாக இருந்தாலும், அதனை எந்திரன் படத்தில் மேற்கொண்டு புது ட்ரெண்ட்டாக்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்.

முள்ளம்பன்றி
எந்திரன் படத்திலேயே பல்வேறு கெட்டப்புகளை மேற்கொண்டுள்ளார் ரஜினி. அதில் ஒன்று தான் படத்தில் காட்டப்பட்ட முள்ளம்பன்றி ஹேர் ஸ்டைல்.

கோச்சடையான்
எவ்வளவு தான் இது ஒரு அனிமேஷன் படமாக இருந்தாலும், அந்த படத்தில் ரஜினிக்கு போர்வீரன் போன்ற கெட்டப்பிற்கு ஏற்றவாறு, கொண்டை ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு, இந்த ஸ்டைலும் தனக்கு நன்றாக இருக்கும் என்று வெளிக்காட்டுகிறார்.

நிஜ லுக்
இதுவரை பல்வேறு ஹேர் ஸ்டைலில் பார்த்த நம் சூப்பர் ஸ்டாரின் ரியல் லுக் இது தாங்க...