For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா? இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...

நைட் அவுட் போகின்ற பொழுது நிறைய பேருக்கு எப்படி மேக்அப் போடுவது என்பது தெரிவதில்லை. பகலில் மேக்கப் போடுவது போன்றே இரவிலும் போடுகிறார்கள். அதுபற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கப் போகிறோம்.

|

உங்க லவ்வர் உங்களை இரவு டின்னருக்கு அழைத்து இருக்காறா? இல்லை இரவு பெரிய பார்ட்டி இருக்கா? அல்லது இரவு நேர நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கிறீர்களா? அப்படி என்றால் கண்டிப்பா எல்லாரும் பெரிதும் நினைத்து கவலைப்படும் விஷயம் நம் தோற்றம் தான். காரணம் இரவு நேரத்தில் எப்படி மேக்கப் போட வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை.

மேக்கப் அதிகமாக போடணுமா இல்ல குறைக்கணுமா போன்ற நிறைய குழப்பங்கள் ஏற்படும். அதிலும் இரவு நேர லைட்டனிங்க்கு தகுந்த மாதிரி வேற நாம் மேக்கப் போட வேண்டும். அப்பொழுது தான் நீங்க ஜொலிக்க முடியும். இப்படி நிறைய மெனக்கெடல்கள் இருப்பதால் நாங்கள் உங்களுக்கு சில மேக்கப் டிப்ஸ்களை இங்கே வழங்க உள்ளோம். சரி வாங்க பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முற்றிலும் வேறுபட்டது

முற்றிலும் வேறுபட்டது

பெரும்பாலான பெண்கள் இன்றளவும் உணராத விஷயம் என்னவென்றால் இரவு நேர மேக்கப் பகல் நேர மேக்கப்பை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. இந்த வரம்புகளை புரிந்து கொண்டு மேக்கப் பட்டால் நீங்களும் அழகு தேவதை தான். பொதுவாக பகல் நேரத்தில் மேக்கப் போடும் போது சற்று மென்மையாக லேசாக போட வேண்டும். இரவு நேரங்களில் கொஞ்சம் அடர்த்தியான ஆழமான மேக்கப் யுக்திகள் தேவைப்படுகிறது.

எனவே உங்கள் மேக்கப் கலையை சரி செய்ய நாங்கள் சொல்லும் டிப்ஸ்களை ஃப்லோ செய்து பாருங்கள்.

MOST READ: உயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ

ப்ரைமர் அவசியம்

ப்ரைமர் அவசியம்

கண்டிப்பாக மேக்கப் போடும் போது முதலில் ப்ரைமர் தான் பயன்படுத்த வேண்டும். இது உங்கள் மேக்கப் கலையாமல் இருக்க உதவுவதோடு முகத்தில் உள்ள சரும துளைகளை மறைத்து ஸ்மூத் ஆன லேயரை கொடுக்கும். பவுண்டேஷன் அப்ளே செய்வதற்கு முன் முகத்தில் T வடிவில் ப்ரைமரை அப்ளே செய்யுங்கள். கண்டிப்பாக நல்ல வித்தியாசம் தெரியும்.

டீவி பவுண்டேஷன்

டீவி பவுண்டேஷன்

நைட் டைம் மேக்கப் என்றால் அதில் டீவி பவுண்டேஷன் முக்கியம். இது உங்கள் முகத்திற்கு அந்த இரவு நேரத்தில் ஒரு ஜொலிப்பை கொடுக்கும்.

பவுடர் மேக்கப் வேண்டாம்

பவுடர் மேக்கப் வேண்டாம்

பகல் நேரத்தில் வேண்டும் என்றால் பவுடர் பொருட்கள் நல்ல தோற்றமளிக்கலாம். ஆனால் இரவு நேரங்களில் இது பார்ப்பதற்கு திட்டு திட்டாக பிசின் போன்று இருக்கும். எனவே இரவு நேர மேக்கப்பிற்கு பவுடருக்கு பதிலாக க்ரீம்களை பயன்படுத்தி வரலாம்.

MOST READ: கூகுள்ள வேலைய விட்டுட்டு நாடு முழுக்க 93 ஏரிய தூர் வாரியிருக்காரு... நம்ம சென்னைப்பையன்

ஸ்மோக்கி ஐ மேக்கப் மற்றும் ஸ்ம்மர்

ஸ்மோக்கி ஐ மேக்கப் மற்றும் ஸ்ம்மர்

இரவு நேரங்களில் வெளியே செல்பவர்கள் பெரும்பாலும் ஸ்மோக்கி ஐ மேக்கப்பை தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இது பார்ப்பதற்கு அழகாக நேர்த்தியாக கச்சிதமாக இருக்கும். இதனுடன் நீங்கள் ஸ்ம்மர் மற்றும் கொஞ்சம் க்ளிட்டர் கூட பயன்படுத்தி கொள்ளலாம். இது உங்கள் கண்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும். இரவு நேரங்களில் கூட உங்கள் கண்கள் மின்னும்.

கீழ் இமைக்கு ஐஷேடோ

கீழ் இமைக்கு ஐஷேடோ

ஸ்மோக்கி ஐ மேக்கப்பிற்கு பிறகு கீழ் இமைக்கு ஐ ஷேடோ பயன்படுத்தி கொள்ளுங்கள். அப்பொழுது தான் உங்கள் ஐ மேக்கப் முழுமை பெறும். இதைச் செய்யாமல் பார்ட்டிக்கு செல்லாதீர்கள். மறக்காமல் செய்யுங்கள் உங்கள் கண்கள் பேசும்.

கேட் ஜ மேக்கப்

கேட் ஜ மேக்கப்

பூனைக் கண்களால் உங்கள் பார்ட்னரை மயக்குவது எளிது. எனவே அவருடன் செல்வதற்கு முன் ஐ லைனர் கொண்டு கேட் ஐ மேக்கப் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் கண்களுக்கு மேலும் வசீகரம் செய்யும்.

கலர்டு ஐ லைனர்

கலர்டு ஐ லைனர்

கலர்டு ஐ லைனர் தான் இப்பொழுது புகழ் பெற்றது. காரணம் உங்கள் நிறத்திற்கு, உங்கள் முகத்திற்கு தகுந்த மாதிரி ஐ லைனரை தீட்டிக் கொள்ளலாம். இது உங்களுக்கு ஒரு வித்தியாசமான லுக்கை கொடுக்கும்.

MOST READ: லீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா? கண்ட்ரோல் பண்ண முடியலயா? இத செய்ங்க போதும்...

மஸ்காரா

மஸ்காரா

இறுதியில் மஸ்காரா போட்டு மயக்க மறந்து விடாதீர்கள். இந்த மஸ்காரா உங்கள் இமை முடிகளை அழகாக்குவதோடு அதை உயர்த்தவும் பயன்படுகிறது. எனவே இமை முடிகளை தூக்கி மஸ்காரா போட்டு செல்லும் போது உங்கள் கண்கள் அந்த இரவிலும் மின்னலடிக்கும்.

இந்த டிப்ஸ்கள் கண்டிப்பா உங்களுக்கு பலனுள்ளதாக இருக்கும். இனி தயக்கம் இல்லாமல் இரவு விருந்திற்கு செல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Make-Up Tutorial For Night Out

Got big plans tonight? Whether it's the weekend or a special occasion, you need to look your best, right? Most of us get confused about what is the right way to do make-up when getting ready for a night out.
Story first published: Monday, August 19, 2019, 11:07 [IST]
Desktop Bottom Promotion