For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாட்டூ போட்டுக்கணும்னு ஆசையா? அதுக்கு முன்னாடி இத செய்யணும்...

நீங்க முதன் முதலில் டாட்டூ குத்த போறீங்களா? அப்போ இதெல்லாம் நியாபகம் வச்சிக்கோங்க, ஈஸியா இருக்கும். அது பற்றிய தகவல் தான் இந்த கட்டுரை.

|

இப்பொழுது எல்லாம் பெண்கள் முதல் ஆண்கள் வரை தங்களுக்கு விருப்பமான படங்கள், நபர்களின் பெயர்கள், டிசைன் இவற்றை பச்சை குத்திக் கொள்வதையே பேஷனாக நினைக்கிறார்கள். டாட்டூ மோகம் இன்றைய இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஏன் சினிமா செலிபிரிட்டிகள் கூட இதைத் தான் விரும்புகிறார்கள். தங்கள் உடம்பில் இதை குத்திக் கொள்வதை அழகாக நினைக்கிறார்கள்.

Tattoo

ஆனால் நீங்கள் முதன் முதலாக டாட்டூ குத்தப் போறீங்கள் என்றால் நாங்கள் சொல்லும் டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இந்த டாட்டூ போடப்படுவதை பற்றி நீங்கள் சில விஷயங்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது. சரியான இடத்தில் சரியான நபரால் சரியாக போடப்படா விட்டால் தழும்பு வந்து விடும். எனவே அதனால் தான் உங்களுக்கு முன்னெச்சரிக்கையாக சில டிப்ஸ்களை இங்கே வழங்க உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இது உங்கள் முடிவா?

இது உங்கள் முடிவா?

டாட்டூ போடப்படுவதற்கு முன் ஒரு முறைக்கு பல முறை யோசித்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த டாட்டூ உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கப் போகிறது. எனவே நன்றாக யோசித்து விட்டு டாட்டூ போடுங்கள். உங்கள் முடிவு தெளிவாக இருந்தால் நல்லது.

MOST READ: இந்த ராசிக்காரர் இன்னைக்கு பிரபலமான நபரை சந்திக்கப்போறாரு... நீங்களும் இதே ராசி தானா?

டிசைன் செலக்ட் பண்ண நேரம் எடுத்து கொள்ளுங்கள்

டிசைன் செலக்ட் பண்ண நேரம் எடுத்து கொள்ளுங்கள்

முதன் முதலில் டாட்டூ டிசைன் செலக்ட் பண்ணுவது எல்லாருக்கும் குழப்பமான ஒன்றாக இருக்கும். எனவே நன்றாக சிறிது நேரம் யோசித்து இதைச் செய்யுங்கள். உங்கள் மனதுக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் டிசைன் போட்ட பிறகு அதை உங்கள் வாழ்நாள் முழுவதும் அழிக்க இயலாது. அப்புறம் வருந்தி பயனில்லை. எனவே சிறிது நேரம் எடுத்துக் கொள்வது நல்லது.

சிறிய டிசைனில் தொடங்குங்கள்

சிறிய டிசைனில் தொடங்குங்கள்

முதன் முதலாக டாட்டூ போடப்படும் போது சிறிய டிசைனை தேர்ந்தெடுப்பது நல்லது. பிறகு வேண்டும் என்றால் கூட நீங்கள் வேற டிசைனையும் போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் பெரிய டிசைன் போடும் போது நிறைய நேரம் பிடிக்க வாய்ப்புள்ளது.

நல்ல வாக்கியம்

நல்ல வாக்கியம்

சரி டாட்டூ டிசைன் நீங்கள் செலக்ட் செய்து விட்டீர்கள். அதனால் என்ன பயன்? இந்த டாட்டூ உங்கள் உடலோடு ஒட்டுக் கொண்டு உங்களுடன் எப்பொழுதும் இருக்கப் போகிறது. அதை பார்க்கும் போதெல்லாம் அதைப் பற்றிய நியாபகமும் உங்களுக்கு வரும். எனவே அதில் நல்ல வாக்கியங்கள் அல்லது நல்ல விஷயங்களை டாட்டூ செய்துக் கொண்டால் உங்கள் மனம் அதற்கேற்றார் போல் நடக்க ஆரம்பித்து விடும். அடுத்து எந்த இடத்தில் குத்த வேண்டும் என்பதையும் தீர்மானித்து கொள்ளுங்கள்.

MOST READ: ஆசை ஆசையாய் இப்படி முகத்தை மாற்றிக்கொண்ட மனிதன்... காரணம் தெரிஞ்சா சிரிப்பீங்க...

வலியை தாங்க தயாராகுங்கள்

வலியை தாங்க தயாராகுங்கள்

இந்த டாட்டூவை குத்த ஊசியைத் தான் பயன்படுத்துவார்கள். எனவே இது சருமத்தை நுழைக்கும் போது வலி உண்டாகும். சில நிமிடங்கள் வலி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். பிறகு வலி அந்தளவுக்கு தெரியாது. நீங்கள் முதன் முதலில் டாட்டூ குத்த போகும் நபராக இருந்தால் வலியை தாங்க உங்களை தயார் படுத்தி கொள்ளுங்கள்.

டாட்டூக்கான சரியான இடம்

டாட்டூக்கான சரியான இடம்

நீங்கள் டாட்டூ குத்த முடிவெடுத்து விட்டால் அதற்கு சரியான ஷாப்பை நாடிச் செல்லுங்கள். அவர்கள் டாட்டூ குத்த பயன்படுத்தும் உபகரணங்கள், கருவிகள் எல்லாம் சுத்தமாக வைத்திருக்கிறார்களா என்பதை ஆராய்ந்து கொள்ளுங்கள்.

MOST READ: ஸ்டீம் அயர்ன்பாக்ஸ் கறை போகவே மாட்டேங்குதா? இதோ இந்த சிம்பிள் ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

இது குறித்து நீங்கள் அதிகமாக கவலைப்படுவதோ அல்லது மன அழுத்தத்தில் ஈடுபடவோ வேண்டாம். முதன் முதலில் டாட்டூ குத்த போறீங்க என்றால் டாட்டூ கலைஞர்களிடம் இது குறித்து ஆலோசனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கும் பயம் கொஞ்சம் குறையும். என்னங்க நீங்களும் ரெடி ஆகிட்டிங்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Should Know Before Getting Your First Tattoo

So you have finally decided to go for it. After contemplating it so many times you're finally getting your first tattoo. Tattooing has suddenly become the new trend and it fascinates us so much that we also want to hop on this latest trend.
Desktop Bottom Promotion