For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

4 நாளில் இந்த கொடூரமான பாதவெடிப்பை கூட சரிசெய்யும் இரண்டு பொருள்கள் இவைதான்...

பெண்கள் சந்திக்க கூடிய முக்கிய பிரச்சனை இந்த பாத வெடிப்பு. இது பாத வெடிப்பை கெடுப்பதோடு தீராத வலியையும் தருகிறது. எனவே இதை எளிதா சரி செய்ய இந்த இரண்டு பொருட்கள் கையில் இருந்தால் போதும். கற்றாழை ஜெல் ம

|

நாம் பாதங்களை அழகாக வைக்க வேண்டும் என்று நினைத்தாலே அழகு நிலையம் செல்ல வேண்டும் என்று தான் நினைப்போம். அதிலும் வீட்டிலுள்ள தாய்மார்களுக்கு அதற்கு எல்லாம் நேரமும் கிடைப்பதில்லை. பெடிக்யூர், மெனிக்யூர் போன்று நிறைய காசுகளை செலவு பண்ண வேண்டியிருக்கும். இப்படி அழகு நிலையம் சென்று தான் பெடிக்யூர் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Cracked Heels

வீட்டில் இருந்த படியே நீங்கள் பாதங்களை ரிலாக்ஸ் செய்வது, மசாஜ், இயற்கை பொருட்களைக் கொண்டு பெடிக்யூர் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம். இது உங்கள் பாதங்களை புதுப்பித்து பாத வெடிப்பை போக்குகிறது. இதை வெறும் மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே போதும் உங்கள் பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாத வெடிப்பு

பாத வெடிப்பு

இப்படி வீட்டிலேயே பாத வெடிப்பை சரி செய்வது செலவு குறைந்த வழி மட்டுமில்லாமல் பயனளிக்க கூடியது. பெண்கள் சந்திக்க கூடிய முக்கிய பிரச்சனை இந்த பாத வெடிப்பு. இது பாத வெடிப்பை கெடுப்பதோடு தீராத வலியையும் தருகிறது. எனவே இதை எளிதா சரி செய்ய இந்த இரண்டு பொருட்கள் கையில் இருந்தால் போதும். கற்றாழை ஜெல் மற்றும் லெமன் இரண்டும் பாத வெடிப்பை போக்கு வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

MOST READ: மூக்குல இந்த மூலிகை சாறை விட்டா கோமாவுல இருக்கறவங்கள கூட பிழைக்க வெக்க முடியுமாம்

கற்றாழை ஜெல் மற்றும் லெமன் கலவை

கற்றாழை ஜெல் மற்றும் லெமன் கலவை

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்

1/2 லெமன்

1 டீ ஸ்பூன் டீ ட்ரி ஆயில்

வெதுவெதுப்பான நீர்

1 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர்

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

ஒரு சிறிய பக்கெட்டில் நிறைய வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு போட்டு எடுத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது இந்த நீரில் உங்கள் பாதங்களை வைத்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

MOST READ: ஆஃப் பாயில் சாப்பிட்டதால் எட்டு வயது சிறுமிக்கு மூளை முழுக்க புழு... அடக்கொடுமையே!

எப்படி வேலை செய்யும்?

எப்படி வேலை செய்யும்?

இப்பொழுது உப்பு உங்கள் பாத வெடிப்பை சரியாக்க ஆரம்பித்து விடும்.

பாதங்களில் உள்ள இறந்து செல்களை நீக்கி, பாதங்களை மென்மையாக்கும். குதிகால்களும் மென்மையாகும்

எப்படி ஸ்கிரப் செய்ய வேண்டும்?

எப்படி ஸ்கிரப் செய்ய வேண்டும்?

சில நிமிடங்கள் கழித்து பாதங்களை எடுத்து ஸ்க்ரப் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும்.

5 நிமிடங்கள் கழித்து சுத்தமான துண்டை கொண்டு பாதங்களை துடைத்து விடுங்கள்.

MOST READ: ஆண்மையை பலமடங்கு அதிகமாக்கும் சித்தரத்தை... எப்படி எந்த அளவு சாப்பிடணும்?

இன்னொரு முறை

இன்னொரு முறை

மற்றொரு பக்கெட்டை எடுத்து அதில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி கொள்ளுங்கள். பாதங்கள் மூழ்கும் அளவு இருந்தால் போதும்.

அதில் கொஞ்சம் கற்றாழை ஜெல், லெமன் சேர்த்து கலக்குங்கள்.

டீ ட்ரி ஆயில், ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கலக்கவும்

இப்பொழுது இந்த கலவையில் பாதங்களை வைத்து 20-25 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள்.

பிறகு ஒரு மென்மையான துண்டை எடுத்து பாதங்களை துடைத்து கொள்ளுங்கள்

இறுதியாக மாய்ஸ்சரைசர் க்ரீம் அப்ளே செய்யுங்கள்.

இந்த கற்றாழை மற்றும் லெமன் நீர் பாதங்களில் உள்ள பாத வெடிப்பை போக்கி பட்டு போன்ற மென்மையான பாதங்களை தருகிறது. அப்புறம் என்ன உங்கள் பாதங்களும் பேசும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aloe Vera & Lemon Foot Soak to Treat Cracked Heels At Home

Cracked heels can be a cosmetic problem as well as a severe underlying issue. It is, therefore, very essential to treat cracked heels immediately as soon as you notice them. But what is it that can help and relax your tired, sore, and cracked feet muscles? The answer is pretty simple. Give your feet a soothing soak using aloe vera & lemon.it give soft and smooth feet.
Story first published: Thursday, March 7, 2019, 11:06 [IST]
Desktop Bottom Promotion