கருவளையம் சங்கடப்படத்துகிறதா?... கவலையவிடுங்க... இத கடைபிடிங்க...

Posted By: vijaya kumar
Subscribe to Boldsky

கருவளையம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அனைவரும் எதிர்கொள்ளும் சவாலான சிக்கலாகும். பாலின வேறுபாடு இல்லாமல் இது அனைவரையும் தொந்தரவு செய்கிறது மற்றும் அது நம் நம்பிக்கையை தகர்கிறது. கருவளையம் பெரும்பாலும் பரம்பரை நோயாக கருதப்படுகிறது, சிலருக்கு வயது ஆகும் போது இது ஏற்படுகிறது. கருவளையம் என்பது நம்முடைய தோற்றப்பொலிவை இழக்கச் செய்து, நம்முடைய தன்னம்பிக்கையையே குழைத்துவிடும். அன அழுத்தத்தால் வரும் கருவளையத்தைவிட, கருவளையத்தால் வரும் மனஅழுத்தம் மிகப்பெரியதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம்

காரணம்

கருவளையம் தூக்கம் இன்மை , அதிகம் புகை பிடித்தல் , தவறான உணவுமுறை , சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்ற பல காரணங்களால் இது தோன்றக்கூடும்.

எனினும், சரியான பராமரிப்புடன், நிரந்தரமாக கருவளையத்தை அகற்றுவது சாத்தியமாகும்.

வேதிப்பொருள்கள்

வேதிப்பொருள்கள்

ஒரே நாளில், ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்குள் கருவலயத்தில் இருந்து விடுதலை என்கிற அளவில் கருவளையத்தை அகற்றுவதாக கூறப்படும் பல ஒப்பனை பொருட்கள் உள்ளன. ஆனால், அவை நமது உடலை பாதிக்கும் பல வேதிப்பொருள்களைக் கொண்டிருக்கின்றன என்பதால் அதன் நம்பகத்தன்மை மிகவும் ஆபத்தானது.

எனவே, இது போன்ற சிக்கல்களைக் கையாளுவதற்கு இயற்கையான மருந்துகளைப் பயன்படுத்துவது எப்பொழுதும் சிறந்தது.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மை கொண்டது, இது தோலுக்கு அழகையும் பொலிவையும் தரவல்லது. ஒரு புதிய கற்றாழை இலையை வெட்டி அதில் உள்ள ஜெல்லை வெளியே எடுத்து கசக்கி. அல்லது இயற்கையாக தயாரிக்கப்பட்ட கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். உங்கள் கண்களின் கீழ் இந்த ஜெல்லை தடவி , மெதுவாக அதை மசாஜ் செய்து, 10-15 நிமிடங்களுக்கு அதை விட்டு விடுங்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பருத்தி துணி கொண்டு அதை துடைக்கவும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

பச்சை நிற தேநீர் பைகள் உங்கள் கண்கள் கீழ் உள்ள கருவலயங்களை குறைக்க உதவுகிறது, அது உங்கள் கண்களுக்கு புத்துணர்வு ஊட்டி கருவலயங்களை போக்குகிறது

இரண்டு தேநீர் பைகளை தண்ணீரில் முக்கி , அரைமணிநேரம் குளிரூட்டியல் குளிரூட்டுங்கள் பிறகு அந்த தேநீர் பைகளை கண்களின் மேல் பதினைந்து நிமிடங்கள் வைக்கவும் பின்பு முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவவும் . இது போன்று தினசரி ஒரு முறை செய்து வந்தால் கருவளையம் குணமாகும் .

தேன்

தேன்

தேன் தோலுக்கு பொலிவையும் நல்ல ஊட்டத்தையும் தரவல்லது தேனில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் எந்த நேரத்திலும் கருவளையத்தை குறைக்க உதவும்.

கண்களின் கீழ் ஆர்கானிக் தேனை தடவி 20 நிமிடங்களுக்கு அதை விட்டு விடுங்கள். பிறகு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி காயவிடுங்கள். விரைவாக குணமாக ஒருநாளைக்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் உள்ள பிரகாசமான முகவர்கள் இருண்ட தோலை மிருதுவக்க உதவும்.

உருளைக்கிழங்கு கண்களின் முரட்டுத்தன்மையைக் குறைக்கும், இதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். உருளைக்கிழங்கை எடுத்து ஒரு மணிநேரம் குளிரூட்டவும் . பின்பு அதை உரித்து சாறுஎடுக்கவும் . அந்த சாற்றை பஞ்சை கொண்டு உங்கள் கண்களின் கீழ் தடவவும். தடவியபின் ஓர் இரவு முழுவது விட்டுவிடவும். பின்பு காலையில் சூடான நீரில் கழுவவும். இந்த முறையால் உங்களுக்கு மிகச்சிறப்பான பலன்கள் கிடைக்கும்

பால்

பால்

பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் தோலை ஈரப்படுத்த உதவுகிறது. எனவே, இது கண்களின் கருவளையத்தையும் மற்றும் புழுக்கத்தையும் குறைக்க உதவுகிறது.

குளிர்ந்த பாலை பருத்தி திண்டு கொண்டு உங்கள் கண்களுக்கு கீழ் வைத்து 15 நிமிடங்கள் அதை விட்டு விடவும். வேகமான மற்றும் சிறந்த முடிவுகளுக்கு நீங்கள் தினமும் இதை இரண்டு அல்லது மூன்று முறை பின்பற்றலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை பழச்சாறு வைட்டமின் சி கொண்டிருப்பதை அறிந்திருக்கிறோம், இது தோலை பிரகாசிக்க உதவுகிறது, இது கருவளையங்களை நீக்கவல்லது

ஒரு பருத்தி துணியை பயன்படுத்தி உங்கள் கண்கள் கீழ் சில எலுமிச்சை சாற்றை தடவவேண்டும். இதை 10 நிமிடம் விட்டுவிட்டு சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். காலையிலும் இரவிலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் இதை மீண்டும் மீண்டும் செய்யலாம். உங்கள் தோல் வறண்ட நிலையில் இருப்பதால், சாற்றை நீக்கிய பின்னர் சில மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.

புதினா இலைகள்

புதினா இலைகள்

புதினா இலைகளில் வைட்டமின் சி உள்ளது, இது கருவலயங்களை அகற்ற உதவுகிறது.மற்றும் உங்கள் தோலை ஆரோக்கியமாக பாதுகாக்கும் . கை நிறைய புதினா இலைகளை எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்து வைத்த பசையை உங்கள் கண்களின் கீழ் தடவவும்

சுமார் 10 நிமிடங்கள் கழித்து அதை குளிர்ந்த நீரில் கழுவவும். ஒவ்வொரு இரவும் நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் இதை செய்யுங்கள்.

மஞ்சள்

மஞ்சள்

இது இயற்கையிலேயே தோலை பிரகாசிக்கும் தன்மையை கொண்டுள்ளது . இது மந்தமான மற்றும் இருண்ட தோலை குறைக்க உதவும். 1/4கரண்டி மஞ்சளுடன் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலக்கவும். நன்கு கலந்து அவற்றை உங்கள் கீழ்-கண் பகுதியில் பயன்படுத்துங்கள். சாதாரண தண்ணீரில் 10 நிமிடங்களுக்கு பிறகு அதை கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு ஒரு வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை இதை மீண்டும் மீண்டும் செய்யவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Worried Of Dark Circles? Here Are Some Natural Ways To Treat Them

Dark circles is an issue which is faced by most of us out there, isn't it? Irrespective of the gender, dark circles equally bothers everyone, since it affects our confidence in the way we look.