For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பனிகாலம் ஆரம்பிச்சிடுச்சு... இப்படி பாலம் பாலமா வெடிக்கும் பாதத்துக்கு சிம்பிளா என்ன பண்ணலாம்?

வறட்சியான மற்றும் வெடிப்பு கொண்ட கால் பாதங்களைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை. வலி உண்டாகும் நேரங்களில் மட்டும் அதைப்பற்றிய கவலை தொற்றிக் கொள்கிறது.

|

பெண்கள் தங்களை அழகாக காண்பித்துக் கொள்ள எப்போதும் விரும்புவார்கள். அவர்கள் அழகில் ஒரு குறை ஏற்பட்டால் அதனை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

home remedies for cracked heels in this winter season

பெண்களின் அழகை கெடுக்கும் ஒரு விஷயம் பாத வெடிப்பு. உடலின் மேல் சரியான அக்கறை எடுத்துக் கொள்ளாத போது இந்த நிலை ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதங்கள்

பாதங்கள்

பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் பாதங்களில் உள்ள தோல் வறண்டு காணப்படும். இந்த வறட்சியால் தோலில் வெடிப்பு ஏற்படுகிறது. ஈரப்பதம் குறைபாடு, அதிகரித்த மாசு, எக்சிமா, நீரிழிவு, தைராய்டு, சொரியாசிஸ் போன்ற மருத்துவ பிரச்சனைகள் வறண்ட சருமம் மற்றும் வெடிப்புகள் நிறைந்த பாதங்களைத் தருகிறது.

கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு கீழ்கண்ட சில வீட்டு வைத்தியங்களை கடைபிடித்தால் உங்கள் பாதங்கள் மிருதுவாகும்.

MOST READ: இந்த ராசிக்காரர்கள் எங்க போனாலும் அங்க ஒரே பஞ்சாயத்துதான்... இது உங்க ராசி இல்லயே?

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் பாதங்களில் உள்ள வறட்சியைப் போக்கி, நீர்ச்சத்து கொண்டதாக மாற்றும். அதோடு கிளிசரினும் பன்னீரும் சேரும்போது, பாதங்கள் மிருதுவாகும்.

ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ளவும். அந்த நீரில் 10 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். மேலும் அந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் கிளிசரின் மற்றும் ஒரு ஸ்பூன் பன்னீர் சேர்த்துக் கொள்ளவும். இவைகள் சேர்ந்த நீரில் 15-20 நிமிடங்கள் உங்கள் பாதங்களை ஊற வைக்கவும். படிகக்கல் அல்லது ஸ்கரப்பர் பயன்படுத்தி உங்கள் பாதங்களைத் தேய்க்கவும். பிறகு, ஒரு ஸ்பூன் கிளிசரின் மற்றும் ஒரு ஸ்பூன் பன்னீர் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாதங்களில் தடவவும். தூங்கும்போது இதை தடவிக் கொள்ளுதல் நல்லது. இது கொஞ்சம் பிசுபிசு தன்மையுடன் இருப்பதால் சாக்ஸ் கூட அணிந்து கொள்ளலாம்.

வெஜிடபிள் ஆயில்

வெஜிடபிள் ஆயில்

உங்கள் பாதங்களைச் சுத்தமாக கழுவி ஒரு துணியால் துடைத்துக் கொள்ளவும். பிறகு உங்கள் பாதங்களில் ஒரு லேயர் வெஜிடபிள் எண்ணெய்யை தடவவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணிந்து இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். காலையில் கால்களைக் கழுவவும். இரவு உறங்கச் செல்வதற்கு முன் தினமும் இதனைச் செய்து வரலாம். ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட இந்த ஆயிலில் உள்ள கொழுப்பு பாத வெடிப்பை சரிசெய்து பளபளப்பாக வைத்திருக்கச் செய்கிறது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் மற்றும் அவகாடோவை ஒன்றாக மசித்துக் கொள்ளவும். இந்த கலவையை பாதங்களில் வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவவும். உங்கள் பாதங்கள் மென்மையாக மாறும் வரை தினமும் இதனைச் செய்து வரலாம். வாழைப்பழம் ஒரு சிறந்த மாயச்ச்சரைசர் . இது பாத சருமத்தை மென்மையாக மாற்றுகிறது.

வாஸ்லின்

வாஸ்லின்

வெதுவெதுப்பான நீரில் கால்களை 20 நிமிடம் ஊற வைத்து கழுவிக் கொள்ளவும். பிறகு கால்களை நன்றாக துடைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் வாசலினுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை பாதங்களில் தடவவும். சருமம் இந்த கலவையை உறிஞ்சிக் கொள்ளும்வரை இதனைத் தடவவும். தடவி முடித்ததும், கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்ளவும். இரவு முழுதும் அப்படியே விட்டு, மறுநாள் காலை கழுவவும். சாக்ஸ் அணிவதால் உடலின் சூடு முழுவதும் ஈர்க்கப்படுகிறது. இது பாத வறட்சியைப் போக்கி, மென்மையாக்கும்.

MOST READ: சிசேரியனுக்கு பிறகு சுகப்பிரசவம் நிஜமாவே சாத்தியமா? உண்மை என்னன்னு இங்க பாருங்க தெரியும்...

மெழுகு

மெழுகு

பாராஃப்பின் மெழுகுடன் சிறிது கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் வாணலியில் வைத்து மெழுகு உருகும் வரை சூடாக்கவும். இந்த கலவையை நன்றாக ஆற வைக்கவும். இரவு உறங்கச் செல்வதற்கு முன், இந்த கலவையை உங்கள் பாதங்களில் தடவவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணியவும். மறுநாள் காலையில் நன்றாக கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இரவில் உறங்குவதற்கு முன் இதனை செய்யலாம். பாராஃப்பின் மெழுகு சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.

தேன்

தேன்

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 4 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில் உங்களுடைய பாதங்களை 20 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு மென்மையாக பாதங்களை ஸ்க்ரப் செய்யவும். தேன் ஒரு இயற்கையான கிருமி நாசினியாக இருப்பதால் இவை பாத வெடிப்புகள் வேகமாக சரியாகும்.

அரிசி மாவு

அரிசி மாவு

இரண்டு ஸ்பூன் அரிசி மாவுடன், சில துளிகள் தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பாதங்கள் மிகவும் வறண்டு வெடிப்புகள் அதிகமாக இருந்தால் இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம். இது உங்கள் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வரலாம்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

காட்டனில் சிறிதளவு ஆலிவ் ஆயிலை எடுத்து வெடிப்புகள் உள்ள பாதத்தில் தடவவும். பிறகு பாதங்களை மென்மையாக மசாஜ் செய்யுங்கள். பிறகு கால்களில் சாக்ஸ் அணிந்து ஒரு மணி நேரம் கழித்து கால்களை கழுவவும். தினமும் இதனை செய்து வரலாம்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

பாதங்களில் நல்லெண்ணெய்யை தடவுங்கள். எண்ணெய் பாத சருமத்தில் உறிஞ்சும் வரை மென்மையாக மசாஜ் செய்யவும். தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இதை செய்து வரலாம். நல்லெண்ணெய் உங்களுடைய சருமத்துக்கு புத்துணர்ச்சியும் ஈரப்பதமும் கொடுக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

உங்கள் பாதங்களில் தாராளமாக தேங்காய் எண்ணெய்யை தடவுங்கள். தடவிய பின் கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். காலையில் வழக்கம் போல் கழுவிக் கொள்ளுங்கள். தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் விரைவில் உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்பு மறைந்து விடும். தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது.

MOST READ: இந்த ரூன் மந்திர எழுத்தில் ஒன்றை தேர்ந்தெடுங்க... உங்களுக்கான மறைமுக ரகசிய செய்தியை தெரிஞ்சிக்கோங்க.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

ஒரு டப்பில் தண்ணீரை வைத்து அதில் சிறிதளவு பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.

பேக்கிங் சோடா கரைந்தவுடன் உங்கள் பாதங்களை அந்த நீரில் ஊறவைக்கவும்.

20 நிமிடங்கள் கழித்து கால்களை ஸ்கிரப்பரால் மென்மையாக ஸ்க்ரப் செய்யவும்.

பிறகு சுத்தமான குளிர்ந்த நீரில் கால்களைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஒரு டப்பில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்துக் கொள்ளவும். இந்த நீரில் 15 நிமிடங்கள் கால்களை ஊற வைக்கவும். பிறகு பாதங்களை மென்மையாக மசாஜ் செய்வதால் இறந்த செல்கள் வெளியேறுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதனை செய்து வரலாம்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

ஒரு டப் தண்ணீரில் அரை கப் எப்சம் உப்பை கலந்து கொள்ளவும். உங்கள் பாதங்களை அந்த நீரில் 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு கால் பாதங்களை மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். இறந்த செல்கள் வெளியேறியவுடன் கால்களை சுத்தமாக கழுவவும்.

கற்றாழை

கற்றாழை

வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு கால்களைத் துடைத்து நன்றாக காய வைத்துக் கொள்ளவும். கற்றாழை ஜெல்லை கால் பாதங்களில் தாராளமாக தடவவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணிந்து இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். நான்கு முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து இதனை செய்து வரலாம். நல்ல மாற்றம் கிடைக்கும் வரை இதனை தொடர்ந்து செய்யலாம்.

MOST READ: கண்கள் துடிப்பதை சாதாரணமா எடுத்துக்காதீங்க... அது எதோட அறிகுறின்னு தெரியுமா?

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ காப்சியூலில் உள்ள எண்ணெய்யை பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவவும். பின்பு விரல்களால் ஒரு நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். வைட்டமின் ஈ ஆயில் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைக் கொடுத்து புத்துணர்வையும் தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

home remedies for cracked heels in this winter season

Dry/cracked feet are a sign of lack of attention towards your body and one of the worst nightmares for most women.
Story first published: Tuesday, November 20, 2018, 13:02 [IST]
Desktop Bottom Promotion