For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

வெல்லம் வெறுமனே இனிப்பு சுவையுடைய ஒரு உணவுப் பொருள் மட்டுமல்ல. அதை அழகுக்காகவும் எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

|

வெல்லம் ஒரு இனிப்பு சுவை கொண்ட உணவுப் பொருள். இதில் பல்வேறு ஊட்டச்சத்துகள் மற்றும் அன்டி ஆக்சிடென்ட்கள் அடங்கியுள்ளன. இதனால் வயது முதிர்வை உண்டாக்கும் ப்ரீ ரேடிகல் என்னும் கூறுகளுடன் போராடி வயது முதிர்வை தாமதப்படுத்தும் தன்மை வெல்லத்திற்கு உண்டு.

Beauty Benefits Of Jaggery

கருந்திட்டுக்கள் மற்றும் கொப்பளங்களைக் கூட வெல்லம் பயன்படுத்தி விரட்டி அடிக்கலாம். மேலும் வெல்லத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து தலைமுடி சுருளுவதை தடுத்து உங்கள் பின்னலை வலிமையாக மாற்ற உதவுகிறது. ஆகவே வெல்லம் நமது தினசரி அழகு குறிப்புகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை இந்த பதிவில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பளபளக்கும் சருமத்திற்கு வெல்லம்

பளபளக்கும் சருமத்திற்கு வெல்லம்

வெல்லத்தில் உள்ள க்ளைகொலிக் அமிலம் சருமத்தின் பொலிவை மேம்படுத்த உதவுகிறது.

வெல்லத்தூள் 2 ஸ்பூன்

தேன் 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு சில துளிகள்

வெல்லத்தை தூளாக்கி அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். முகத்தை தண்ணீரால் சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு தயாரித்து வைக்கப்பட்ட இந்த விழுதை முகத்தில் தடவவும். உங்கள் கழுத்து பகுதியிலும் தடவலாம். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

கட்டிகள் மற்றும் பருக்களுக்கு வெல்லம்

கட்டிகள் மற்றும் பருக்களுக்கு வெல்லம்

கட்டிகள் மற்றும் பருக்களால் உண்டான தழும்பு உங்கள் முகத்தில் இருந்து எளிதில் மறைவதில்லை. இத்தகைய கடினமான தழும்புகளையும் வெல்லம் பயன்படுத்தி எளிதில் போக்கலாம்.

வெல்லத்தூள் 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு சில துளிகள்

வெல்லத்தூள் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தேவைபட்டால் எலுமிச்சை சாற்றுக்கு மாற்றாக சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம். பிறகு தழும்புகள் உள்ள இடத்தில் இந்த விழுதை தடவவும். சில நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். விரைந்து நிவாரணம் பெற தினமும் ஒரு முறை இந்த விழுதை தழும்பில் தடவலாம்.

சுருக்கங்களைப் போக்க வெல்லம்

சுருக்கங்களைப் போக்க வெல்லம்

வெல்லத்தில் உள்ள க்ளைகொலிக் அமிலம், சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்தி சருமத்தில் உண்டாகும் கோடுகள் மற்றும் சுருக்கங்களுக்கு சிகிச்சை அளிக்கிறது.

வெல்லத்தூள் ஒரு ஸ்பூன்

ப்ளக் டீ ஒரு ஸ்பூன்

திராட்சை சாறு ஒரு ஸ்பூன்

மஞ்சள் ஒரு சிட்டிகை

பன்னீர் சில துளிகள்

ப்ளக் டீயை நீரில் கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் வெல்லத்தூள், திராட்சை சாறு, ப்ளக் டீ சாறு, மஞ்சள் ஒரு சிட்டிகை, சில துளிகள் பன்னீர் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். கட்டிகள் கரையும் வரை இந்த கலவையை நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி, இருபது நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு தண்ணீரால் முகத்தைக் கழுவவும்.

சரும நிறமிழப்பை சரிசெய்ய

சரும நிறமிழப்பை சரிசெய்ய

உங்கள் முகத்தில் தோன்றும் கருதிட்டுக்கள், கொப்பளங்கள் மற்றும் சரும நிறமிழப்பை சரி செய்ய நீங்கள் இனி வெல்லத்தை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

வெல்லத்தூள் ஒரு ஸ்பூன்

தக்காளி சாறுஒரு ஸ்பூன்

எலுமிச்சை சாறு சில துளிகள்

மஞ்சள் ஒரு சிட்டிகை

ஒரு கிண்ணத்தில் வெல்லத்தூளை சேர்க்கவும். அதில் தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி காய விடவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவவும்.

கூந்தலுக்கு வெல்லம்

கூந்தலுக்கு வெல்லம்

வெல்லத்தில் உள்ள வைட்டமின் சி, தலைமுடியை வலிமையாக்கி, மென்மையாகவும் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.

வெல்லத்தூள் இரண்டு ஸ்பூன்

முல்தானி முட்டி ஒரு ஸ்பூன்

தயிர் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்

வெல்லத்தூள் மற்றும் தயிர், முல்தானி முட்டி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி மென்மையாக சுழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும். ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பின்னர், 15 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். பிறகு தண்ணீரால் தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பின்பற்றுவதால் விரைந்த பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: beauty how to
English summary

Did You Know These Beauty Benefits Of Jaggery?

Let us see how can we can use jaggery in our daily beauty routine.
Story first published: Tuesday, August 14, 2018, 13:52 [IST]
Desktop Bottom Promotion