வீட்டிலேயே செய்யலாம் சுத்தமான ரோஸ் வாட்டர்!

Written By:
Subscribe to Boldsky

ரோஜாவை போன்ற அழகிய, பொலிவான முகம் வேண்டும் என்றால் நீங்கள் ரோஸ் வாட்டரை ஒரு அழகு சாதன பொருளாக பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டர் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. உங்களுக்கு வெளியில் வாங்கும் ரோஸ் வாட்டர் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.

ஏனெனில், பலதரப்பட்ட தரங்களில் ரோஸ் வாட்டர்கள், பல விலைகளிலும் கிடைக்கின்றன. இதில் எதை வாங்கலாம் என யோசித்து முடிவெடுப்பது சற்று சிரமமானது தான். ஆனால் நீங்கள் மிக எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் முகத்திற்கு பொலிவு உண்டாக, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த, முல்தாணி மட்டி, சந்தனம் போன்ற பல வகை பொடிகளுடன் சேர்த்து பேஸ் பேக் போட மிகவும் உதவியாக உள்ளது.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

1. 50 ரோஜா பூக்கள்

2. 2 லிட்டர் தண்ணீர்

நீங்கள் பன்னீர் செய்வதற்காக தேர்ந்தெடுக்கும் ரோஜாப்பூ நாட்டு ரோஜாப்பூவாகவும், பிங்க் நிறப்பூவாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

செய்முறை :

செய்முறை :

நாட்டு ரோஜாப்பூக்களின் இதள்களை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் ரோஜா இதள்களை போட வேண்டும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். ரோஜா இதள்களின் நிறம் மறைந்து, தண்ணீர் பிங்க் நிறமாக மாற வேண்டும். தண்ணீர் அரை லிட்டர் அளவிற்கு வரும் வரை நன்றாக பாத்திரத்தை மூடி வைத்து காய்ச்ச வேண்டும்.

பாதுகாக்கும் முறை:

பாதுகாக்கும் முறை:

ரோஸ் வாட்டர் தயாரானதும், அதனை நன்றாக ஆற வைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, அதனை பிரிட்ஜில் வைத்து ஒரு வருடம் வரை உபயோகிக்கலாம்.

பயன்கள்

பயன்கள்

  1. ரோஸ் வாட்டர் சருமத்தில் பி.எச் அளவை சரியாக பராமரித்து, அதிக எண்ணெய் பசையை போக்குகிறது.
  2. முகத்திற்கு பிரஷ் ஆன தோற்றத்தை கொடுக்கிறது.
  3. ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள புண்கள் மற்றும் தழும்புகளை மறைய செய்கிறது.
தலைமுடிக்கு...

தலைமுடிக்கு...

ரோஸ்வாட்டர் உடன் சம அளவு கிளிசரினை எடுத்துக்கொண்டு, அதனை பஞ்சின் உதவியுடன் முடியின் வேர்கால்களுக்கு போட்டு 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் அதை அப்படியே விட்டுவிட வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசினால் முடி மிருதுவாகவும் அரிப்புகள் இல்லாமலும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to prepare rose water at home and uses

How to prepare rose water at home and it's uses
Story first published: Friday, August 4, 2017, 18:30 [IST]