நகங்கள் உடையாமல் நன்றாக வளர வேண்டுமா? இதோ சிம்பிள் வழிகள்!!

Posted By: Aashika
Subscribe to Boldsky

 நம்மைப்பற்றிய நல்ல அபிப்பிராயத்தை நம் உடைகளில் மட்டுமல்ல நகங்களிலும் இருக்கிறது. நகத்தை நாம் பராமரிக்கும் விதத்தை வைத்தே நம்முடைய சுத்தத்தை கணக்கிட்டு விடுவார்கள் எதிராளிகள்.

ஒருவருடன் கை குலுக்கும்போது உடைந்த மஞ்சள் நிறத்திலும் அதிலும் அழுக்கு சேர்ந்து இருந்தால் எப்படியிருக்கும் உங்களைப் பற்றிய தவறான பிம்பம் தான் மேலோங்கும். இதனை தவிர்க்க தினமும் உங்களுடன் உடலை, சருமத்தை, தலைமுடியை பராமரிப்பது போல நகத்தையும் பராமரித்தாக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெயில் டிப்ஸ் -1 :

நெயில் டிப்ஸ் -1 :

வினிகர் :

நெயில் பாலிஷ் போட்டு சில மணி நேரங்களிலேயே உதிர்ந்து திட்டு திட்டாக மாறிவிடுகிறதா? அப்போ வினிகர் பயன்படுத்துங்கள். காட்டனை பந்தாக உருட்டிக் கொண்டு அதை வினிகரில் முக்கியெடுத்துக்கொள்ளுங்கள். அதனைக் கொண்டு முதலில் உங்கள் விரல் நகங்களில் தேய்த்துவிட்டு பின்னர் நெயில் பாலிஷ் போட்டால் நெயில் பாலிஷ் விரைவில் உதிராது.

உப்பு :

நகங்கள் உடைந்து கொண்டேயிருந்தால், ஒரு லிட்டர் தண்ணீரில் ஐந்து ஸ்பூன் கல் உப்பைக் கலந்து 15 நிமிடங்கள் வரை கையை அதில் வைத்திருங்கள். பின்னர் வெளியே எடுத்து நெயில் சாஃப்ட்னர் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

மஞ்சள் நிற நகங்கள் :

நகங்களில் மஞ்சள் நிறமிருந்தால், தண்ணீரில் சமோமைல் ( அரோமா பொருட்கள் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும்) இரண்டு ஸ்பூன் சேர்த்து இருபது நிமிடங்கள் வரை நன்றாக காய்ச்சவும். சூடு குறைந்ததும் அதில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அதில் நகத்தை வைத்து எடுக்க வேண்டும்.

வாரத்திற்கு மூன்று முறை இப்படிச் செய்யலாம். இத்துடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ளலாம்.

நெயில் டிப்ஸ் -2 :

நெயில் டிப்ஸ் -2 :

ரோஸ் வாட்டர் :

40மிலி ரோஸ் வாட்டருடன் 10 கிராம் க்ளிசரின் மற்றும் 50 மிலி ஹைட்ரஜன் பெராக்சைட் கலந்து அதனை பஞ்சால் ஒத்தியெடுத்து நகத்தை தேய்த்திடுங்கள். இது நகத்திற்கு நல்ல பொலிவை கொடுத்திடும்.

க்ரீம் :

சருமப்பகுதியை விட நகங்களை சுற்றியிருக்கும் பகுதி 10 மடங்கு நுண்ணியது. எளிதில் காயம் ஏற்படவும், நோய்த்தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு. இதனை தவிர்க்க நெயில் க்ரீம் பயன்படுத்தலாம்.

ஜெலட்டீன் :

வேகமாக நகம் வளர வேண்டும் என்கிறவர்கள் ஜெலட்டினை பயன்படுத்தலாம், இவை நகம் வளர்வதற்கு உறுதுணையாய் இருக்கும்.

நெயில் டிப்ஸ் -3 :

நெயில் டிப்ஸ் -3 :

முட்டை :

நகம் அடிக்கடி உடைந்தால் அது கால்சியம் குறைபாடாகவும் இருக்கலாம். இதனை தவிர்க்க கால்சியம் நிறைந்த உணவுகளை நிறைய எடுத்துக்கொள்ளுங்கள். தினமும் காலை ஓர் வேக வைத்த முட்டை சாப்பிடலாம்.

செயற்கை நகம் :

செயற்கை நகங்கள் பெரும்பாலும் மெல்லியதாகவே இருக்கும் என்பதால் சீக்கிரம் உடைந்திடும் அதன் அழுத்தம். உண்மையான நகங்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும். அதனால் செயற்கை நகங்கள் பயன்படுத்துவதை பெரும்பாலும் தவிர்த்திடுங்கள்.

நெயில் பாலிஷ் ரிமூவர் :

நெயில் பாலிஷ் ரிமூவர் பயன்படுத்துவதில் கவனம் தேவை. விலை மலிவாக இருக்கிறதென கண்டதையும் பயன்படுத்தினால் உங்கள் நகங்களுக்குத் தான் கேடு. நெயில் பாலிஷ் ரிமூவர் வாங்கும் போது அது அசிடோன் ஃப்ரீ யா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

க்ளவுஸ் அணிந்து கொள்ளுங்கள் :

க்ளீனிங் வேலைகளில் ஈடுபடுவோர் க்ளவுஸ் அணிந்து கொள்ளலாம். வெவ்வேறு சோப்கள், அதிக கெமிக்கல் உள்ள சோப்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

நெயில் டிப்ஸ்-4 :

நெயில் டிப்ஸ்-4 :

நெயில் பாலிஷ் :

நெயில் பாலிஷ் நகங்களில் போடுவதற்கு முன்னால் அதனை குலுக்க கூடாது. மாறாக அதனை உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்து உருட்டினால் போதும்.

பேஸ் கோட் :

நெயில் பாலிஷ் போடுவதற்கு முன்னால் கண்டிப்பாக பேஸ் கோட் போட வேண்டும். இது போடும் நெயில் பாலிஷ்களால் நகங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும்.

தின் லேயர் :

நெயில் பாலிஷ் போடும் போது இரண்டு தின் லேயர் அப்ளை செய்தாலே போதும். திக் லேயர் போட்டால் அது காய நேரமெடுப்பதுடன் விரைந்து உதிர்ந்திடும்.

ட்ரையர் :

நெயில் பாலிஷ் போட்டவுடன் சிலர் விரைந்து காய்வதற்கு ட்ரையர் பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறானது. அப்படிச் செய்யக்கூடாது.

நெயில் டிப்ஸ் -5 :

நெயில் டிப்ஸ் -5 :

டாப் கோட் :

நெயில் பாலிஷ் போட்ட பின்னர் டாப் கோட் போட்டுக் கொள்ளுங்கள். இது க்ளாசி லுக் கொடுப்பதுடன் நகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும்.

டயட் :

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது இது. ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மிகவும் முக்கியம். நகங்களை வைத்தே உங்களுக்கு இருக்கும் நோய்களை அறிந்திட முடியும். அதனால் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடித்திருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: beauty, tips
English summary

How to care your nail with home ingredients

Nail is one of the way to check our health. Here some tips to care your nails
Story first published: Thursday, July 20, 2017, 13:49 [IST]
Subscribe Newsletter