கிளியோபாட்ரா பற்றி பலரும் அறியாத ஐந்து இரகசியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

எகிப்தியர்கள் அழகை பற்றி ஆச்சரியப்பட ஏதுமில்லை. அவர்கள் அழகின் இலச்சினையாக காணப்படுபவர்கள். பண்டைய காலத்திலேயே அழகு சாதன பொருட்கள், வாசனை திரவியங்கள், அழகு பராமரிப்பு சடங்குகள் பின்பற்றி வந்தவர்கள் எகிப்தியர்கள்

ஏறத்தாழ ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே அழகை மேம்படுத்த மாயாஜால யுக்திகள் பயன்படுதியவர்களாக காணப்பட்டவர்கள். அனைத்திற்கும் மேல் உலகின் பேரழகியாக இன்றளவும் வர்ணிக்கப்படும் கிளியோபாட்ரா வாழ்ந்த இடம் வேறு எப்படி இருந்திருக்கும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை!

சர்க்கரை!

இப்போது வாக்ஸிங் பயன்படுத்துவது போல, அந்த காலத்தில் கிளியோபாட்ரா உடல் சருமத்தில் இருக்கும் முடிகளை அகற்ற இயற்கை சர்க்கரையை பயன்படுத்தியுள்ளார். இதனால் சருமம் மிருதுவாகவும், இனிமையாகவும் பராமரித்து வந்துள்ளார்.

பால் குளியல்!

பால் குளியல்!

அகழ்வாராய்ச்சி ஆதாரங்களும் இதை நிரூபணம் செய்துள்ளன. ஆம்! கிளியோபாட்ரா தனது சருமத்தை பேணிக்காக்க பால் குளியல் எடுத்து வந்துள்ளார். இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தை பளபளப்பாக ஜொலிக்கவும், பொலிவுடன் வைத்துக் கொள்ளவும் உதவியுள்ளது.

ஆமணக்கு, எள் எண்ணெய்!

ஆமணக்கு, எள் எண்ணெய்!

எகிப்தியர்கள் தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள பல இயற்கை வழிகளை கையாண்டு வந்துள்ளனர். அதில் ஒன்று தான் சுருக்கங்கள் இல்லாத சருமம். இதற்கு அவர்கள் ஆமணக்கு, எள்ளு போன்ற பொருட்களாக தயாரிக்கப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது பல வருடங்கள் சுருக்கம் அற்ற சருமம் பெற ஒரு மேஜிக் ரிசல்ட் கொடுக்கும் வகையில் இருந்தது என்றும் அறியப்படுகிறது.

கடல் உப்பு!

கடல் உப்பு!

கிளியோபாட்ராவின் மற்றுமொரு அழகு இரகசியமாக இருந்தது கடல் உப்பு. இதை இயற்கை சிகிச்சை முறையில் எகிப்தியர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் மினரல்கள் தூய்மை கேடுகளை குறைக்க உதவியுள்ளது.

தேன் மற்றும் பால்!

தேன் மற்றும் பால்!

எகிப்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிகம் சேர்த்துக் கொண்ட பொருள் தேன். இதன் மூலப்பொருள் அழகு, ஆரோக்கியம் என இருவகையிலும் நன்மைகள் அளிப்பதை அப்போதே அறிந்து வைத்திருந்தனர் எகிப்தியர்கள். தேனை பாலுடன் சேர்த்து அதை ஃபேஸியல் மாஸ்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.

மை!

மை!

கண்களுக்கு மை இடுவது நாம் அறிந்தது தான். ஆனால் அதை கண்டுபிடித்தவர்கள் எகிப்தியர்கள். பெண்களின் அழகில் முக்கிய பங்குவகிப்பது அவர்களது கண்கள். அந்த கண்களை அழகாக வைத்துக் கொள்ள எகிப்தியர்கள் மை இடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beauty Secrets of Cleopatra!

Beauty Product Inventions by Egyptians and Beauty Secrets of Cleopatra!
Subscribe Newsletter