For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடைக்காலத்துல மட்டும் முடி அதிகமா கொட்டுதா? அப்ப இதான் காரணமா இருக்கும்…

தினந்தோறும் தலைக்கு குளித்தால் போதும், முடி சுத்தமாகிவிடும் என்ற எண்ணம் தான் பெரும்பாலானோருக்கு உள்ளது. ஆனால் தலை முடியை சுத்தம் செய்வதிலும் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.

|

நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சிறுவயது முதலே அனைவரும் படித்து வருகிறோம். மோசமான சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை அறிந்த நாம், தனிப்பட்ட சுகாதாரத்தை பேண வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். இருக்கும் இடத்தை கூட்டி, துடைத்து சுத்தம் செய்யலாம், தனிப்பட்ட சுகாதாரம் என்றால், தினந்தோறும் குளிக்கின்றோம் இது போதாதா? என்று வினவாதீர்கள்.

Summer Hair Cleaning Tips To Prevent Dandruff and Hair Fall In The Hot Weather

தனிப்பட்ட சுகாதாரம் என்பது உச்சி முதல் பாதம் வரை அனைத்து பகுதிகளின் சுத்தமாகும். ஒவ்வொரு உடல் பாகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் இன்றியமையாதது. இல்லையென்றால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அந்த வகையில் நாம் இப்போது, தலை முடி சுகாதாரத்தைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

MOST READ: வாய் துர்நாற்றம், சொத்தைப் பல் பிரச்சனை போகணுமா? அப்ப தினமும் 2 நிமிடம் இப்படி பிரஷ் பண்ணுங்க...

தினந்தோறும் தலைக்கு குளித்தால் போதும், முடி சுத்தமாகிவிடும் என்ற எண்ணம் தான் பெரும்பாலானோருக்கு உள்ளது. ஆனால் தலை முடியை சுத்தம் செய்வதிலும் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. அதிலும், கோடைக்காலத்தில் தலை முடி பராமரிப்பு மிக மிக அவசியமான ஒன்று. கோடையில் முடியை கவனிக்க மறந்தால், தலை முடியை மறந்து விட வேண்டியது தான். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், கோடையில் முடி பராமரிப்பின் அவசியம் குறித்தும், முடி பராமரிப்பின் பிற தகவல்கள் குறித்தும் தான் நாம் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோடையில் தலை முடியை அலசுவது எப்படி?

கோடையில் தலை முடியை அலசுவது எப்படி?

* முதலில் தலைக்கு குளிப்புதற்கு முன்பு சீப்பு கொண்டு, முடியை சிக்கில்லாமல் நன்கு சீவிய பிறகு தான் முடியை நனைக்க வேண்டும்.

* தேவையான அளவு ஷாம்புவை கையில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது நீர் ஊற்றி கலந்து, பின்னர் தான் தலையில் தடவி, விரல்களை கொண்டு தேய்க்க வேண்டும்.

* அடுத்ததாக, விரல்களால் ஸ்கால்ப்பில் மெதுவாக மசாஜ் செய்யவும். நுரை அதிகம் வேண்டுமென்றால் சிறிது நீர் தெளித்துக் கொள்ளலாம். ஷாம்புவை கூந்தல் முழுவதும் நன்கு தேய்க்க வேண்டும்.

* வேறு ஏதேனும் சிறந்த சுத்திகரிப்பான் அல்லது எண்ணெய் இருந்தால் அதற்கும் இதே முறையில் தொடர்ந்து செய்யவும்.

* இப்போது தலையை நீர் ஊற்றி நன்கு அலசிடவும். அடுத்ததாக, 20 கிராம் அளவிற்கு கண்டிஷ்னர் எடுத்து கூந்தலில் தேய்க்கவும். கண்டிஷ்னர் தடவும் போது ஸ்கால்ப்பில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.

* கூந்தல் முழுவதிலும் கண்டிஷ்னர் நன்கு தடவியப் பிறகு, 5 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

* பின்னர், தண்ணீர் கொண்டு முடியை அலசிட வேண்டும்.

* இறுதியில் மிருதுவான துண்டு கொண்டு கூந்தலில் இருந்து ஈரத்தை உலர்த்த பயன்படுத்துவதே சிறந்தது.

கோடையில் கூந்தலை பராமரிக்க உதவும் முக்கிய குறிப்புகள்:

கோடையில் கூந்தலை பராமரிக்க உதவும் முக்கிய குறிப்புகள்:

குறிப்பு #1

தலைக்கு ஷாம்பு போடும் போது, ஸ்கால்ப்பில் இருக்கும் அழுக்குகளை நீக்க மசாஜ் செய்ய மறந்திட வேண்டாம். குறைந்தது 2 முதல் 3 நிமிடங்களாவது மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது தவறியும் நகங்களை பயன்படுத்தி விடாதீர்கள்.

குறிப்பு #2

குறிப்பு #2

தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி மெதுவாக மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும். நேரம் ஆகிவிட்டது என்று வேகமாக தேய்த்தால், முடி சுத்தமாவதற்கு பதிலாக வலுவிழந்துவிடும்.

குறிப்பு #3

குறிப்பு #3

அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், இருமல், தும்மல் அல்லது அசுத்தமான பகுதி ஏதாவதை தொட நேரலாம். அடிக்கடி கையானது முடிக்கு தான் செல்லும். நீங்களே நினைக்கா விட்டாலும் கூட கை முடிக்கு செல்வதை தவிர்க்க முடியாது. எனவே, தூசுக்கள் போன்றவை கூந்தலை அண்டாமல் இருக்க அடிக்கடி கைகளை கழுவுங்கள்.

குறிப்பு #4

குறிப்பு #4

மிதமான கெமிக்கல் உள்ள ஷாம்புக்களை மட்டுமே கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் அதிகம் நிறைந்த ஷாம்பு கூந்தலை சேதப்படுத்தக்கூடும். மேலும், அவை கூந்தலை வறட்சி அடையாமலும், துளைகளை அடைக்காமலும் பார்த்துக் கொள்ளும். முக்கியமாக, கூந்தலை சுத்தப்படுத்துவதற்கு ஷாம்பு சிறந்தது.

குறிப்பு #5

குறிப்பு #5

கண்டிஷ்னர் போடுவதை ஒருபோதும் தவிர்த்திட வேண்டாம். ஏனென்றால், மிருதுவான கூந்தல் மற்றும் சிக்குகள் அற்ற கூந்தலை பெறவும், கூந்தல் உடைவதை தவிர்க்கவும் கண்டிஷனர் மிகவும் உதவக்கூடியது.

குறிப்பு #6

குறிப்பு #6

கூந்தலை அலசிய பின்னர், காற்றில் காய வைத்தால் மட்டுமே கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது சொந்த செலவில் முடியை சேதப்படுத்திக் கொள்வதாகும்.

குறிப்பு #7

குறிப்பு #7

கோடைக்காலங்களில் வாரத்திற்கு 2-3 முறை கூந்தலை அலச வேண்டியது அவசியம். மேற்கூறிய முறைகளின் படி கூந்தலை அலசி வந்தால், கோடையிலும் முடி சுத்தமாக இருக்கும்.

குறிப்பு #8

குறிப்பு #8

வெயிலில் செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. அப்படியும் தவிர்க்க முடியவில்லை என்றால், வெயிலில் வெளியே சென்றாலோ அல்லது நீண்ட நேரம் வெயிலில் வேலை இருந்தாலோ, தலையை ஒரு துணி கொண்டு மறைத்து கட்டிக் கொள்வது நல்லது. ஏனென்றால், நேரடி சூரிய ஒளி மற்றும் காற்று தூசு போன்றவை தலை முடிகளின் மீது படும் போது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Summer Hair Cleaning Tips To Prevent Dandruff and Hair Fall In The Hot Weather

Here are some summer hair cleaning tips to prevent dandruff and hair fall in hot weather. Read on...
Desktop Bottom Promotion