For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா? அடர்த்தியாக்க இத யூஸ் பண்ணுங்க...

ஆண்களை விட, பெண்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்து இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. உண்மையில், கருஞ்சீரகம் முடி உதிர்வு பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வினை பெற்றிட உதவும்.

|

பெண்கள் என்றாலே அழகு தான். அதனால் தான் அழகு பராமரிப்பிற்கென்று பெண்கள் நிறைய விஷயங்களை செய்கின்றனர். அவற்றில் மிக முக்கியமான ஒன்று கூந்தல். அழகான, மிருதுவான, நீளமான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்பது தான் அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். மாறுபட்ட சூழல், சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றின் காரணமாக ஏராளமான கூந்தல் பிரச்சனைகளை பெண்கள், ஆண்கள் என அனைவருமே சந்திக்க நேரிடுகிறது. சரி, கூந்தல் உதிர்வு பிரச்சனையை சரி செய்யவே முடியாதா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்பது தான் பதிலாக இருக்கும். ஆங்கில மருத்துவங்களை முயற்சிப்பதற்கு முன்னர் நம் வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்தே கூந்தலை பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சியுங்கள்.

Kalonji Hair Mask For Stronger And Voluminous Hair

வீட்டு வைத்தியம் மூலம் அநேக பிரச்சனைகளுக்கு தீர்வினை கண்டிட முடியும். பொதுவாகவே, கூந்தல் என்று இருந்தால் உதிரத் தான் செய்யும். அதாவது, நாளொன்றிற்கு 50 முதல் 100 முடிகள் வரை உதிர்வது சாதாரணம். தோல் மற்றும் சிகிச்சைக்கான பத்திரிக்கையில் ஆய்வு ஒன்றின் முடிவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்களை விட, பெண்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்து இருப்பதாகவும், அதைத் தடுக்க பெண்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. உண்மையில், கருஞ்சீரகம் முடி உதிர்வு பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வினை பெற்றிட உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி உதிர்வு பிரச்சகருஞ்சீரகம் எந்த வகையில் தலைமுடிக்கு நன்மை அளிக்கிறது?னையை சரிசெய்யும்

முடி உதிர்வு பிரச்சகருஞ்சீரகம் எந்த வகையில் தலைமுடிக்கு நன்மை அளிக்கிறது?னையை சரிசெய்யும்

முடி உதிர்வு பிரச்சனையை சரிசெய்யும்

முடி உதிர்வு பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்றால் ஆரோக்கியமற்ற ஸ்கால்ப் தான். அவை, தலையின் நுண்ணறைகளை சேதப்படுத்தி முடியின் வேர்க்கால்களை வலுவிழக்க செய்து, முடி உதிர்விற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. உலகம் முழுவதிலும், கருஞ்சீரகத்தை சரும பராமரிப்பிற்காக பயன்படுத்தப்டுகிறது. குறிப்பாக கூந்தலுக்கான எண்ணெய் தயாரிப்பில் கருஞ்சீரகம் முக்கிய இடம் வகிக்கிறது. ட்ராபிகல் மெடிசன் எனும் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவில், கருஞ்சீரகம் தலையில் நுண்ணறைகளுக்கு ஊட்டமளித்து, முடியின் வேர்க்கால்களுக்கு வலு சேர்த்து, முடி உதிர்வினை குறைத்திடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொடுகு தொல்லையை விரட்டிடும்

பொடுகு தொல்லையை விரட்டிடும்

பொடுகு தொல்லை என்பது தலையில் ஏற்படக்கூடிய வறட்சியால் வரக்கூடியது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், அது உண்மையல்ல. எண்ணெய் பசை நிறைந்த கூந்தலில் பொடுகு தொல்லை உண்டாகக்கூடும். ஏனென்றால், அதிகப்படியான எண்ணெய் தான் தூசுக்களையும், மாசுக்களையும் இழுத்து தன்னுடன் சேர்த்து வைத்துக் கொள்ளும். அதனால், தலை சருமத்தில் அரிப்பு, சொறி போன்றவை ஏற்பட்டு, சிறுசிறு புண்கள் உண்டாகக்கூட வாய்ப்புள்ளது. ஆய்வு முடிவு ஒன்றில், கருஞ்சீரகத்தில் ஆன்டிபாக்டீரியல், ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் காயங்களை குணப்படுத்தும் பண்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

முடி வளர்ச்சியை தூண்டும்

முடி வளர்ச்சியை தூண்டும்

ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா அல்லது அலோபீசியா அரேட்டா போன்ற முடி சார்ந்த பிரச்சனைகள் உங்களது தலைமுடியை சேதப்படுத்தாது. ஆனால், உங்கள் நம்பிக்கை நிலையை அது பாதிக்கக்கூடும். நல்ல செய்தி என்னவென்றால், கருஞ்சீரக எண்ணெயில் நைஜெலோன் மற்றும் தைமோக்வினோன் இரண்டும் உள்ளன. இவை இரண்டும் அலோபீசியா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆண்டிஹிஸ்டமைன் ஆகும். அவை ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தி, தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கச் செய்யும்.

முடி வறட்சியைப் போக்கும்

முடி வறட்சியைப் போக்கும்

கருஞ்சீரகத்தில் உள்ள அமினோ அமிலம், தலை முடி பிரச்சனைகளில் ஓர் அற்புதத்தை நிகழ்த்தக்கூடியது. பொதுவாகவே, அவை ஸ்கால்ப்பில் ஈரப்பதத்தை தக்க வைத்து, முடியின் ஆரோக்கியதை மேம்படுத்தி, எவ்வித கூந்தல் பிரச்சனையும் ஏற்படாமல் பாதுகாத்திடும். கூந்தலை அலசுவதில் கருஞ்சீரகத்தை சேர்ப்பதன் மூலம், தேவையற்ற பண விரயத்தை இது தவிர்த்திட உதவும்.

மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், கருஞ்சீரகத்தை கூந்தலுக்கு பயன்படுத்துவதாக இருந்தால், எண்ணெய் தேய்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர், கூந்தலை அலசிடவும். இதன்மூலம், கூந்தல் அழகான மற்றும் மிருதுவாக காணப்படும்.

வீட்டிலேயே கருஞ்சீரக ஹேர் பேக் செய்வது எப்படி?

வீட்டிலேயே கருஞ்சீரக ஹேர் பேக் செய்வது எப்படி?

ஆரோக்கியமான கூந்தலை பெற்றிட வேண்டுமெனில், முறையாக கூந்தலுக்கு ஊட்டமளித்திட வேண்டும். அதற்கு இந்த கருஞ்சீரக ஹேர் பேக் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். வீட்டிலேயே சுலபமாக இந்த ஹேர் பேக்கை செய்துவிடலாம். வாருங்கள் இப்போது அதனை தெரிந்து கொள்வோம்...

தேவையானப் பொருட்கள்:

* விளக்கெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* கருஞ்சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

* கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் - 1

செய்முறை:

செய்முறை:

* முதலில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவு கருஞ்சீரகத்தை விளக்கெண்ணெயுடன் சேர்த்து மிதமாக சூடேற்றவும். சூடேற்றிய கருஞ்சீரக எண்ணெய் கலவையை ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு அப்படியே ஊற விடவும்.

* இப்போது, நறுக்கிய வெங்காயம், கற்றாழை ஜெல் மற்றும் விளக்கெண்ணெயுடன் ஊற வைத்த கருஞ்சீரகம் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

* இப்போது கருஞ்சீரக ஹேர் பேக் தயார்.

உபயோகிக்கும் முறை:

உபயோகிக்கும் முறை:

* தயார் செய்த கலவையை, ஸ்கால்ப் மற்றும் முடி முழுவதும் தேய்க்கவும்.

* 30 நிமிடங்களுக்கு அப்படியே ஊற விடவும்.

* பின்னர், மிதமான ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசிடவும்.

* வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து செய்து வர நல்ல முன்னேற்றத்தை நீங்களே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kalonji Hair Mask For Stronger And Voluminous Hair

Want to know how to prepare kalonji hair mask for stronger and voluminous hair? Read on...
Desktop Bottom Promotion