For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

25 வயதில் வழுக்கை என்பது சாதாரணமானதா?

அதிக மனஅழுத்தம் காரணமாக தலைமுடியின் வேர்க்கால்கள் சேதமடைந்து அலோபீசியா என்னும் தலைமுடி வழுக்கை தலைதூக்குகிறது. இதனால் ஆண்களுக்கு 25 வயதாகும்போது தலை முடி உதிரத் தொடங்குகிறது.

|

இரவில் நீண்ட நேரம் கண்விழித்து வேலை செய்வது என்பது பலருக்கும் இன்று சகஜமான ஒரு பழக்கமாகிவிட்டது. வேலை இல்லை என்றால் கூட சமூக வலைத்தளங்கள், அரட்டை என்று அதாவது ஒரு காரணத்திற்காக தூக்கத்தை ஒத்திப்போட்டு கண்விழிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களுக்கு உள்ளது. இதனால் மனஅழுத்தம் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது என்று ஒரு புறம் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

Is It Normal To Go Bald At The Age Of 25? Lets Find Out

இது மட்டுமா? நீண்ட நேரம் தொடர்ந்து வேலை செய்வதால் தலை முடி வழுக்கை ஏற்படுவதற்கு 200% வாய்ப்பு இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் உள்ளது. இதன் காரணம் என்ன தெரியுமா? அதிக மனஅழுத்தம் காரணமாக தலைமுடியின் வேர்க்கால்கள் சேதமடைந்து அலோபீசியா என்னும் தலைமுடி வழுக்கை தலைதூக்குகிறது. இதனால் ஆண்களுக்கு 25 வயதாகும்போது தலை முடி உதிரத் தொடங்குகிறது.

MOST READ: 30 வயதிலும் தமன்னா சிக்கென்று இருக்க இந்த பழக்கம் தான் காரணமாம்.. தெரியுமா?

சமீபத்தில் தென் கொரிய விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் 25 முதல் 59 வயதுக்குட்பட்ட 13,000 ஆண்களை ஆய்வு செய்தது. ஆய்வில் கலந்து கொண்டவர்களை விஞ்ஞானிகள் மூன்று குழுக்களாக பிரித்தனர். 7 நாட்களில் 40 மணி நேரம் பணியாற்றிய வழக்கமான தொழிலாளர்கள், 52 மணிநேரம் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் வாரத்தில் 52 மணி நேரத்திற்கும் மேலாக அதிக வேலை செய்த தொழிலாளர்கள் என்று அந்த குழுக்களை வகைப்படுத்தினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழுக்கைக்கான காரணிகள்

வழுக்கைக்கான காரணிகள்

வழுக்கை ஏற்படுவதற்கு பலவகைப்பட்ட காரணங்கள் இருக்கலாம்- இது வயதானதன் காரணமாக இருக்கலாம், அவசியத்தால் இருக்கலாம் அல்லது அது உங்கள் பாலினத்தின் காரணமாகவும் இருக்கலாம். பெண்களை விட ஆண்களுக்கு மிக வேகமாக வழுக்கை உண்டாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், அது உண்மை தான். ஆனால் பெண்கள்! நிம்மதியாக உணர வேண்டாம், ஏனெனில் இதற்கு எதிராக நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்று அர்த்தமல்ல! உங்களுக்கும் ஓரளவிற்கு இவற்றின் பாதிப்புகள் இருக்கிறது.

வயதாவதால் உண்டாகும் வழுக்கை

வயதாவதால் உண்டாகும் வழுக்கை

வழுக்கைக்கு வயதும் ஒரு காரணி என்பது உண்மை. ஆம், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துதல் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்ற பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. உங்கள் முடி உதிர்தலை முறையாகக் கவனிப்பதன் மூலம் அதாவது நிறைய கவனம் எடுத்துக் கொள்வதால் அவற்றைப் பாதுகாக்க முடியும் என்பதால் கவலைப்பட வேண்டாம். ஆனால் உங்கள் தலைமுடியின் வேர்க்கால்கள் இறந்தால், அது உங்களுக்கு நிரந்தர வழுக்கை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் உணவின் மீது கவனம் செலுத்துங்கள்

உங்கள் உணவின் மீது கவனம் செலுத்துங்கள்

புரதம் மற்றும் இரும்புச்சத்தின் குறைபாடு , முடி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக வேகமான முடி இழப்பு உண்டாகும். புலிமியா அல்லது அனோரெக்ஸியா நெர்வோசா மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாடு போன்ற உணவுக் கோளாறுகள் முடி உதிர்வதற்கு முக்கிய காரணியாக அறியப்படுகின்றன. ஆகவே இரும்பு மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எப்போதும் உட்கொள்வதற்கு அறிவுறுத்தப்படுகிறது.

வழுக்கைக்கு மருந்துகள் காரணமா?

வழுக்கைக்கு மருந்துகள் காரணமா?

சில நேரங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் முன்கூட்டிய வழுக்கைக்கு காரணமாக இருக்கலாம். வழுக்கை மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்துவதில் ஹீமோதெரபி மிகவும் பிரபலமானது. சில நோய்த்தொற்றுகள் உச்சந்தலையில் முடி உதிர்தல், ஸ்கார்லட் காய்ச்சல் மற்றும் டைபாய்டு காய்ச்சலை ஏற்படுத்துகின்றன.

பெண்கள் சரியான ஹேர்ஸ்டைலை பின்பற்ற வேண்டும்

பெண்கள் சரியான ஹேர்ஸ்டைலை பின்பற்ற வேண்டும்

உங்கள் முடி உதிர்விற்கு நீங்களே ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். குதிரைவால், இறுக்கமான பின்னல் போன்றவை முடிஉதிர்வை உண்டாக்கலாம். இறுக்கமான தலைமுடி காரணமாக உச்சந்தலையில் இரத்த ஓட்டம் தடைபடலாம், இதனால் முடி இழப்பு ஏற்படலாம். இவை போன்ற பாதிப்பு உங்களுக்கு இருந்தால் வேர்கால்களுக்கு அழுத்தம் தரக்கூடிய ஹேர்ஸ்டைலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்.

கருத்தடை மாத்திரைகள் மீது பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்

கருத்தடை மாத்திரைகள் மீது பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்

இளம் வயதில் அதிகமான அளவு கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது பெண்களுக்கு முடி இழப்பை உண்டாக்கும். பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியாவின் தொடக்கத்திற்கு வழிவகுக்கும். இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் ஒரு நிலை, இது பெண்களின் முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Normal To Go Bald At The Age Of 25? Let's Find Out

Is it normal to go bald at the age of 25? Let's find out.
Desktop Bottom Promotion